Marxist Tamil

Tuesday, November 15, 2005

பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா

பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா


குமார் ஷிராங்கர், கே. வரதராஜன்வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில்,  காலனியாதிக்கக் காலத்திலிருந்தே கோடிக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு இழைக்கப் பட்டிருக்கிற,  அநீதியைக் களைந்திட வகைசெய்யும் விதத்தில் பழங்குடியினர்  (வன உரிமைகள் அங்கீகார)ச் சட்டமுன்வடிவினை உரிய திருத்தங்களுடன்  கொண்டுவந்து, நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, வரும் நவம்பர் 18 அன்று நாடு முழுதும் அகில இந்திய பழங்குடியினர் தினம் அனுசரிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் பழங்குடியினர்  (வன உரிமைகள் அங்கீகார)ச் சட்டமுன்வடிவினை மேலும் காலதாமதம் எதுவும் செய்திடாமல் நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது தனது குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில், பழங்குடியினரின் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய வகையில், பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவற்றில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கூறப்பட்டிருக் கிறது. பிரதமர் தனது சுதந்திர தின உரையில் கூட இந்த உறுதிமொழி அமல்படுத்தப்படும் என்று உறுதி யளித்திருக்கிறார். ஆயினும்கூட, வனப்பகுதிகளில் உள்ள நிலப்பிரபுக்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, நாடாளுமன்றத்தின் சென்ற மாரிக்காலக் கூட்டத் தொடரில் இச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்படவில்லை. சமீபத்தில், பிரதமர் இச்சட்டமுன்வடிவு குறித்து ஆலோசனை செய்வதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டியபோது, சுற்றச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் ஒரு புதிய வரைவைத் தாக்கல் செய்தது. அதில் பழங்குடியினருக்கான உரிமைகள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவிற்குப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன.  சட்டமுன்வடிவில் செய்யப்பட வேண்டிய  திருத்தங்களைத் தெளிவாக்கியுள்ளன.
பழங்குடியினர் நிலை
நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் மொத்தம் 187 பழங்குடியினர் மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த  8 கோடியே 50 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.20 சதவீதமாகும்.  இவர்களில் ஆண்கள் 4 கோடியே 31 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 19 லட்சம் பேர்களாவர். தற்சமயம், ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத், இமாசலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பழங்குடியினர் பகுதிகள் என்று குறிப்பிட்ட சில பகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினரில் 5 கோடி பேர் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி சர்வேயின் மதிப்பீட்டின்படி இவர்களில் 47 சதவீதத்தினர் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் ஆவார்கள். சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்போர் 46 சதவீதத்தினர் என்றும் இவர்களில் 44 சதவீதத்தினர் விவசாய வேலைகளைச் செய்வதன் மூலமாகவும், மீதமுள்ள 2 சதவீதத்தினர் மட்டுமே விவசாயமற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த மாதிரி சர்வே மேலும் தெரிவிக்கிறது.
இவ்வாறு இவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது நிலமேயாகும். பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வேண்டும் என்றால், நிலச்சீர்திருத்தம் வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி  அரசாங்கமானது சுமார் 5 லட்சம் பழங்குடியினக் குடும்பத்தினருக்கு நிலச்சீர்திருத்தத்தின்மூலம் கையகப்படுத்திய உபரி நிலத்தை விநியோகம் செய்திருக்கிறது. அதேபோன்று, திரிபுரா மாநிலத்திலும், இடதுமுன்னணி அரசாங்கம் பழங்குடியினருக்கு கையகப்படுத்திய நிலமனைத்தையும் விநியோகித்திருக்கிறது.
பழங்குடியினரிடமிருந்து நிலம் பறிக்கப்படுதல்
அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைகள், பழங்குடியினர் நிலங்களை, பழங்குடியினரல்லாதார் வாங்குவதற்குத் தடை விதித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் இதுபோன்ற மாற்றல்களுக்குத் தடை விதித்திருக்கிறது. ஆயினும் கூட ஏராளமான இடங்களில் பழங்குடியினர் நிலங்களை பழங்குடியினரல்லாதோர் வாங்குவதென்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும் மத்திய அரசும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றிற்கு சேவகம் செய்ய விரும்புவதால், வன நிலங்களை அவற்றிற்குத் தாரை வார்க்க முன்வந்திருக்கின்றன. இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணைக்குத் திருத்தத்தைக் கொண்டுவரவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
ஆந்திராவில் இந்தியன் புகையிலை கம்பெனிக்கு (மிஸீபீவீணீஸீ ஜிஷீதீணீநீநீஷீ
சிஷீனீஜீணீஸீஹ்) இவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறது.  சட்டீஸ்கரில் ஜிண்டால்ஸ் நிறுவனமானது, தன்னுடைய உருக்காலைக்காக பல்வேறு பினாமி பரிவர்த்தனைகள் மூலமாக பழங்குடியினர் நிலங்களை அபகரித்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரூனேயில் சுற்றுலாத் திட்ட வளர்ச்சிக்கென்று கூறி 3760 ஏக்கர் பழங்குடியினருக்குச் சொந்தமான வன நிலங்கள்,  சஹாரா ஹவுசிங் லிமிடெட்டிற்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.   
பழங்குடியினரிடமிருந்து  அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடமே அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சுணக்கம், சட்டரீதியான ஓட்டைகள், கிராமப்புற பணமுதலைகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் இடையில் வஞ்சகமான லஞ்சக் கூட்டணி ஆகியவை காரணமாக இவ்வாறு  வனநிலங்கள் பழங்குடியினரிடமிருந்து பழங்குடியினரல் லாதார் கைகளுக்கு சட்டவிரோதமாக மாறுவதென்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஆதிவாசிகளின் நிலங்கள் - சுமார் 8 லட்சத்து 55 ஆயிரத்து 282 ஏக்கர் அபகரிக்கப்பட்டது தொடர்பாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 164 வழக்குகள் நடைபெற்றன. அவற்றில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 643 வழக்குகள் முடிவுற்றுவிட்டன. இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 297 வழக்குகளில் மட்டுமே பழங்குடியினருக்குப் பயன் அளிக்கும் விதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக் கிறது. பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் கிராமப்புற பணக்கார, பழங்குடியினரல்லாதாருக்கு ஆதரவாகவே வெளிவந்திருக்கிறது. இத்தகைய பழங்குடியினரல்லாத பண முதலைகள் இன்றும் 5 லட்சத்து 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய பழங்குடியினர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட பிரகடனம் வருமாறு:
‘‘ஆதிவாசிகள் நம் நாட்டின் காடுகளுடனும் அவற்றில் விளையும் உற்பத்திப் பொருட்களுடனும் காலம் காலமாக ஜீவனுள்ள தொடர்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள். அவற்றின் ஓர் அங்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் வனச் சட்டமும் தற்போது வந்திருக்கிற 1988ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமும் (திஷீக்ஷீமீst சிஷீஸீsமீக்ஷீஸ்ணீtவீஷீஸீ (கினீமீஸீபீனீமீஸீt) கிநீt, 1988) ஆதிவாசிகளை வனங்களில் அத்துமீறி நுழைந்தவர்கள் போலவும், உரிமையற்ற முறையில் தலையிடுபவர்கள் போலவும் சித்தரிக்கின்றன. காட்டுப் பகுதிகள் திடீரென்று காணாமல் போவதற்கும், அவற்றின் பசுமை குறைந்துகொண்டே செல்வதற்கும் பழங்குடியினர் எவ்விதத்திலும் காரணமல்ல. மாறாக, ஒப்பந்தக்காரர்கள் -மஃபியா கும்பல்கள் - வனத்துறை அதிகாரிகள் - ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டுக் கொள்ளையும், முதலாளித்துவ வளர்ச்சியின் சமூகச் சூழல் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத போக்குமே காரணங்களாகும்.’’
பழங்குடியினர், வனங்களில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.  காடுகளுடன், காடுகளில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களுடனும் தங்கள் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவர்கள். ஆனால், இவர்கள் காடுகளை ஆக்கிரமித்தவர்கள் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்படுகிறார்கள். நமது நாட்டின் வனச்சட்டங்கள் மற்றும் காட்டுவிலங்குகள் பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்துமே இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், விலங்குகளை வேட்டையாடுபவர்கள் என்றும் முத்திரை குத்துகின்றன. அவர்களை காடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆயினும், சில மாநில அரசுகள் பழங்குடியினரைப் பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1980 அக்டோபரில் வனப் (பாதுகாப்புச்) சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அது பழங்குடியினரை வனங்களிலிருந்து அப்புறப்படுத்துவதென்பது சற்றே குறைந்தது. பல தலைமுறைகளாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினருக்கு வன நிலங்களை ஒதுக்குவதற்கு இச்சட்டம் வகை செய்தது. ஆயினும் பலருடைய குடும்பத்தினர் காடுகளில் வசித்து வருவதைச் சரியாகத் தெரிவிக்க இயலாததால் அவர்கள் காடுகளில் தொடர்ந்து இருந்து வருவது  தொடர்பாக இன்றும் பிரச்சனை நீடிக்கிறது. 1995இல் உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளுக்கும் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து விரைந்து முடிவு காணுமாறு கட்டளையிட்டிருந்தது. ஆயினும் பல மாநில அரசுகளால் அதனை செய்திட முடியவில்லை. இதற்குள் பல பணமுதலைகள்  காடுகளை  வளைத்துப்போட்டுக் கொண்டு விட்டனர். இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம், காடுகளில் உள்ள அனைத்து  ‘‘ஆக்கிரமிப்பாளர்களையும்’’ அப்புறப்படுத்துமாறு ஆணை பிறப்பித் திருக்கிறது. இதிலும் அப்பாவி பழங்குடியின மக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாய் அவர்கள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தபோதிலும்கூட, ஆவணங்கள் எதையும் அவர்களால் தாக்கல் செய்ய முடியாத காரணத்தால், அதிகார வர்க்கத்தால் மிக எளிதாக அவர்கள் இம்ஷிக்கப்படுகிறார்கள். அப்பாவிகளான அவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் மிகவும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, புதிய 1980ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்புச்) சட்டத்தின்கீழ், வனப் பகுதிகளில் உள்ள பழங்குடியின ‘‘ஆக்கிரமிப்பாளர்கள்’’ வீடுகள் அனைத்தையும் அவர்களது உடைமைகளையும், அவர்கள் விளைவித்திருக்கும் பயிர்கள் உட்பட அனைத்தையும் அழித்திடுமாறு ஆணை பிறப்பித்தது.  மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் உள்ள இடது முன்னணி அரசாங்கங்கள் மத்திய அரசின் இந்தச் சுற்றறிக்கையை ஏற்க முடியாது என்று  உடனேயே மறுத்துவிட்டன. ஆனால் மற்ற மாநில அரசுகள் அதனை அப்படியே சிரமேற்கொண்டு, பழங்குடியின மக்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. அவர்களது வீடுகளையும், பயிர்களையும் அழித்தொழித்தன. பல மாநிலங்களில் பாதிப்புக்குள்ளான பழங்குடியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கீழ் அணிதிரண்டு, போராடி,  தங்கள் வீடுகளையும், பயிர்களையும் காப்பாற்றி வெற்றி பெற்றனர். 2004 பிப்ரவரி 5 அன்று, அரசாங்கம் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி ‘‘1993 டிசம்பர் 31 வரை இருந்து வரும் பழங்குடியினர்களின் உரிமைகள்’’ அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆயினும் 2004 பிப்ரவரி 23 அன்று உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது.  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்தத் தடையாணையை நீக்கறவு செய்திட நீதிமன்றத்தில் விண்ணப்பித் திருந்தாலும், வழக்கு நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்கள்
நாடு சுதந்திரம் பெற்றபின், காடுகளைச் சார்ந்த பகுதிகளில் தொழில்மயம் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கூறி சுமார் 15 சதவீத பழங்குடியினர் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இதுநாள்வரை எவ்விதமான மாற்று ஏற்பாடுகளோ, இழப்பீடுகளோ அல்லது வேலையோ வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப் படாமலிருப்பதற்கு என்ன என்ன இழிநடவடிக்கைகள் உண்டோ அவை அத்தனையும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மற்றும் இந்திய முதலாளிகள் கனிம வளங்கள் நிறைந்த காட்டு நிலங்களை மிகப் பெருமளவில் அபகரித்திருக்கிறார்கள். அந்த இடங்களில் காவல்துறையினரின் உதவியுடன் பழங்குடியினர் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தொடர்பாக சம்தா தீர்ப்புப் பின்பற்றப்படவில்லை. தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பழங்குடியினர் சுரண்டப் படுதலின் சில அம்சங்கள் இவைகளாகும்.
தாராயமயக் கொள்கைகளின் காரணமாக அரசுக்குச் சொந்தமான  விவசாய நிலங்கள் குறைந்தது மட்டுமல்ல, பழங்குடியினரும் தங்கள் நிலங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் உள்ள 187 பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்களின் மொத்த பூகோளப் பரப்பு  33.6 சதவீதமாகும்.  நாட்டின் மொத்த வனப் பகுதியில் 60 சதவீதம் இப்பகுதியில் இருக்கின்றன. வனத்தின் வளத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பழங்குடியினராவார்கள். இவர்களை வனங்களிலிருந்து வெளியேற்றுவ தென்பது, மனிதாபிமானமற்ற செயல்மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத் திற்கும் கேடு பயக்கும் நடவடிக்கையாகும்.
நாட்டில் மொத்தம் உள்ள வனப் பகுதி என்பது 6 கோடியே 80 லட்சம் ஹெக்டேர்களாகும்.  இதில் பழங்குடியினர் வசிப்பதென்பது வெறும் 2 சதவீத இடத்திலேயே. இவர்கள் அங்கு இருப்பதால் வனங்களின் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பங்கமும் வந்து விடாது. மாறாக, இவர்களை அங்கிருந்து அகற்ற மேற்கொள்ளும் எந்தவித நடவடிக்கையும் பழங்குடியினர் வாழ்க்கையிலும் மற்றும் அப்பகுதிகளிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை
மத்திய அரசு, ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக, வன நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பழங்குடியினரை வெளியேற்ற கருணையற்றமுறையில் காட்டுமிராண்டித்தனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒரிசா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 1224 ஹெக்டேர் நிலங்களை 17 சுரங்க நிறுவனங்கள் எடுத்துக்கொண்டிருப்பதை முறைப்படுத்தி இருக்கிறது. மாறாக, அதே ஒரிசா மாநிலத்தில் பழங்குடியினர் ‘‘ஆக்கிரமித்ததாகக்’’ கூறப்படும் மொத்த நிலப்பகுதியில் அவர்களுக்காக முறைப்படுத்தியிருப்பது வெறும் 29 ஹெக்டேர்கள் மட்டுமே.
இவ்வாறாக, பழங்குடியினருக்கு எதிரான அநீதி தொடர்கிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, 2005ஆம் ஆண்டு பழங்குடியினர்  சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, அதனை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்றுவதுதான்.
2005ஆம் ஆண்டு பழங்குடியினர் சட்டமுன்வடிவை நாடாளு மன்றத்தில் கொண்டு வரவிருப்பதாக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கும் அதே சமயத்தில், கீழ்க்கண்ட திருத்தங்களையும் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
செய்யப்பட வேண்டிய  திருத்தங்கள்
1. பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக 1980 அக்டோபர் 25  வரை ‘வனத்தில் இருந்தவர்களுக்கு மட்டும்’ என்கிற முறையில் கெடு தேதி (நீut-ஷீயீயீ பீணீtமீ) சட்ட முன்வடிவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அச்சட்ட முன்வடிவின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிக்கோளுக்கே நேர் விரோதமானது. இவ்வாறு கெடு தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும் தேதி வரை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் அனைவருக்கும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே கெடு தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும். 1980ஆம் ஆண்டு கெடு தேதி நீக்கப்படாவிட்டால், பழங்குடியினர் பெருவாரியான முறையில் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். இது பழங்குடியினர் வாழ்க்கையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, 1980ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்புச் சட்டம்) அதற்கேற்ற முறையில் திருத்தப்பட வேண்டும்.
அதே சமயத்தில், வனப்பகுதிகளில் பழங்குடியினரல்லாதார் பல்வேறு பினாமி பெயர்களில் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கெடு தேதி நிர்ணயிப்பதை அரசு ஜனநாயகமுறையில் முடிவு செய்ய வேண்டும். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பைக் (சென்சஸ்) கூட கெடு தேதியாக எடுத்துக் கொள்ளலாம்.
அநீதியான உச்சவரம்பு
2. மேலும் இச்சட்டமுன்வடிவில், ஒவ்வொரு பழங்குடியின குடும்பத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற நிலத்தின் அளவு 2.5 ஹெக்டேராக வரையறுக்கப் பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வமற்றது, அநீதியானது, பாகுபாடுமிக்கது. இது நிலத்தின் தன்மையையோ (ஹீuணீறீவீtஹ் ஷீயீ tலீமீ றீணீஸீபீ), அந்தப் பகுதியில் பெய்திடும் மழையின் அளவையோ, பயிர் முறையையோ (நீக்ஷீஷீஜீ ஜீணீttமீக்ஷீஸீ), சுற்றுச்சூழல் நிலைமைகளையோ அல்லது மண்ணியல் நிலைமைகளையோ (ரீமீஷீறீஷீரீவீநீணீறீ நீஷீஸீபீவீtவீஷீஸீs) கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.  பழங்குடியினரல்லாதோருக்கு நில உச்சவரம்பின் அளவு அதிகமான அளவில் இருக்கும் அதே சமயத்தில், பழங்குடியினருக்கு மட்டும் இப்படி 2.5 ஹெக்டேர் என்று நிர்ணயிப்பதற்கான அவசியம் என்ன? பழங்குடியினர் குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் கூட்டுக் குடும்பமாகவே,  தங்கள் நிலங்களில் கூட்டாகவே உழுதுண்டு வாழ்ந்து வருகிறார்கள். சில கூட்டுக்குடும்பத்தில் 15க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.  எனவே, 2.5 ஹெக்டேர் நிலஉச்சவரம்பை நீக்கிட வேண்டும், தற்சமயம் வனங்களில் உள்ள பழங்குடியினக் குடும்பத்தினர் அனைவருக்கும் நிலம் வழங்கப்பட்டு, முறைப்படுத்தப்பட வேண்டும்.
3. இந்தச் சட்டமுன்வடிவானது, பழங்குடியினருக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்கு, கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்கி அங்கீகரித்திருக்கிறது.  அத்தியாயம் 4ல் உள்ள வரைவு விதிகள் (ஞிக்ஷீணீயீt ஸிuறீமீs வீஸீ சிலீணீஜீtமீக்ஷீ மிக்ஷி), ‘‘கிராம சபை, கிராமப் பேரவையாக, கிராம மட்டத்தில்(நிக்ஷீணீனீணீ ஷிணீதீலீணீ sலீணீறீறீ தீமீ tலீமீ ஸ்வீறீறீணீரீமீ ணீssமீனீதீறீஹ் ... ணீt tலீமீ ஸ்வீறீறீணீரீமீ றீமீஸ்மீறீ) என்று கூறுகிறது. ஆனால், மலைகளில் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் வாழும் பழங்குடியினர் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கின்றனர்.  அவர்களுடைய கிராம சபைகளும் கூட பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டு கிராம சபைகளாக இருந்து வருகின்றன. பலரால் எளிதில் செல்லமுடியாத குக்கிராமங்களைக் (ஜீணீபீணீs - லீணீனீறீமீts) கூட அவைதான் அதிகாரவரம்பெல்லையைப் பெற்றிருக் கின்றன.  எனவே, கிராமம் என்பதற்குப் பதிலாக குக்கிராமம் என்று மாற்ற வேண்டும்.
4. தற்போது வனத்துறையின் கீழ் இருந்து வரும் நிலம் குறித்த எழுத்துபூர்வமான பதிவேடுகள் தவறுகள் நிறைந்தவை, சரியானவை என்று சொல்வதற்கில்லை, போதுமானவையுமல்ல. பழங்குடியினர் குடும்பங்கள் பல எவ்விதமான ஆவணச் சான்றுகளையும் தங்களுடன் வைத்திருக்கவில்லை. அட்டவணைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையமானது, மகாராஷ்ட்ரா  மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல அனைத்து  அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்திருக்கிறது.
மகாராஷ்ட்ர அரசு, வன நிலங்களை முறைப்படுத்துவதற்காக, உரிமைகோரும் பழங்குடியினக் குடும்பத்தினரிடமிருந்து ஓர் உறுதிவாக்குமூலம் (அபிடேவிட்) பெற்றுக்கொண்டு, நிலங்களை முறைப்படுத்தி வழங்கியிருக்கிறது. இதைப்போல்  இச்சட்டமுன்வடிவிலும் செய்திட வேண்டும்.
5. பழங்குடியினர் வைத்திருக்கும் நிலங்கள் அல்லது வனத்துறையால் இதற்குமுன் ஒதுக்கீடு செய்யப்பட்டு  பின்னர் வலுக்கட்டாயமாக வனத்துறையால் அல்லது வன வளர்ச்சி கார்ப்பரேஷனால்  பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள், அனைத்தும் இச்சட்டமுன்வடிவின் வரம்பிற்குள் வரவேண்டும்.
பழங்குடியின சமூகத்திற்கான சொத்துரிமைகள்
6. இச்சட்டமுன்வடிவில் 2(1)ஆவது பிரிவானது, வனப்பகுதிகளில் உள்ள  ‘‘பழங்குடியின சமூகத்திற்கான சொத்துரிமைகள்’’ குறித்து வரையறை செய்கிறது.
7. இச்சட்டமுன்வடிவின் 15ஆவது பிரிவானது, இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால், மற்ற சட்டங்களுடன் மோதல் இல்லாதபடி, திருத்தப்பட வேண்டியிருக்கிறது.
8, ‘‘ஒரு நபருக்கு அளிக்கப்படும் வன உரிமையானது, அவர் ஏதேனும் குற்றம் புரிந்தார் என்றால் ரத்து செய்யப்படும்’’ என்று ஒரு தண்டனைப் பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் கடுமையான ஒன்றாகும்.  நம் நாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும், அதிகாரிகள் எவருக்கும், குற்றம் புரிந்தவர்களின் உரிமைகளைப் பறித்திட, அதிகாரம் அளித்திடவில்லை. அப்படியிருக்கும்போது, பழங்குடியினர் மட்டும் இப்படி ஏன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்? எனவே, இந்த ஷரத்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்க நம் நாட்டில் ஏராளமான சட்டங்கள் ஏற்கனவே உண்டு.
9. காடுகளில் வசிப்பவர்கள் தொடர்பாக, மாநில அரசுகளின் பொறுப்புகளையும் வரையறுத்து புதிய சட்டப் பிரிவுகள் கீழ்க்கண்ட ஷரத்துக்களுடன் இயற்றப்பட வேண்டும். வனங்களில் வசிக்கும் பழங்குடியினரை, பன்னாட்டு நிறுவனங்களின் பினாமி பரிவர்த்தனைகளிலிருந்தும், பெரும் நிலப்பிரபுக்களிடமிருந்தும், நிலங்களை அபகரிக்கும் அதிகாரம் படைத்தவர்களிடமிருந்தும்  காப்பாற்றும் பொறுப்பு மத்திய அரசையே சாரும். காடுகளில் மேற்கொள்ளப்படும் பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு, அவை அமையப்படவுள்ள கிராமத்தின், கிராம சபைகளிடமிருந்து  முன் அனுமதி பெற்று, மத்திய அரசின் ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அதனால் பழங்குடியினர் எவரேனும் அப்புறப்படுத்தப்பட்டால் உரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
10. இச்சட்டமுன்வடிவில், கிராம சபைகளின் அதிகாரங்கள் தெளிவாக்கப்பட வேண்டும். 1927ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின்படி காடுகள் அரசு சொத்துக்களாகும். எனவே சட்டத்தில் அதற்கான திருத்தத்தைக் கொண்டு வராமல், ஒரு கிராம சபை எப்படி வனப் பகுதிகளில் அதிகாரம் செலுத்த முடியும்? அதேபோல் எதிர்வரும் காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அரசு எப்படிக் கருத இருக்கிறது என்பதையும் தெளிவாக்கிட வேண்டும். ஆறாவது அட்டவணையின் ஷரத்துக்களை மறு ஆய்வு செய்து, மாவட்டக் கவுன்சில்களின் அதிகாரங்களைத் தெளிவாக வரையறுத்து புதிய பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
11. இச்சட்ட முன்வடிவில், பழங்குடியின மக்கள், காடுகளில் விளையும் சிறிய உற்பத்திப் பொருள்களை (னீவீஸீஷீக்ஷீ யீஷீக்ஷீமீst ஜீக்ஷீஷீபீuநீமீ) சேகரித்துப் பயன்படுத்திக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள உரிமை அளிக்கிறது. பழங்குடியின மக்களை வர்த்தகர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் நில மஃபியா கும்பல்களிடமிருந்து பாதுகாத்திடக் கூடிய வகையில் உரிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
12. கொண்டுவரப்படவுள்ள சட்டமுன்வடிவானது காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் குறித்து மட்டுமே கூறியுள்ளது. வன உற்பத்திப் பொருள்களைச் சார்ந்து, வனத்திற்கு வெளியேயுள்ள பழங்குடியினர் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. பழங்குடியின மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்விற்கு காடுகளையே சார்ந்துள்ளனர். காடுகளும் அவர்களுக்கு முக்கியமான வேலைகளை அளித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது கொண்டுவரப்படவுள்ள சட்டமுன்வடிவானது இப்போதுள்ள ஷரத்துக்களில் மாற்றம் எதுவும் கொண்டுவரப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறினால், அது வன உரிமைகளுக்குத் தகுதி படைத்தவர்களுக்கும், தகுதி இல்லாதவர்களுக்கும் இடையே பினாமி பரிவர்த்தனைகளை மேற்கொண்டிட வழிவகுக்கக்கூடிய ஆபத்திருக்கிறது. இதனைத் தவிர்த்திடக்கூடிய வகையில் புதிதாக சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.  காலம் காலமாக காடுகளில் இருந்துவரும் பழங்குடியினரையும் காப்பாற்றிட வேண்டும். அதே சமயத்தில் வணிக நோக்கங்களுக்காக காடுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நபர்களிடமிருந்து, பழங்குடியினரல்லாத ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கூடிய வகையிலும் ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின், குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது, ‘‘அனைவருக்கும் முழுமையான சம வாய்ப்புகள் - அதிலும் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கும், தலித்துகளுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைத்திட - நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று உறுதிபூண்டிருக்கிறது.  பழங்குடியினமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை அளித்திட அரசு உறுதிபூண்டிருப்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டியிருக்கிறது. அரசாங்கம் தன் பொறுப்பினைத் தட்டிக்கழித்திட முடியாது.  பழங்குடியினருக்கு, கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளைச் செய்துதரப் போதுமான நிதி ஒதுக்கீட்டைச் செய்திட வேண்டும்.
சமீபத்தில் ராஞ்சி உயர்நீதிமன்றமானது, தலித்துகள் மற்றும் தலித் அல்லாதார் பகுதிகளுக்கு வேறுபடுத்திக் காட்டுவதை நிராகரித்து தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது, பழங்குடியின மக்களுக்கு எதிரானது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு தாக்கல் செய்திருக்கிறது.
இன்றைய முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமானது பெண்களை மிகவும் தரம் தாழ்த்தியே வைத்திருக்கிறது. நிலப்பிரபுக்கள், மஃபியா கும்பல்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வன அலுவலர்கள் பழங்குடியினப் பெண்களைப் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதென்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி இதற்கெதிராகப் போராடி வருகிறது. வலுவான இயக்கம் நடத்திட எல்லா மட்டங்களிலும் திட்டமிட்டு செயல்பட கட்சித்தலைமை பணித்துள்ளது,
பழங்குடியின மக்கள் தங்கள் அடையாளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  தொடர்ந்து வந்த அரசுகள் பழங்குடியினரின் மொழிகளை உதாசீனம் செய்து வந்தன. பழங்குடியினர் கலாச்சாரத்தை (tக்ஷீவீதீணீறீ நீuறீtuக்ஷீமீ) வெறும் பண்படாத கொச்சை கலாச்சாரம்  என்ற முறையிலேயே அதிகார வர்க்கம் சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.  பழங்குடியினர் கலாச்சாரத்தில் உள்ள நல்ல அம்சங்களை - குறிப்பாக அவர்களது கூட்டுச் செயல்பாடு மற்றும் சமத்துவ மாண்பினை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றைப் - பாதுகாத்து, வளர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆயினும், அதே சமயத்தில், பில்லி சூனியம் வைத்தல், பேயோட்டுதல், பெண்களுக்கு நிலவுரிமை மறுத்தல், பலதார மணத்தை ஆதரித்தல் போன்ற படு பிற்போக்கான நடைமுறைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றிகொள்ள வேண்டும்.
இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வான நிலையை ஏகாதிபத்தியவாதிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, பழங்குடியின மக்களிடையே பிரிவினை வெறியை உருவாக்கி, மோதல்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு உரிய சுயாட்சியை அளித்து, ஒரு கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகவே பழங்குடியின மக்களைப் பாதுகாத்திட முடியும், அவர்களது அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரத்தையும் வளர்த்திட முடியும்.
ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு அக்டோபஸ் அமைப்புகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றன. பழங்குடியினரிடையே அவர்களை கிறித்துவர்கள் என்றும், கிறித்துவர்கள் அல்லாதவர்கள் என்றும் பிரித்து, பிராமண சாதீய அமைப்பைத் திணிப்பதற்கும் முயற்சித்து வருகின்றன. அவை, பழங்குடியின மக்களை ஆதிவாசிகள் என்று அங்கீகரிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பழங்குடியினர் வெறும் ’வனவாசிகள்’தான். இதன்மூலம் அவர்களது வரலாற்றையே மறுதலிக்கக்கூடிய வேலையில் அவை இறங்கியுள்ளன. இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் அக்டோபஸ் அமைப்புகளும் நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
அனைத்துப் பழங்குடியினரின் ஒற்றுமையையும் பாதுகாத்து, பழங்குடியினர் - பழங்குடியினரல்லாதோருக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, முன்னேற வேண்டியிருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்களை பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் போராட்டங்களுடனும் இணைத்திட வேண்டும். அதன் மூலமாகத்தான் அனைத்து மக்களுக்கிடையிலேயும் ஓர் உண்மையான ஒற்றுமையைக் கட்டிட முடியும். அதன் மூலமாகவே நாட்டை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி முன்னேற்றிக் கொண்டு செல்ல முடியும்.

இன்றைய இந்துத்வா அரசியலும், ஆதிகால சமய சச்சரவுகளும்


இன்றைய இந்துத்வா அரசியலும், ஆதிகால சமய சச்சரவுகளும்ச.தமிழ்செல்வன்


இந்துத்வம் என்பது இந்து வகுப்பு வாதமாகும். இது ஒரு நவீன காலச் சிந்தனையாகும். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்த பெரும் நெருக்கடியின் பின்புலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வகுப்பு வாதம் பிறந்தது. ஜெர்மனியில் பாசிசம் ஹிட்லர் வடிவிலும், இத்தாலியில் முசோலினியின் வடிவிலும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தது.


அதே காலப் பகுதியில் ஹிட்லர், முசோலினியிடமிருந்து உத்வேகம் பெற்று இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு வாக்கில் இந்துத்வம் °தாபன வடிவம் பெற்றது. இந்தியாவில் முதலாளித்துவ, தேசிய அரசியலும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியம் பேசும் இடதுசாரி அரசியலும் அதே கால கட்டத்தில் தான் ஒரு முறையான வடிவத்துக்கு வந்திருந்தன. இந்துத்வம், முதலாளித்துவ தேசியம், இடதுசாரி அரசியல் இம்மூன்றும் சமகாலத்தில் பயணப்பட்ட அதே காலப்பகுதியில் தான் இந்தியாவின் பல மொழிகளிலும் நவீன இலக்கியம் தன் ஆரம்ப வரிகளை எழுதத் துவங்கியிருந்தது. மேற்கூறப்பட்ட மூன்று நீரோட்டங்களும் நவீன இலக்கியத்தைப் பாதித்தன - கூடுதலாகவும் குறைவாகவும்.


காலனிய எதிர்ப்புப் போராட்டம் துவங்கியபோது மக்களைத் தட்டி எழுப்புவதற்கான குறிடுகள், அடையாளங்கள் என்று தேடிய தலைவர்கள் பிரிட்டிஷ், கிறி°தவ, வெள்ளை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினர். திலகர் முதல் காந்தி வரை இந்த இந்து அடையாளத்தைப் பயன்படுத்தினர். அது இலக்கியத்திலும் பிரதிபலித்தது.
பங்கிம் சந்திரரின் “ஆனந்த மடம்’’ நாவல் ஆங்கிலேயருக்கு எதிரான விவசாயிகளின் ஆயுத எழுச்சியை மையமாகக் கொண்ட நாவல் தான் என்றாலும் இந்து மீட்பு வாதக் கருத்துக்களுக்கும் அதில் இடம் இருந்தது. ஆகவே தான் அந்நாவலில் வரும் “வந்தே மாதரம்’’ பாடலை காங்கிரசும், அதைவிடத் தீவிரமாக இந்துத்வா சக்திகளும் இன்றும் பயன்படுத்த முடிகிறது, அடிப்படையில் அது நிச்சயமாக ஒரு இந்துத்வ நாவல் அல்ல என்ற போதும்.
விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் “இலட்சிய இந்து ஓட்டல்’’ உள்ளிட்ட நாவல்கள் சரத்சந்திரரின் படைப்புகள் அதே கட்டத்தில் வெளியான பல மராட்டிய நாவல்களில் எல்லாம் இந்து அடையாளம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதன் குறிடாகப் பயன்படுத்தப் பட்டது.


காலனிய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மாவை அதன் சுய அடையாளங்களைத் தேடும் கலைஞனின் வலி மிகுந்த பயணத்தில் இந்து, ஆரிய போன்ற சொற்கள் பற்றுக் கோடுகளாய் இருந்ததை நாம் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது. மகாகவி பாரதியின் பல பாடல்களை நாம் இந்தப் பார்வை யினூடாகவே புரிந்து கொள்ள முடியும். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்துத்வம் இன்றுள்ளது போன்ற தனது பூரண கோர வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை. தேசியம், சர்வதேசியம் என்கிற இரண்டும் பாரதிக்குள் புகுந்திருந்தது. இந்துத்வ அரசியலுக்கு எதிரான ஏராளமான கூறுகள் பாரதியிடம் துலக்கமாக வெளிப்பட்டு நிற்கின்றன. பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பொதுவுடமைச் சிந்தனையின் ஆரம்பக் கூறுகள் என இந்துத்வ எதிர்ப்புக் கூறுகள் பாரதியிடம் அடர்த்தியாக இருந்தன. பாரதியை முழுமையாக (காலச்சூழலில் சரியாகப் பொருத்திப்) பார்க்காமல் அவரிடம் இந்துத்வ அரசியல் மறைந்து நிற்பதாக ஒரு சில ஆய்வாளர்கள் இன்று எழுதப் புறப்பட்டுள்ளதை நாம் நிராகரிக்க வேண்டும்.


பிற மத வெறுப்பு - பகையுணர்வை மூட்டி வளர்த்தல் - வர்ணாசிர தர்மத்தை - மனுவை உயர்த்திப் பிடித்தல் - பிற மதத்தாரை அடிமை கொள்ளத் துடித்தல், மக்கள் திரளை வகுப்பு மயமாக்குதல், சகிப்புணர்வை சமூக மனதிலிருந்து துடைத்தெறிதல் போன்றவையே இந்துத்வ அரசியலின் அடிப்படைகளாகும்.
எப்போதும் வகுப்பு வாதம் இரண்டு தளங்களில் வேலை செய்கிறது. 1. வகுப்பு மோதல்களைத் தூண்டிவிட்டு படுகொலைகளை நடத்தி மக்களை இரு கூறாகப் பிரிப்பது 2. தத்துவார்த்த தளத்தில் இயங்கி மக்களின் பொதுப்புத்தி (ஊடிஅஅடிn ளுநnஉந) யில் இந்துத்வ விஷத்தை ஊசியேற்றுவது.
1947 ல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது வகுப்பு வாதத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும். அதையொட்டி நிகழ்ந்த வன்முறைகள் இலக்கியத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. பிரிவினையின் போது பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டதும், பாலியல் கொடுமை களுக்கு ஆளாக்கப்பட்டதும், மார்பகங்கள் அறுத்து எறியப் பட்டதும், பிறப்பு உறுப்பில் திரிசூலமும், பிறைச்சந்திரனும் சூடு போடப்பட்டதும், எதிரிகள் வந்து தூக்கிச் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் பெண்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டதும், பெற்றவர்களாலேயே இளம் பெண்கள் வெட்டிக் கொல்லப்பட்டதும், வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கருவுற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் கருச்சிதைவு செய்து கொண்டதும், பலர் பத்து மாதம் சுமந்து அக்குழந்தைகளைப் பெற்று அனாதை விடுதிகளில் விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் தங்கள் வீடுகளைத் தேடி ஓடியதையும் எழுதப்பட்ட இருநாட்டு வரலாறுகளிலும் பார்க்க முடியாது. இவையெல்லாம் இலக்கியங்களில் தான் அதே வலியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கே.ஏ.அப்பா° எழுதிய ஒரு கதையில், தேசப் பிரிவினையின் போது தன்மகளைப் பறிகொடுத்த ஒரு இந்து தகப்பன் வருகிறான். எல்லையோர அகதிகள் முகாம்களெங்கும் தன் மகளைத் தேடித் தேடி அலைகிறான். எங்கும் அவளைக் காணவில்லை. கடைசியில் ஒரு தெருவோரப் பிணமாக அவளைக் கண்டெடுக்கிறான். அவளது இரு மார்பகங்களிலும் அறுத்தெறிக்கப்பட்டு மார்பகம் இருந்த இடத்திலிருந்து ரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருக்கிறது. அவளது மரணத்துக்கு முன் ஆளாக்கப்பட்ட பாலியல் பலாத்கார அடையாளங்களோடு அவள் சடலம் கிடக்கிறது. மகளைப் புதைத்து விட்டுப் பல மாதம் பைத்தியம் போல அலைகிறான். பழிக்குப்பழியாக ஒரு மு°லீம் பெண்ணைக் கெடுத்து அவள் மார்பகங்களை அறுத்தெறிய வேண்டுமென ஆவேசம் கொள்கிறான். நல்ல கத்தி ஒன்றை வாங்கித் தீட்டி மறைத்து வைத்துக் கொள்கிறான். பிரிவினையால் அனாதையாகி உடலை விற்றுப் பிழைக்கும் கதிக்கு ஏராளமான பெண்கள் தள்ளப்பட்டிருந்தனர். அப்படி உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு மு°லீம் பெண்ணைத் தேர்வு செய்து இத்தகப்பன் உள்ளே போகிறான். இடுப்பில் கத்தியை மறைத்துக் கொள்கிறான். அவள் அறைக்குள் வருகிறாள் இளம் மு°லீம் பெண். பணத்தைக் கொடுக்கிறான். அவளுடைய மேல் சட்டையை கழற்றச் சொல்கிறான். அவள் தயக்கத்துடன் மெல்லக் கழற்றுகிறாள். இவன் மெதுவாக இடுப்பிலிருந்து கத்தியை வெளியே எடுக்கிறான். அவள் முழுதுமாக சட்டையைக் கழற்றிவிட்டாள். அவளுடைய மார்பகங்களைப் பார்க்கிறான். அவன் கையிலிருந்த கத்தி நழுவி விழுகிறது. அந்தக் கட்டிடமே அதிரும் வண்ணம் “மகளே ...’’ என்று அலறுகிறான். கதை அத்தோடு முடிந்து விடுகிறது.


இந்துத்வ அரசியலின் ஒரு முகமான நேரடி வன்முறைக்கு எதிராக வாசகரின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் கதைகளை அப்பா°, சதத் ஹசன்மாண்ட்டோ போன்ற படைப்பாளிகள் எழுதினர். (மாண்ட்டோவின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிழல் பதிப்பக வெளிடாக வந்துள்ளது).
காலனி ஆதிக்கத்தின்போதுபிரிட்டிஷ் ஆட்சியின் சூழ்ச்சியால் ஏற்பட்ட மத மோதல்களால் நாடே பிரிய நேர்ந்தது. அதனால், ஏற்பட்ட வலியை உணரும் சூழல் தமிழகத்தல் இல்லை. இந்தியாவின் வடபகுதியில் இவ்வலியை நினைவூட்டி மோதலை வளர்ப்பது என்பது இந்துத்வா மற்றும் இ°லாமிய அடிப்படை வாதிகளின் அரசியலாகும். பழங்காலசமயசச்சதரவுகள் பற்றி ஒரு சரியான பார்வை நமக்கு அவசியம். தமிழ் இலக்கியத்தில் சமய சச்சரவுகள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன. இன்று“இந்துத்வா அரசியல்” அந்த சமய சச்சரவின் தொடர்ச்சி என்று இந்துத்வா வாதிகள் பாரம்பரிய மேலான்மை கொண்டாட முனைகின்றனர். இது முற்றிலும் தவறானது. “இந்துத்வா” என்ற அரசியலுக்கும், பழைய சமய சச்சரவுகளுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. இந்துத்வா என்பது முழுக்க முழுக்க இந்தியப்பண்பாட்டை நிராகரிக்கும் ஜெர்மானிய ஆரிய இனக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ரத்த வெறி கொண்ட சர்வாதிகார ஆட்சி முறையைத் திணிக்கும் பூர்சுவா சுரண்டலைப் பாதுகாக்கும், மக்களைத் துரும்பாக நினைத்து துவம்சம் செய்யும் அரசியலாகும். பழங்கால சமய சச்சரவுகள், அக் காலகட்டத்தின் சூழல் ஆகியவைகளை ஆழ்ந்து பரிசீலித்து சரியான பார்வையை மக்களிடையே பரப்புவது அவசியம். அன்று தமிழகத்தில் வேதங்களையும், பலியிடும் யாக முறைகளையும், பவுத்த, சமண சமயங்கள் வலுவாக எதிர்த்தன, வெற்றி கொண்டன. ஆனால், காலப்போக்கில் பவுத்த, சமண மடங்களின் ஆதிக்கமாகி விடுகின்றன. மடங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவான பக்தி இயக்கங்களும் காலப்போக்கில் மடங்களாகி, பவுத்த, சமணம் உருவாக்கிய தத்துவ அறநெறிகளை ஒழிக்கின்றன. வேதங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் முன் நிறுத்துகின்றன. பவுத்த, சமண சமயங்கள், உருவாக்கியிருந்த கடவுளற்ற ஆன்மீக சித்தாந்தங்களையும், இகவாழ்வு அறநெறிகளையும், பக்தி இயக்கங்கள் முற்றிலுமாக ஒழிக்கும் பிற்போக்கு மடங்களாகிவிட்டன.
அந்த தத்துவங்ளை பற்றிக் கூறும் இலக்கியங்களை ஆராய்ந்தால் மதச்சார்பற்ற, இயக்க இயல்பொருள் முதல்வாதக் கூறுகளைக் கெண்ட ஆரம்ப தத்துவமாக அவைகள் இருந்தன என்பது தெரிகிறது. (பழங்கால ஹெராக்லிட்ட°, 19ம் நுhற்றாண்டு ஹெகல் ஆகியோரின் பார்வைக்கு முன்னேடியாக இருந்தது.) பக்தி இயக்கத்தின் சீரழிவு கட்டத்தில் பிற சமய கருத்துக்களை வேர் அறுக்கும் சகிப்புத்தன்மையற்ற போக்கு விரிந்தது. முடிமன்னர்களின் ஆதரவு இருந்தாலும் அவைகள் சுருங்கின. பிற்காலத்தில் தமிழ் மொழியின் மேலாண்மையை சீரழிக்க சம°கிருத ஆதிக்கம் பரவ இந்த வேத ஆகம பார்வை வழிவகுத்தது. தேவார ஓதுவார்கள், சாமிக்கு அருகே போகக் கூடாது என்றெல்லாம் தடைகள் வந்தன. சம°கிருதம், பார்ப்பனர்களும், தெய்வ அனுக்கிரகம் பெற்றவர்கள் என்று கருத்துபரவி, பக்தி இயக்கம் மடிந்தது. தமிழ் மட்டும் நின்றது.


உண்மையில்...
“பரசமயத் தருக் கழியச்
சைவ முதல் வைதீகம் தழைத்தோங்க’’ப் பாடுபட்டவராக பெரியபுராணத்தில் சேக்கிழார் புகழ்ந்து பாடிய திருஞான சம்பந்தர் பாடிவேதங்களை முன்நிறுத்துகிறார்..
“புலையறம் பேசும் புத்த சமணர்களின்
தலையறுக்க வேண்டி நின் தாழ் பணிந்தேனே...’’
என்றும்
“சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமணர் குண்டர்
மடங்கொண்ட விரும்பியதாய்’’ என்றும் பாடும் சம்பந்தரின் வார்த்தைகளிலும்
“குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண சாக்கிப்பேய்’’ என்று திகம்பர சாமிகளாக கூறை (ஆடை) யின்றித் திரியும் சமணத்துறவிகளைக் “குண்டர்’’ என்று சொல்லும் சுந்தரரின் சொற்களிலும்
“புத்தன் முதலிய புல்லறிவிற் பல சமயம்
தத்தம் மதங்களில் தட்டுளும்புப்பட்டு நிற்க’’ எனவும்
“விருது பகரும் வெஞ்சொல் சமணர்
வஞ்சகச் சாளுக்கியர்’’ என்பது மாணிக்க வாசகரின் விஷம் கக்கும் வாசகம்.
“தோடுடைய செவியன் முதல் கல்லூர் என்னும் தொடி முடிவாய் பரசமயத் தொகைகள் மாள பாடினார் பதிகங்கள்’’ என்று திருஞான சம்பந்தரின் சமூகப்பணி பலசமயக் கருத்துக்களை அழித்து ஒழிப்பது தான் என்று அவரைப் பற்றி அவரது சமகாலத்தில் எழுதப்பட்ட திருமுறை கண்ட புராணம் பதிவு செய்கிறது.
(மன்னரின் ஆதரவு இல்லாமேலே, மக்களின் ஆதரவோடு இந்த பவுத்த, சமண இலக்கியங்கள் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்பதை பிற்கால வரலாறு சான்று பகர்கின்றன). சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் ஓலைச் சுவடிகளைத் தேடி தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் கிளம்பிச் சென்று விருஷபதாச முதலியார் வீட்டு வாசலில் நின்ற போது,
“சைவ மடத்திற் பழகினவருக்கு ஜைன கிரந்தங்களில் அன்பு ஏற்படுவதற்கு நியாயமே இல்லையே’’ என்று சுவடிகளைத் தர மறுக்கிறார். அந்த வரலாறு வேறு. இந்துத்வாவின் தோற்ற வரலாறு வேறு. மொகலாயர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆட்சியின் போது, மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய செய்த அரசியல் சூழ்ச்சிகளில் ஒன்று. வேதங்களையும், பார்ப்பண ஆதிக்கத்தையும் அரசு நிர்வாகப்பணிகளில் திணித்து, மக்களைப் பிளவுபடுத்தி, நிர்வாகம் செய்வது என்பது வேறு வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சி போனபின் பார்ப்பண ஆதிக்கம் கேள்விக் குறி ஆனதால் அந்த ஆதிக்கத்தை திரும்பப்பெற ஜெர்மானிய நாசிகளிடமிருந்து காப்பி அடித்து உருவாக்கப்பட்டதே ‘இந்துத்வா’ அரசியல்.


இந்திய வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் திகழ்பவை 1947 தேசப்பிரிவினை, 1948 காந்தி படுகொலை, 1984 இந்திராகாந்தி கொலையை ஒட்டி ஆர்.எ°.எ°ஸூம், காங்கிரசும் இணைந்து நடத்திய சீக்கியர் வேட்டை, 1992 பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த பம்பாய் கலவரம், 2002 குஜராத்தில் அரசே திட்டமிட்டு நடத்திய மு°லீம் மக்களை அழித்தொழிக்கும் படுகொலை இயக்கம் - இந்த அத்தனை கரும்புள்ளிகளுக்கும் காரணமாக இருந்தது இந்துத்துவா தான்.
இந்த ஒவ்வொரு நிகழ்வும் படைப்பு மனங்களில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தின. எண்ணற்ற கவிதைகளும் கதைகளும் வந்துள்ளன. தமிழில் அசோகமித்திரன் எழுதிய 18-வது அட்சக் கோடு எனும் நாவல் ஹைதராபாத்தில் இந்து - மு°லீம் கலவரம் ஏற்பட்டதையும், மத வெறுப்பு சடங்கு பரவி நின்றதையும் வாசகர் மனம் பதறும் வண்ணம் பதிவு செய்துள்ளது. கல்கியின் “அலைஓசை’’ யின் இறுதியிலும் இது பதிவாகியுள்ளது. - லேசாக மு°லீம்களைக் குற்றம் காட்டும் தொனியுடன்.
விடுதலைக்குப் பிந்திய நவீன தமிழ் இலக்கியம் திராவிடச் சிந்தனைகளையும் பொதுவுடமைச் சிந்தனைகளையும் முதலாளித்துவம் தந்த நவீனச் தாராளவாத சிந்தனைகளையும் உள் வாங்கி நடைபோட்டது.
சமீப காலமாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் காவிக் கொடிகள் அசையத் துவங்கியிருக்கும் அடையாளங்கள் தெரிகின்றன. “மதவாதம் என்று ஒன்றும் இல்லை. அது இடதுசாரிகள் கிளப்பி விடும் போஃபியோ தான்’’ என்று குமுதம் பத்திரிகையில் எழுதிய ஜெய மோகனின் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட ஓர் இலக்கிய இதழ் “சொல்புதிது’’.


அதன் முதல் இதழ் தலையங்கம் “தமிழ்க் கருத்துலகில் இடதுசாரிப் பார்வைதான் கொடிகட்டிப் பறப்பதாகவும் ஆகவே அதை மறுத்து பிற சிந்தனைகளை முன்வைப்பதற்காகவே இவ்விதழ் தொடங்கப்படுவதாகவும்’’ கவலையுடன் பேசியது. அவ்விதழ் அத்வைதக் கருத்துக்களைப் பேசிய சைதன்ய நிதியை விரிவாக அறிமுகம் செய்தது. தொடர்ந்து ஜெயமோகன் எழுதிய “விஷ்ணுபுரம்’’ நாவலும் சில சிறுகதைகளும் இந்துத்துவ சார்புக் கருத்துக்களை பரப்புவதாக விமர்சனத்துக்குள்ளாகின.
காலச்சுவடு மாத இதழான பிறகு பெரியாரையும், பாப்லோ நெருடாவையும், அமரர் ஜீவாவையும் அவர்களது பாலியல் சார்ந்த வாழ்வைத் தூக்கலாக முன் வைத்துப் பேசிய கட்டுரைகளை வெளியிட்டது. எந்த ஆளுமையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டத்தோடு இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் தமிழ்ப் பொதுப்புத்தி என்னவாக இருக்கிறது? பாலியல் தொடர்பான ஒரு செய்தியால் அது எத்தனை பெரிய தியாகத்தையும் ஊதித்தள்ளி விடுமே. இந்தப் பொதுப்புத்தியை மாற்றுவதற்கான எந்தப் போராட்டத்தையும் நடத்தாமல் முற்போக்கான ஆளுமைகள் குறித்த இத்தகைய செய்திகளைப் பரப்புவது என்பது அறியாமல் செய்யும் பிழையல்ல என அனைவரும் விமர்சனம் செய்தனர். பொதுவாக தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கத்தார் தம் தோள்களில் சுமந்து கொண்டு வந்து இறக்கிய ஆர்.எ°.எ° பரிவாரம் ஒருவித பார்ப்பன மீட்சிக்கு ஆதரவான கருத்துக்களை சமீப ஆண்டுகளாகப் பரப்பி வருவதும், வட இந்தியாவைப் போன்ற கலவரங்களை மண்டைக்காடு, கோவை, திருப்பூர் என வரிசையாக நடத்தி வருவதும் நாம் அறிந்த செய்திகளாகும். இத்தகு இந்துத்வ கருத்து வளர்ச்சியின் பின்னணியில் தான் இரண்டு இலக்கிய ஆளுமைகள் பற்றி நாம் பார்க்க வேண்டி யுள்ளது. ஒருவர் ஜெயகாந்தன், இன்னொருவர் அசோகமித்திரன்.


"பிள்ளை கெடுத்தான் விளை" கதை எழுதி அபகீர்த்தியடைந்த, சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி வாழ்க்கையில் ஒரு மதச்சார்பற்ற மனிதராக வாழ்ந்து தனது படைப்புகளிலும் அதே நிலைபாட்டில் நின்றவர். இக்கதையில் அவர் சறுக்கி விழுந்ததும் சூழலின் பாதிப்புதான் என்றே பார்க்க வேண்டும்.
அசோகமித்திரனின் படைப்புகளில் நாம் ஒரு கீழ் மத்திய தர வாழ்க்கை யதார்த்தமாகச் சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். இந்துத்வக் கருத்துகளுக்கு அவரது படைப்புகளில் இடமில்லை. ஆனால் “அவுட் லுக்’’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “தமிழ்நாட்டில் பிராமணர்கள் யூதர்களைப் போல நடத்தப் படுவதாக’’ ஒரு பிராமணராக நின்று தன் வேதனைகளை வெளிப் படுத்தியிருந்தார். அவரது படைப்புகள் வழியாக அவரைத் தரிசனம் செய்து மனதில் ஏற்றிக் கொண்ட வாசகர்கள் அவர் இன்னும் பிராமணராகவே பின் தங்கி நின்று போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். அவர் இப்படியெல்லாம் பேசும் தைரியம் பெற்றதற்கு காவிமயமாகி வரும் இலக்கியச் சூழலே காரணம் எனலாம்.
ஒருவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதற்காக மட்டும் அவர் கூறும் கருத்துக்களை எப்போதும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், அவசர அவசரமாக அவருக்கு முத்திரை குத்துவதும் ஆரோக்கிய மான போக்கு அல்ல. ஆனால் இது போல இத்தனை பெரிய படைப்பாளி கூட இன்னும் விட்டு விடுதலையாகாமல், தலித் மக்கள் வாயில் மலம் திணிக்கப்படும் ஒரு காலத்தில் நின்று கொண்டு பார்ப்பனர்களின் இழந்து போன சொர்க்கத்துக்காக ஏங்கி நிற்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.


ஜெயகாந்தன் சங்கர மடத்தின் ஊதுகுழலாக மாறிப்போன சோகம் இன்னொரு முக்கிய நிகழ்வாகும். அயோத்திப் பிரச்சனையில் மு°லீம்களுக்கு எதிராகப் புறப்பட்ட ஜெயேந்திர சர°வதி சாமியார் மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக ஊர் ஊராக பொது மாநாடுகள் நடத்திய ஜெயேந்திர சாமியார் அப்பட்டமான ஆர்.எ°.எ°. பிரச்சார பீரங்கியாக பெருவாரியான தமிழ் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டவர். அவரது லீலா வினோதங்கள் பற்றி ஏராளமான நிகழ்வுகளை தமிழ் மக்கள் அறிவார்கள். ஆனால் அது எதுவுமே மகத்தான படைப்பாளி ஜெயகாந்தனுக்குத் தெரியாமல் போனது.
“இந்த லோகத்திலே எது நின்னாலும் அழிந்தாலும் இந்தச் சிவலிங்கமும் இதுக்கு நீரில் அபிஷேகமும் புஷ்பங்களால் அர்ச்சனையும் நடக்கிறது நின்று போயிடாது. எத்தனை யுகங்கள் புரண்டாலும் எங்க சிவலிங்கம் புரண்டுடாது’’ என்று “ஜய ஜய சங்கர’’ நாவலில் பேசியவர் ஜெயகாந்தன். இப்போது “ஏது காரணத்தாலோ’’ ஆட்சியாளரின் கோபப்பார்வைக்கு ஆளாகி சங்கரராமன் கொலை வழக்கில் கைதானார் ஜெயேந்திரர். தமிழகமே பாராட்டி மகிழ்ந்த அந்த கைது நடவடிக்கையால் வேதனைக் குள்ளான ஜெயகாந்தன் ஜெயேந்திரர் கைதை கண்டித்தும் ஏதேதோ பல தத்துவ வியாக்கியானங்கள் சொல்லி அதை விளக்கவும் ஒரு நாவல் ( ! ) எழுதினார். அதுதான் “ஹர ஹர சங்கர’’.


“வெறும் இந்திய ரஞ்சகமான சமாசாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிக்கை யாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும்’’ என்றார் சந்திரசேகர சர°வதி சாமிகள். ஆச்சார்யா °வாமிகள் ஆக்ஞைக்கு ஏற்ப இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்கியத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான் என்று அந்நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் எழுதி வைக்கிறார். நல்ல வேளையாக ஜெயகாந்தனைப் பின்பற்றி செல்ல எந்த ஒரு படைப்பாளியும் தமிழ் நாட்டில் இன்று தயாராக இல்லை.
ஜெயகாந்தனாவது வெளிப்படையாக தன்னை அடையாளங் காட்டிக் கொண்டு அடி வாங்கிக் கொண்டு கிடக்கிறார். ஆனால் இன்னும் சில படைப்பாளிகள், சில பத்திரிக்கைகள் எழுதுகிற எழுத்தில் “பிடி’’ கொடுக்காமல் ஆனால் உள்ளரங்கமாக இந்துத்வ நுண் அரசியலை நடத்திக் கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கவனமுடன் நாம் அவர்களது வழிகளை ஆராய வேண்டியுள்ளது.


அவசரப்பட்டு எந்தப் படைப்பாளியையும் முத்திரை குத்தி இந்துத்வ அரசியலுக்கு முன் நாமே தள்ளி விடவும் கூடாது. நமது விமர்சனங்கள் ஆதாரபூர்வமாகவும் அப்படைப்பாளிகளை மீட்டெடுக்கும் தொனியிலும், நமது வாதங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் முற்போக்கு பார்வை கொண்ட வட்டத்தை விரிவாக்க இதுவே வழி.
இன்றைய நவீன தமிழ் இலக்கிய சூழலின் ஒரு ஓரத்தில் காவி படர்ந்து வருகிறது என்கிற எச்சரிக்கை மட்டும் இப்போதைக்குத் தேவை.

Sunday, November 13, 2005

தமிழக தத்துவங்களின் பன்முகம்

தமிழக தத்துவங்களின் பன்முகம்

என்.குணசேகரன்
உலகப்புகழ் பெற்ற இந்திய சிந்தனையாளர்அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகள், சொற் பொழிவுகளை தொகுத்து சமீபத்தில் ஒரு நுhல் வெளிவந்துள்ளது. ‘வாதிடும் இந்தியன்’ (ஹசபரஅநவேயவiஎந ஐனேயைn) என்ற தலைப்பில் இந்தியாவின் தொன்மையான அறிவுலகத்தை அவர் அறிமுகம் செய்துள்ளார். நமது பண்பாட்டு பரிமாணங்களை ஆழமாக இந்த நூலில் அமர்தியாசென் விளக்கியுள்ளார்.இந்த கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் அடிநாதமாக எடுத்துரைக்கும் ஒரு உண்மை இது தான்: இந்தியப் பாரம்பரியம் என்பது பன்முகப்பட்ட அறிவுத் தேடலே. சென்”இந்தியாவில் எப்போதுமே பன்முகத்தன்மை (ழநவநசடினடிஒல) என்பது இயற்கையான நிகழ்வாக இருந்து வந்துள்ளது” என்கிறார்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக ‘வாதிடும் இந்தியன்’ எதையும் சந்தேகிப்பவனாக, எதையும் கேள்வி கேட்பவனாக, மறுப்புரை நிகழ்த்தி வாதிடுபவனாக இருந்து வந்துள்ளான். இந்த மேன்மையான உண்மையை பல ஆதாரங்களோடு அமர்த்தியா சென் விளக்குகிறார்.இதையொட்டி பழமையான சம°கிருத இலக்கியங்களில் உள்ள நாத்திகம் மற்றும் அறியொணாத் தத்துவக் கருத்துக்களையும் (ஹபnடிளவiஉளைஅ) தொகுத்துள்ளார் சென். இதனை குறிப்பிடுகிற போது உலகில் வேறு எந்த செம்மொழியிலும் இல்லாத அளவிற்கு நாத்திகக் கருத்துக்கள் சம°கிருதத்தில் உள்ளது என்று எழுதுகிறார். சம°கிருதம் தெய்வீக மொழி என்று பலகாலம் சொல்லப்பட்டு வந்த கூற்றுக்கு மாறாக, கடவுள் மறுப்பு தத்துவங்களையும் கொண்டுள்ள மொழி என்ற உண்மையை அவர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.
இத்தகைய கேள்வி கேட்டு வாதிடும் தன்மைதான் தொன்மை இந்தியாவில் பல அறிவியல் சிந்தனைகளுக்கும் வழிவகுத்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆயுர் வேதம் எனும் பெயரில் மருத்துவம் வளர்ந்திருந்தது. 5ம் நுhற்றாண்டில் ஆர்யபட்டர், 6ம் நுhற்றாண்டில் வராகமிகிரர், 7ம் நுhற்றாண்டில் ஆர்யபட்டா போன்றோர் இயற்கையை விளக்குபவர்களாக, இயற்கையின் மர்மங்களை துவக்குபவர்களா, கிரகண சஞ்சாரங்களையும், சூரிய,சந்திர கிரகணங்களையும் கணக்கிட்டு கூறுபவர்களாகவும் இருந்தனர். விஞ்ஞானப் பார்வைக்கு துவக்கமாக இருந்தனர்.
இந்திய சிந்தனைச் சிறப்பு :


பல்வேறு சிந்தனைகள் தழைத்து ஓங்கிய களமாக தமிழகத்தின் சிந்தனைத்தளமும் இருந்து வந்துள்ளது.
ஆனால், ஒவ்வொன்றும் தனித்தனியாக தொடர்பற்று வளர்ந்திட வில்லை. ஒவ்வொரு தத்துவ சிந்தனையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. ஒவ்வொரு தத்துவாசிரியரும் மக்களிடம் தனது தத்துவத்தை பதிய வைக்க முயற்சித்தார். ஏற்கெனவே மக்களின் சிந்தனையில் குடிகொண்டிருக்கும் சிந்தனைகளோடு போராடி, அவற்றினை தகர்த்து, தங்களது சிந்தனைகளை கொண்டு சென்றனர்.அமர்தியா சென் குறிப்பிடும் ‘வாதிடும் இந்தியனுக்கு’ இந்த பாணி கைவந்த கலை. இந்தவகை வாதப்போருக்கு தொன்மையான பெயர், பூர்வபட்சம் இது சம°கிருத சொல். தமிழில் இதற்கு பரபக்கம் என்பர்.
பரபக்க வாதங்கள் மூன்று படிகளைக்கொண்டது. முதல் படியாக ஆசிரியர் எதிரியின் கருத்துக்களைக் தொகுத்து அவன் சொல்லுவது போல கூறிடுவார். இதுவே பரபக்கம் எனப்படும்.
இரண்டாவது படியாக, எதிரியின் கூற்றுகளில் உள்ள ஊனங்களையும், ஓட்டைகளையும் அம்பலப்படுத்தி சண்டப் பிரசங்கம் செய்வார் ஆசிரியர். எதிரியின் கருத்துப்பிரவாகத்திற்கு தடைச்சுவர்கள் எழுப்பிடும் வேலை இது. இதனை பரபக்க நிராகரணம் அல்லது பரபக்க நிக்ரகம் என்று அழைக்கின்றனர்.ஆக, எதிரியின் கருத்தை சொல்லியாகிவிட்டது: அதிலுள்ள முரண்பாடுகளை விவரித்தாகிவிட்டது: இறுதியானது, முரண் பாடுகளை தீர்த்து வைக்கும் பணி. தான் எழுப்பிய வினாக்களுக்கு பதில் எதிரியின் கருத்தில் இல்லை என்பதை நிறுவிய பிறகு தனது சமய, தத்துவக் கொள்கைகளை ஆசிரியர் விவரிக்கத் தொடங்குவார். இதற்கு சுயபட்சம் என்பது பெயர். தமிழில், இதனை சைவ சித்தாந்திகள், சுபக்கம் என்று அழைத்தனர்.
இந்தியாவில் தருக்க முறை: (டுடிபiஉ)
ஆதிகாலத்திலிருந்தே தருக்க நியதிகளை வைத்து தத்துவங்களை நிரூபிக்கும் முறை இந்தியாவில் இருந்தது. பிற்காலத்தில் வேதக்கூற்றுக்களை நியாயப்படுத்தும் கருவியாக மாறியதால், தருக்க நியதிகள் வளர்வது தடைபட்டது.இந்திய தத்துவ ஞானிகள் தங்களது வாதங்களை தருக்க முறையில் எடுத்துரைத்து வாதாடியுள்ளனர். இந்திய தருக்க முறையை நியாயா என்ற பழiமான தத்துவம் விரிவாக விளக்குகிறது.
உண்மையை அறிய, நான்கு கருவிகளைப்பற்றி நியாயத் தத்துவம் பேசுகிறது. ஐம்பொறிகளால் உணருவது, அனுமானித்து அல்லது ஊகித்து அறிவது, மிகவும் தெரிந்த உண்மையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, வாய்மொழியாக சொல்லப்படுவதிலிருந்து அறிவது என்ற முறைகளில் உண்மையை அறியவேண்டுமென நியாயா கூறுகிறது.
ஒரு கருத்து உண்மையா ? என்று அறிய 1). அந்தக்கருத்தை கிரகித்தல், 2).அதையொட்டிய தகவல்களை சேகரித்தல், 3). அந்த தகவல்களைக் கொண்டு சொல்லப்பட்ட கருத்தை பரிசோதனைக்கு உள்ளாக்குதல், 4). அக்கருத்தை மேலும் சரிபார்த்து உறுதிபடுத்துதல் - ஆகியனவற்றை நியாயா வலியுறுத்துகிறது.பல உதாரணங்களைப் பயன்படுத்துவது, பகுத்தறிந்து பார்ப்பது என தருக்கத்தின் பல்வகை அம்சங்களை நியாயா விளக்குகிறது.
எனினும், கடுமையான தருக்கம் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு இயல்பாக இட்டுச் சென்றிடும் என்பதால், ஆன்மீகவாதிகள் எதிர்த்தனர். இதனால், இந்திய தருக்க வளர்ச்சி தடைபட்டது.
எனினும், ஆன்மீக தத்துவவாதிகள் கூட தருக்கமுறையைப் பயன்படுத்தியே தங்களது தத்துவங்களை நிரூபிக்க முயன்றனர். இது, பழமை இந்தியாவில் தருக்க முறை மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்ததையே எடுத்துக்காட்டுகிறது.
தருக்க படி முறையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய தத்துவயியலாளர்கள் கடைபிடித்தனர். பரபக்கம் என்பது தத்துவங்களை மரபாக இந்திய சிந்தனை வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இதனால்தான் ஆயிரமாயிரம் வேறுபட்ட தத்துவக் கருத்துக்கள் மலர்ந்து செழித்த தளமாக இந்திய சிந்தனைக்களம் விளங்கியது. இது மனிதநேய, பகுத்தறிவு சிந்தனைகள் நிரம்பி வழிந்த மலர்வனமாகவும் இருந்தது ; அதே நேரத்தில் பல்வகை பிற்போக்குத் தனங்களும், சாதி, மதம் எனும் பெயரில் பல அறிவியல் விரோத மூடக்கருத்துக்கள் கொண்ட முட்புதர்களாகவும் விளங்கியது. வெறும் தர்க்கத்தின் மூலம் உண்மையை அறிய முடியாது என்பதை நடைமுறை மூலம் அறிய வேண்டும் என்பதும் ஆதிகால சிந்தனை மரபானது.
ஆனால், ஒன்று நிச்சயமானது. இந்திய சிந்தனை எப்போதும் ஒரே சிந்தனையாக, வேத பழமைவாதம் மட்டுமே நிலைத்து நின்றதாக கருதுவதற்கு எங்கும் இடமில்லை. இதனை இந்துத்துவவாதிகள் மறைத்தாலும் இதுவே உண்மை வரலாறு.
இந்திய ஞானிகள் ஆன்மீகவாதிகளா?
இந்த தத்துவ அறிவியல் வளர்ச்சிப் போக்கினை மூடிமறைக்க இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இந்திய சிந்தனை வேதமரபு சார்ந்த ஒரே வகை சிந்தனையாக இருந்து வந்துள்ளது என அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


தமிழகத்தில்ஆர்.எ°.எ° ஸின் பிதாமகனாகத் திகழும் குருமூர்த்தி தொடர்ந்து இந்துத்துவா பிரச்சாரத்தை தமிழகத்தில் செய்து வருகிறார். துக்ளக் பத்திரிக்கையில் அவர் எழுதும் தொடர் கட்டுரைகளில் மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், தமிழக, இந்திய பண்பாட்டுப் பாரம்பரியங்களில் உள்ள மனித நேய மதச்சார்பற்ற பாரம்பரியங்கள் அனைத்தையும் கேலி பேசியும், இழிவான அவதுhறுகளை பரப்பியும் எழுதி வருகிறார்.
இந்து மதப் பாரம்பரியமே இந்திய பண்பாடு, இதர மதங்கள் இவற்றை அழிக்க வந்தவை எனும் வகையில் அவர் எழுதுவது வழக்கம். துக்ளக் இதழின் ஆக°டு 10,2005 இதழில் அவர் எழுதியுள்ளார்.
“முதலில் இ°லாமிய அரசுகளும், பின்பு ஆங்கிலேய அரசும் நமது பாரம்பரியத்தையும், தேசியத்தையும் அழிக்க எவ்வளவு முயற்சி செய்த போதும், அதில் அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை. காரணம் எண்ணற்ற சித்தர்களும், ஞானிகளும் மக்களுக்கு சரியான திசை காட்டி வந்தனர். இன்றும் அதே நிலைதான். மதச்சார்பற்ற அரசாங்கம், அரசியல் நம் நாட்டின் பாரம்பரியத்தையும், ஆன்மீகத்தையும் அழிக்க எவ்வளவு முயன்றாலும், ஞானிகளும், சித்தர்களும் தோன்றி வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள்.”
அதாவது, நமது ஞானிகள் ஆன்மீக பாரம்பரியத்தை மட்டுமே வளர்த்து வந்தார்கள் என்றும் இ°லாமும், இதர சமயங்களும் அதனை அழிக்க வந்தவை என்றும் அவர் எழுதி உள்ளார்.
“மதசார்பற்ற அரசாங்கம், அரசியல் என்பது இந்திய பண்பாடல்ல” என்று சோ எவ்வளவு கைவலிக்க எழுதினாலும் அது உண்மையாகி விடாது என்பதற்கு பழைய இலக்கியங்களே சான்று பகரும்.


பௌத்தம் பேசும் மணிமேகலை, சமணம் பேசும் நீலகேசி போன்ற தமிழ் இலக்கியங்களையும், இ°லாமிய, கிறித்துவ அறிஞர்கள் ஆக்கியுள்ள தத்துவ சமய இலக்கியங்களையும் நமது பாரம்பரியம் இல்லை என்று நிராகரித்து விட முடியுமா? அல்லது ஆன்மீகத்தையும் ஆன்மா, பிரம்மா போன்ற கருத்துக்களையும் அடியோடு மறுத்திட்ட, தமிழ் இலக்கியங்களில் பூதவாதம் என்று அழைக்கப்படும் உலகாயுதவாதத்தை புறக்கணிக்க முடியுமா?
நமது தத்துவம் மற்றும் பண்பாட்டில், ஒரு பக்கத்தை மட்டும் முக்கியத்துவம் பெறச் செய்து தங்களது வர்க்கத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றனர் இந்துத்துவவாதிகள். இந்து ஆன்மீகத்தை உள்ளடக்கமாகக் கொண்ட பிராமணியம், நால்வருண சமூக ஒழுங்கு முறை, அன்றைய உழைப்பாளி மக்களையும் ஒடுக்கியது. இன்றைய உழைப்பாளி மக்களை ஒடுக்கிடவும், இந்த தத்துவத்தையும், பண்பாட்டையும் பயன்படுத்த முனைகிறது இந்துத்துவா கூட்டம்.
வேறுபட்ட பல்வகைச் சிந்தனைகள் :
நமது பண்பாடே வேத மரபு சார்ந்த பண்பாடுதான் என்ற இந்த பொய்யுரையை, ஒரு அரசியல் நோக்கத்தை அடைய, ஓயாது அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தக் கூற்றை மறுத்திட, ஆயிரமாயிரம் சான்றுகள் நமது பாரம்பரியத்திலும், பண்பாட்டிலும் உள்ளன. தமிழ் இலக்கியத்திலும் பல சான்றுகள் உள்ளன.
மணிமேகலையிலும், நீலகேசியிலும் பூதவாதம் என்று அழைக்கப்படும் உலகாயுதம் உள்ளிட்ட தத்துவங்களின் தாக்கத்தைக் காணலாம்.
பேராசிரியர் நா.வானமாமாலை, பூதவாதம் உள்ளிட்ட பல்வேறு வகை தத்துவங்களும் தொன்மையானவை என்பதற்கான ஆதாரங்கள் சங்ககாலப் பாடல்களிலேயே உள்ளன என்று நிறுவுகிறார். அகம், புறம் என்ற இருவகை வாழ்க்கை முறைகளை விளக்கும் புறப்பாடல்களே, தமிழக தத்துவப் போக்குகளுக்கும், உலகாயுதம் வளர்ச்சியுற்று இருந்ததற்குமான முதல் ஆதாரம் எனவும் மணிமேகலை, நீலகேசி ஆகிய நூல்கள், இரண்டாவது ஆதாரம் என்றும் நா.வானமாமலை எழுதுகின்றார்.சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சிந்தாமணி ஆகியன ஐந்து பெரும் தமிழ்க்காப்பியங்கள் என தமிழறிஞர்கள் போற்றி வந்துள்ளனர். ஆனால், இந்த ஐந்து பெரும் காப்பியங்களில் ஒன்று கூட இந்து சமயத்தையோ, வேதங்களையோ அடிப்படையாகக் கொண்டன அல்ல.
சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி, மூன்றும் சமணக் கருத்துக்களைக் கொண்டன. . மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த சமயக் கருத்துக்களை கூறுகிற காவியங்கள்.
பௌத்தத்தை பரப்பும் நுhல்தான் மணிமேகலை எனினும் அதில் அன்று தமிழக தத்துவ உலகில் மோதிக்கொண்ட பல்வேறு தத்துவங்களை அறிய அது உதவுகிறது. இதனை 27ம் அத்தியாயமான ‘சமய கணக்கர் தம் திறன் கேட்ட காதை’ எனும் பகுதியில் காணலாம்.
பல சமய அறிஞர்கள் கூடி, தத்தம் கருத்துக்களை எடுத்துரைப்ப தாகவும், அதனை வஞ்சிமாநகர் சென்ற மணிமேகலை கேட்பதாகவும் இந்தப்பகுதி அமைந்துள்ளது. மழைக்கு அதிபதி என்று கருதப்படும் இந்திரனுக்கு காவிரிப்பூம்பட்டிணத்தில் 28 நாள் விழா எடுக்கப் படுகிறது. பல சமயவாதிகள் அங்கு கூடுகின்றனர். பட்டி மண்டபத்தில் அமர்ந்து அவர்கள் தங்கள் கொள்கைகளை எடுத்துரைக்கின்றனர்.
இவ்வாறு எடுத்துரைக்கும் தத்துவங்கள் பல்வேறுபட்டவை. அளவை வாதி, சைவவாதி, பிரம்மவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகிய சமய தத்துவவாதிகள் தங்களது தத்துவங்களின் நுண்பொருட் களை விளக்குகின்றனர்.
ஒரே சிந்தனையிலும் பல பிரிவுகள் :
இந்து சமயம், பௌத்தம் என்று நாம் குறிப்பிடும் சமயங்கள் ஒரே வகை சார்ந்தது அல்ல. இந்து சமயம் ஒரே ஒரு குறிப்பிட்ட வழிபாடோ அல்லது கடவுளோ கொண்டதல்ல என்பதை நாம் அறிவோம். பௌத்தத்திலும் பல்வேறுபட்ட பிரிவுகள் மணிமேகலை காலத்திலேயே நிலவி வந்திருக்கிறது.
இதன் மூலம் அவர் நிலைநாட்ட விரும்புவது வேதப்பண்பாடு என்று“இந்துத்வா அரசியலுக்கு” சாயம் பூசும் முயற்சியே தவிர வேறல்ல. பல பண்பாடுகளை இந்தியா வளர்த்தது. சான்றாக அவை அவையெல்லாம் அந்நியமானவை என்பது அபத்தம். மணிமேகலை ஒரு பௌத்த காவியமாகும். அது உருவான காலத்தில் பௌத்த தத்துவக் கருத்துக்களும், தருக்கவியலும் தமிழ்நாட்டில் வளர்ச்சி யடைந்த காலம்.அது பௌத்த காவியம் என்றாலும், இது எந்த வகை பிரிவு பௌத்தத்தை சார்ந்தது என்பதில் பல ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துக்களை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டு அது எந்தப்பிரிவைச் சார்ந்தது என்று ஆராய்வதற்கு தமிழகத்தின் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களான தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், வையாபுரிப் பிள்ளை, மயிலை.சீனி-வேங்கடசாமி, உ.வே.சாமி நாதய்யர் ஆகியோர் முயன்றுள்ளனர்.
இதில் தெ.போ.மீனாட்சிசுந்தரனார், மணிமேகலை காட்டும் பௌத்தம், தேரவாத பௌத்தம் என்று பல சான்றுகளோடு நிறுவுகிறார்.
அவர் கூறும் மற்றொரு கருத்து பௌத்தர்கள் பிற மதத்தின ரோடன்றி தம்முள் தாமே வாதாடினர்.
அத்துடன் பௌத்தத்திற்குள் சௌந்திராந்திரகர், வைபாஹிகர், யோகாசாரர், மாத்யாத்மிகர் போன்ற முக்கிய பிரிவுகளோடு மேலும் பல சிறு பிரிவுகளும பௌத்தத்திற்குள் உலா வந்ததை தெ.பொ.மீ எடுத்துக்காட்டுகிறார். அத்துடன் 4ம் நுhற்றாண்டில் பௌத்த தத்துவ ஞானிகளான புத்த நந்தியோடும், சாரி புத்தரோடும் ஞான சம்பந்தர் வாதிட்டு வென்றார் என்ற செய்தியை குறிப்பிடுகிறார். ஞான சம்பந்தரும் தேரவாத பௌத்தத்திற்குள் ஆறுவகை இருந்ததை குறிப்பிடும் வகையில் “அறுவகைத்தேரர்” என்ற சொற்பிரயோகம் செய்துள்ளதை தெ.பொ.மீ சுட்டிக்காட்டுகிறார்.
மயிலை.சீனி-வேங்கடசாமி கி.மு.358க்கு முன்னரே பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டில் சேவைப்பணிகளிலும், மருத்துவப் பணிகளிலும் ஈடுபட்டதை ஆதாரங்களோடு விளக்குகிறார்.
மணிமேலையில் கூறப்பட்டுள்ள பௌத்தம் ஹீனயான பௌத்தம் (தேரவாதம்) என்றும், பௌத்தத்தின் பெரும் பிரிவான மகாயான கொள்கைகள் பரவுவதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்றும் அவர் சான்றுகளோடு நிறுவுகிறார்.
இதே கருத்தோடு உ.வே.சாமிநாதய்யர் அவர்களும் உடன்பட்டு மணிமேகலையின் பௌத்தம் தேரவாதமே என்கிறார்.இதில் மாறுபடுபவர் வையாபுரிப் பிள்ளையாவார். மணி மேகலையில் மகாயான கருத்துக்கள் சில உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி மணிமேகலை எடுத்துரைப்பது மகாயான பௌத்தமே என்கிறார் அவர்.
பழங்காலத்தில் இருந்து கருத்து மோதல்கள், வாதப்போர்கள் இந்தியாவில் நிகழ்ந்து வந்துள்ளது என்ற அமர்த்தியா சென் கருத்து, தமிழகத்திற்கும் சாலப்பொருத்தமானது என்பதையே மேற்கண்டவை உணர்த்துகின்றன.
இரு பெரும் பிரிவுகள்:
இதற்கும் மேலாக மற்றொன்றையும் நாம் கண்ணுறுதல் வேண்டும். இந்தியாவின் தொன்மையான தத்துவத் தளத்தில் பல்லாயிரக் கணக்கான வேறுபட்ட சிந்தனைகள் முகிழ்ந்துள்ளன. கருத்தாலும், வடிவத்தாலும், தரத்தினாலும், சிந்தனை ஆழத்தாலும் வேறுபட்ட இந்த சிந்தனைகள், கடல் போல் பரந்துபட்டவையாக உள்ளன. இவற்றை வகைப்படுத்துதல் கடினம்.
எனினும், இரண்டு வகைகளாக இவற்றை நாம் படிக்கவும் ஆராய்ந்திடவும் இயலும். ஒன்று, அதிகார வர்க்க சார்பு கொண்டு, உடைமை வர்க்கங்களின் குரலாக ஒலிக்கும் சிந்தனைகள். மற்றொன்று, அடிமைப்பட்டு, உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி வாழ்ந்து வந்துள்ள அடக்கப்பட்ட மனிதர்களின் குரலாக ஒலிக்கும் சிந்தனைகள். இவர்களே சமூகத்தின் பெரும்பான் மையினராய் இருந்தனர்.
தத்துவம் எனும் துறையை எடுத்துக் கொண்டால், உபநிடதம், வேதங்கள், அத்வைதம், துவைதம் என்று விரியும் ஏராளமான ஆன்மீகத் தத்துவங்கள் பிற்காலத்தில், உழைப்போரைச் சுரண்டி வாழும் சிறு கும்பலின் நலன் காப்பவையாகவே இருந்து வந்துள்ளன. இந்தத் தத்துவங்களுக்கு இடையே ஆயிரம் முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள், சண்டைகள் இருக்கலாம். ஆனால், சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாட்டில் இவை அதிகார வர்க்கத்தினரிடம், குறிப்பாக நிலவுடைமை வர்க்கங்களின் பால் துணை நிற்கின்றன. மன்னராட்சி முறையை தெய்வாம்சமாக நிலைநாட்டின.
இதற்கு நேர் எதிரான தத்துவங்களில் முதன்மையானது, உலகாயத வாதம். தமிழ் இலக்கியங்களில் பூதவாதம் என குறிப்பிடப்படுகிறது. மனிதனின் உணர்வைத் தாண்டி உலகம், பூதம் எனப்படும் பொருள் உளது என்றும், அதுவே நிஜமானது என்றும், பூதவாதம் விளக்கு கிறது. இந்தப் பொருளுக்கு அப்பாற் பட்டதும், அதனைக் கட்டுப் படுத்துவதும், அதன் படைப்பு உருவாக்கத்துக்கு காரணமானதுமான கடவுளை உலகாயதவாதம் ஏற்றுக்கொள்ளவில்லை. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனை என்றும், மனிதனது சிந்தனையில் தான் அது உதித்தது எனவும் உலகாயதவாதம் வாதிடுகிறது.
இந்திய நாத்திகத்திலும் பன்முகம்:
இந்திய தத்துவங்களில் ஆன்மீக தத்துவங்களுக்கிடையே பல பிரிவுகள் கருத்துவேறுபாடுகள், கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன. இது மட்டுமல்ல.கடவுள் மறுப்புத் தத்துவங்களிலும் பல்வேறு பிரிவுகள் இருந்து வந்துள்ளன. முழுக்கமுழுக்க நாத்திகக் கொள்கை கொண்ட சார்வாகம் இந்திய தத்துவத்தில் மிகவும் பழமையானது.
இவர்கள் பொருள், உலகு, பிரபஞ்சம் அனைத்தையும் படைத்தது கடவுள் இல்லை என்று வாதிட்டவர்கள் தங்களது பொருள் முதல்வாதக் கருத்துக்களை நிறுவிட அவர்கள் நீடித்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
பொருள்கள் குறிப்பிட்ட அளவில் ஒன்றுசேரும் போது ஒரு புதிய பொருள் உருவாவது போலவே, மனித உடலில் உள்ளடங்கிய பொருட்களின் சேர்க்கையில்தான் உயிரும் உணர்வும் தோன்றுகிறது என்று அவர்கள் வாதிட்டனர். அதாவது, அறிவியல் ரீதியாக, பொருட்களின் தன்மையை விளக்க முயன்ற முதற்பெரும் அறிவியலாளர்கள் சார்வாகர்களே.
மணிமேகலையில் சமய கணக்கர் தம் திறன் கேட்ட காதையில் பூதவாதி தனது விளக்கத்தைக் கூறுகிறார். அதில் ஒரு பொருள் வேறு பொருளோடு சேரும் போது புதிய பொருள் உருவாகிறது எனும் கருத்திற்கு சில உதாரணங்களை அளிக்கின்றார்.
“தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றுங் கூட்டத்து மதுக்களி பிறந்தாங்கு...”
தாதகி பூவையும், கருப்புக் கட்டியையும் சேர்த்து கொதிக்க வைத்தால் மது எனும் புதிய பண்புள்ள ஒரு பொருள் உருவாவது போல், ஐம்புலன்களின் சேர்க்கையால் உணர்வு வருகின்றது என்கிறார் பூதவாதி.
சார்வாகர்களின் அறிதல் கொள்கை :
சார்வாகர்களது அறிதல் கொள்கையும் சுயசிந்தனை சார்ந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஏதும் இல்லை என்று வாதிட்ட அவர்கள், பொருளைப் பற்றியும், அதன் தன்மைகளைப் பற்றியும் அறிய முடியும் என்று வாதிட்டனர்.இவ்வாறு அறிவதற்கான கருவிகள் தமிழக தத்துவங்களில் அளவைகள் என அழைக்கப்படுகின்றன. கண் உள்ளிட்ட ஐம்புலன் களால் அறிவதே உண்மை என அவர்கள் கருதினர். இது காட்சி அளவை என்று அழைக்கப்படுகிறது.
மணிமேகலையில் ‘சமயக் கணக்கர் தம் திறன் கேட்ட காதை’யில் எல்லாத் தத்துவவாதிகளின் தத்துவங்களையும் மணிமேகலை கேட்டு அறிகின்றாள். கடைசியாக பூதவாதியின் முறை வருகின்றபோது, பூதவாதியின் பொருள் முதல்வாத கருத்தினை கேட்டு முடித்த பிறகு பூதவாதியிடம் கேள்வி ஒன்றை கேட்கிறாள்.
“உனக்கு தாயும் தந்தையுமான பெற்றோரை எவ்வாறு அறிவாய்? அனுமான அளவையில் அறிவதே அன்றி எவ்வாறு அறிவாய்? மெய்மையான பொருள்யாவும் அனுமானம் முதலிய அளவையில் அன்றி அறிதற்கு அரியனவாம்.”
(மணிமேகலை உரை)
இது கேள்வி என்றும் கூறமுடியாது. மணிமேகலையை எழுதிய பௌத்தரான சீத்தலைச் சாத்தனார், பூதவாதியின் அளவை கொள்கைகளை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மணிமேகலையின் கேள்வி மூலம் குறிப்பால் உணர்த்துகிறார்.
வெறும் கண்களாலும், இதர ஐம்புலன்களாலும் காண்கின்ற காட்சியே உண்மை என்றால், இன்னார்தான் உனது தாய் தந்தையர் என்பதை காட்சியால் மட்டும் உணர முடியுமா என்பதே கேள்வி. இதற்கு அனுமானம் தான் (ஐகேநசநnஉந) துணைபுரியும் என்பது மணிமேகலையின் கருத்து.
அதாவது, கண்ணால் காண்பதே மெய் என்ற கூற்று எல்hவற்றுக்கும் பொருந்தாது. சிலவற்றை அனுமானித்துத்தான் உணர முடியும். பானையை பார்க்கிற போது, அதனை உருவாக்கிய குயவன் உண்டு என்பதை அனுமானிக்க முடியும்.
இந்த வாதங்களைச் சொல்லி, பூதவாதிகள் அனுமானம் என்ற அறிதல் கருவியையே ஒதுக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்திய பொருள் முதல்வாதத்தின் மீது உண்டு. இந்தக் குற்றச்சாடை சங்கரர் தனது பிரம்மசூத்திர உரையில் வலுவாக சுமத்துகிறார். அன்று நிலவிய இந்தக் கருத்தைத்தான் சீத்தலைச் சாத்தனாரும் மணிமேகலையில் எழுதுகிறார்.
ஆனால், உண்மையில், சார்வாகர்கள் அனுமானம் எனும் அளவை முழுக்க நிராகரிக்கவில்லை. இதை அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ஆதாரங்களோடு, ‘லோகாயதம்’ உள்ளிட்ட தனது புத்தகங்களில் நிரூபித்துள்ளார்.
அனுமானம் என்ற அளவையைப் பற்றி சார்வாகர்களின் உண்மை நிலை என்ன?
பானை இருப்பதனால் குயவன் என்பவன் உண்டு எனும் வகையில் அனுமானிக்கிற முறையை சார்வாகர்கள் எதிர்க்கவில்லை. அதேபோன்று தாய் தந்தையரை ஏற்றுக் கொள்ளுகிற வகையிலான அனுமானத்தையும் அவர்கள் மறுக்கவில்லை.
இந்த வகை அனுமானங்களை நடைமுறை வாழ்க்கையில் நிரூபிக்க முடியும். சார்வாகர்களின் ஆட்சேபணை எங்கு எழுகிறது என்றால், பானை - குயவர் அனுமானத்தின் மூலம் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க முயலும் போதுதான். பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீக தத்துவத்தைத்தான் சார்வாகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குயவனை கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது?
எனவேதான், சார்வாகர்கள் காட்சி அளவையும், அனுமான அளவையும் இணைத்து உண்மைகளை அறியும் கொள்கையை வலியுறுத்தினர். இந்த அறிவியல் பார்வையை முளையிலேயே கிள்ளி எறிந்த “பெருமை” இந்திய கருத்து முதல் வாத தத்துவங்களுக்கும், நால்வருண முறைக்கும் உண்டு. இன்று தமிழகத்தின் தத்துவ வளர்ச்சி இரண்டு பண்புகளை வளர்த்து வருகிறது. 1.பன்முகத்தன்மை, 2. பொருள் முதல்வாத அறிவியல் சிந்தனை. இந்த இரு வழியும் பிற்போக்குத் தத்துவங்களை எதிர்த்து போராட ஆயுதங்களாக உள்ளன.

விதைகள் சட்டம் 2004

விதைகள் சட்டம் 2004
விவசாயிகளை பாதுகாக்காதுகே.பாலகிருஷ்ணன்
நாடு முழுதும் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயிகள் தாங்களே எண்ணற்ற வகையான விதைகளை உற்பத்தி செய்து பாதுகாத்து பராமரித்து பயன்படுத்தி வந்துள்ளனர். சுமார் 4 லட்சம் நெல்வகைகள் உலகின் நீண்ட நெடும் வரலாற்றில் இருந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர் ஆர்.எச்.ரிச்சார்யா என்ற நெல் ஆராய்ச்சியாளர் மத்தியப்பிரதேசம், சட்டீ°கர் மாநிலங்களில் மட்டும் சுமார் 20000 வகையான நெல் விதைகளை சேகரித்துள்ளார்.. இன்றும் நமது நாட்டில் 3000 நெல் வகைகள் பயன்பாட்டில் இருப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பல தானியங்கள், பழங்கள், காய்கறிகள், எண்ணை வித்துக்களின் விதைகளை விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவத்தில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்.


விதைகள், தாவரங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை பேணவும், விஞ்ஞான ஆய்விற்கு உட்படுத்தவும், விவசாயத் தொழிலாளி, குத்தகை விவசாயி ஆகியோர்களின் அனுப ஞானத்தையும், விஞ்ஞானக்கண்டுபிடிப்புக்களையும், இணைக்கவும் அவர்களை நவீன தொழில் நுட்பங்களில் தேர்ந்தவர்களாக ஆக்கவும், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் ஒரு இசைவான பார்வையும், முரண்படாத கோட்பாடும், அதனை அமுலாக்க சட்டங்களும் அவசியம். ஆங்காங்கு செயல்படும் ஆராய்ச்சி பண்ணைகள் அவசியம். உயிர்க்கரு வங்கிகள், தொழில் நுட்ப வங்கிகள் அவசியம். இவை அனைத்தும் எளிதில் ஏழை விவசாயிகள் அணுகக் கூடிய வகையில் அமைக்கப்படுவது அவசியத்திலும் அவசியம். மத்திய மற்றும் பல மாநில அரசுகளின் பார்வைகள் இப்படி இல்லை. விவசாயத்தை வர்த்தக நோக்கோடும், பெருமுதலாளிகளின் தொழில்களோடும் இணைத்து பணப்புழக்கத்தை பெருக்கும் பார்வையோடும் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே அரசுகள் செயல்படுகின்றன. இப்பொழுது உலகமயக்கொள்கையோடு இணைக்கிற முறையில் சட்டங்களும், அணுகுமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பார்வையில் புதிய விதைச்சட்டம் இந்திய அரசால் கொண்டு வரப்பட இருக்கிறது. இச்சட்டம் நமது விவசாயத்தை வளர்க்காது. இதை நம்பி வாழும் விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகளை வறுமைப் பள்ளத்திலுருந்து மீளவிடாது. அவர்களது உழைப்பின் உபரி முன்னைவிட வேகமாக பறிபோகும். இந்தப்பின்அணியோடு வர இருக்கிற படுபிற்போக்குத்தனமான விதைச்சட்டத்தின் பாதகங்களை ஆராய்வோம்.
இந்திய நாட்டில் 1960ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட பசுமைப் புரட்சியையொட்டி குறுகிய கால - அதிக மகசூல் விதைகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் மத்திய - மாநில அரசுகள் மூலம் உருவாக்கப்பட்டன. இதற்னெ 1961ம் ஆண்டு தேசிய விதைகள் கார்ப்பரேஷன் என்பது உருவாக்கப்பட்டது. பின்னர் 1967ம் ஆண்டு உலக வங்கியின் உதவியோடு “தேசிய விதைகள் திட்டம்” (சூயவiடியேட ளுநநனள ஞசடிதநஉவ) என்பது உருவாக்கப்பட்டு, 17 மாநிலங்களில் விதைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.
அதுவரை பெரும் பகுதி அரசுத் துறையில் நடைபெற்று வந்த விதை உற்பத்தியில் 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “விதை உற்பத்தி வளர்ச்சியில் புதிய கொள்கை” தனியார் துறையினை ஊக்குவிப்பதாக அமைந்தது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கும் வேலையைக் கூட அரசுத்துறை பண்கைள் துவங்கிய காலத்திலிருந்தே ஒழுங்காக செய்யவில்லை. விதைத் தேவையை பூர்த்தி செய்ய எந்த திட்டமும் அதனிடமில்லை. பணக்கார விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகையாகவும், ஆளும் கட்சிக்கு அரசியல் விளம்பரமாகவும் அவைகள் இருந்தன. ஏழை விவசாயிகள் சொந்தமாக தயரிக்கும் விதைகளை நம்பியிருக்க நேரிட்டது. இதன் விளைவாக விவசாயிகளிடையே, விதை பரிவர்த்தனை உறவு வலுப்பட்டது. காலப்போக்கில் நிhவாகச் சீர்கேடுகள், ஊழல் ஆய்விற்கு போதுமான நிதி ஒதுக்கீட்டை ஒதுக்காமை, ஆய்வாளர்களை நியமிக்காமை அல்லது ஊக்கம் கொடுக்காமை, இத்தியாதி நடவடிக்கைகளால் அரசே குற்றுயிரும், குலைஉயிருமாக அரசாங்க விதைப்பண்ணை களை ஆக்கிவிட்டது. மறுபக்கம் தரமான விதை தயாரிக்கும் நவீன நுட்பங்கள் ஏழை விவசாயிகளிடம் பரவாததால் விவசாயிகள் தரமான விதையின்றி தவித்தனர். கடன் சுமைக்கும் இது பிரதான காரணமாக ஆனது. தனியார்துறையை நாடி நிற்கத்தள்ளப்பட்டனர். விளம்பர ஏமாற்று தவிர தனியார்துறை வேறு எதையும் செய்யவில்லை. என்றாலும், தங்களது தவிப்பிற்கு “அரசின் திட்டமிட்ட கொள்கையே” என்ற பார்வை விவசாயிகளிடையே பரவாத சூழலில் தனியார் மயக் கொள்கைகளை சந்தடி இல்லாமல் அரசு புகுத்தியது. தானும் விதைகளை தயாரித்து விற்கமுடியும் என்ற பிரமைகளையும் அரசின் நடவடிக்கை வளர்த்தது. பன்னாட்டு கம்பெனிகளை இந்திய விதை வர்த்தகத்தில் அனுமதித்திடவும் உலக வங்கியும் - அமெரிக்காவும் கடன் மற்றும் நிதி உதவியினை இந்திய அரசுக்கு வழங்கின. இக்கொள்கையின் விளைவாக பல பன்னாட்டுக் கம்பெனிகள் - உள்நாட்டுக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு - விதைகள் உற்பத்தி வர்த்தகம் ஏற்றுமதி - மற்றும் இறக்குமதிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மான்சாட்டோ, பேயர் உட்பட சுமார் 10 பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்திய விதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டில் சுமார் 400 கம்பெனிகள் விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இவைகளில் சுமார் 30 பெரிய நிறுவனங்களாகும். மீதம் உள்ளது சிறிய மற்றும் நடுத்தர வகையை சார்ந்தவை. இவைகளில் அரசுத்துறையில், கூட்டுறவுத்துறையில் 10 நிறுவனங்கள் மட்டும் உள்ளன. ஆகமொத்தத்தில் விதைகள் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் அரசுத்துறையின் பங்கு வெகுவாக குறைத்து பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு பல மடங்கு உயர்ந்துள்ளன.


என்னதான் லாப வெறிகொண்ட தனியார் நிறுவனங்களின் பகீரத தலையீடு இருந்த போதிலும், தற்போதும் சுமார் 70 சதம் விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சிறு,குறு விவசாயிகளின் கைக்கு எட்டாத துhரத்தில் விதைச்சந்தை உள்ளது. இதனால் தரக்குறைவான விதைகளே விவசாயிகள் பெற முடியும் என்ற நிலையும் உள்ளது. இந்த ஊனத்தை இன்றைய நிலையில் அரசு கவனம் செலுத்த வேண்டியது இப்பொழுது நடைமுறையில் இருக்கும், சிறு, குறு விவசாயி களிடையே இருக்கம் விதை பரிவர்த்தன முறைகளை பலப்படுத்தும் முறைகளே, தரமான விதைகளை தயாரிக்கும், நவீன தொழில் நுட்பங்களை, இந்த விவசாயிகள் அறிய வழிவகுத்தல், ஆங்காங்கு அதிக செலவில்லாமல் பெறக்கூடிய ஆலோசனை மையங்கள், விதை பாதுகாப்பு பெட்டகங்கள், குளிர்சாதன வசதிகள், வாகன வசதிகள், சாலை வசதிகள் போன்ற ஏற்பாட்டை வளர விட வேண்டுமே தவிர, பன்னாட்டு நிறுவனங்களின் விதை விற்பனை ஆக்கிரமிப்பல்ல; அதற்கு பாதுகாப்பல்ல, அவர்கள் வந்தாலும், அவர்களளோடு சந்தையில் போட்டி போடக்கூடிய தொழில் நுட்பத் திறனுள்ளவர்களாக விவசாயிகளை ஆக்குவதே விதைச்சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆகமொத்தத்தில் விதைகளை உற்பத்தி செய்வது பாதுகாப்பது, பராமரிப்பது, பயன்படுத்துவது, பரிமாறிக்கொள்வது என்பது சிறு, குறு விவசாயிகள்தத்தளிப்பைத் தவிர்க்க உருவாக்கிக் கொண்ட இயல்பான உரிமையாகும், ஒத்துழைப்பு பண்பாடாகும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவசாயிகளின் இன்று அனுபவித்து வரும் இந்த பாரம்பரியமான தாங்களாக உருவாக்கிக் கொண்டஉரிமைக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு ஒரு மசோதா தயாரரய் இருக்கிறது.


இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “விதைகள் சட்டம் 2004” என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இம்மசோதா அதே வடிவத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்படுமாயின், விவசாயிகளின் மேற்கண்ட பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதுடன், இவ்வுரிமைகள் அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்படும். விதைகள் உற்பத்தி - விநியோகம் அனைத்தும் பன்னாட்டு - உள்நாட்டு நிறுவனங்களின் அதிகார வரம்புக்குட்பட்டவையாக மாற்றப்பட்டு விடும். இந்திய அரசு விரும்பினால் கூட தலையிட முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.


விதைகளை மையமாகக் கொண்டு வேளாண்மை தொடர்பான பல சட்டங்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அமுலில் உள்ளன. விதைகள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் தனியார் சம்பெனிகளின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியப்பட்டன. இவ்வகையில் நிறைவேற்றப்பட்டதே 1966ம் ஆண்டின் விதைகள் சட்டம். இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு இன்றைய தேவைக்குப் பொறுத்தமான சட்டமாக மாற்ற வேண்டியது அவசியமானதுதான். ஆனால், மத்திய அரசின் புதிய விதைகள் சட்டம் இதற்கு நேர் எதிரான நோக்கங்கள் கொண்டதாகும்.
காட் பேச்சுவார்த்தை முடிவின் படி மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை தொடர்பான ஒப்பந்தம் (ஹடிஹ), உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், அதனைத் தொடர்ந்து இந்திய அரசு செயல்படுத்தி வரும் உலகமய, தாரளமய, தனியார் மயக் கொள்கைகளின் விளைவாக இந்திய நாட்டின் பாரம்பரிய விவசாயத்தில் பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளின் படையெடுப்புகள் அதிகரித்து வருவது அறிந்ததே. விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் வேளாண் வர்த்தகத்தை தங்களது முழுக்கட்டுப் பாட்டில் கொண்டு வர வேண்டுமென்ற கனவை நினைவாக்க, விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம் என்ற “தண்டு வடத்தைக்” கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே முடியும் என்பதைப் பன்னாட்டுக் கம்பெனிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் புரிந்து வைத்துள்ளன. இந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, இக்கம்பெனிகள் துடியாய் துடித்துக் கொண்டுள்ளன.


வேண்டாத சனியனை விருந்துக்கு அழைத்ததைப்போல் இந்திய அரசு ஏற்றுக்கொண்ட றுகூடீ நிபந்தனைகளின் படி, ஏற்கனவே உருவாக்கப்பட்ட விதைகள் சட்டம் 1996, காப்புரிமைச்சட்டம் உட்பட பல சட்டங்களை அடிப்படையில் மாற்றி இயற்ற வேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தின் அடுத்த கட்டமே மத்திய அரசு சமர்ப்பித்துள்ள புதிய விதைகள் சட்டம் 2004, “விதைத் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கவும் ... விதைகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கான வழிவகைகளை உருவாக்குவது” சட்டத்தின் நோக்கம் என இந்திய விவசாயத்துறை விளக்கமளித்துள்ளதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடியும்.


சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து விதைகளும், மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென இச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. விதைகளைப் பதிவு செய்வதற்கு மத்திய அரசால் அமைக்கப்படும் மத்திய விதைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விதைகள் பதிவு அல்லது நிராகரிக்கும் விவகாரத்தில் இக்குழுவின் முடிவே இறுதியானது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைகள் அல்லது நடவு பயிர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். பதிவு செய்யப்படாத விதைகள் அல்லது நடவுப் பயிர்களை விற்பனை செய்வது, பயன்படுத்துவது, பாதுகாப்பது, பரிமாறிக்கொள்வது அனைத்தும் முற்றிலுமாகத் தடைசெய்யப்படுகிறது.
சாதாரண விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் விதைகளையோ அல்லது மரக்கன்றுகளையோ மத்திய அரசுக்கு அனுப்பி பதிவு செய்வது சாத்தியமான ஒன்றல்ல. அப்படியானால் அவர்கள் விதைகளை உற்பத்தி செய்வது சட்டவிரோமானதாகும். செல்வாக்குபடைத்த விதைக்கம்பெனிகள் மட்டுமே தங்களது விதைகளை பதிவு செய்யவும், அவ்விதைகளை மார்க்கெட்டில் விற்கவும் முடியும். இதன்படி வராலாற்றுக் காலந்தொட்டு விவசாயிகளுக்கு விதைகள் மீதிருந்த உரிமை தட்டிப்பறிக்கப்பட்டு விட்டது. தங்களுக்குத் தேவையான விதைகளுக்கு விதைக்கம் பெனிகளிடம் கையேந்தி நிற்கும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இனி தனது வயலில் என்ன சாகுபடி செய்வது என தீர்மானிக்கும் உரிமைகளைக் கூட விவசாயிகள் இழந்து விட்டார்கள். விதைகள் வழங்குவதை தங்கள் கையில் வைத்துக் கொண்டுள்ள நிறுவனங்கள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கிராமத்து விவசாயிகளது தலைவிதியை தீர்மானிக்க முடியும். இதனால் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
விதைகளுக்கான விலைகளை தீர்மானிப்பது குறித்து சட்டத்தில் எந்த வரைமுறையும் இல்லை.


எனவே, பதிவு செய்துள்ள கம்பெனி விதைகளின் விலைகளை பலமடங்கு உயர்த்தி விவசாயிகளை கொள்ளையடிக்க முடியும். ஏற்கனவே பல்முனை சுரண்டலுக்குள்ளாகியுள்ள விவசாயிகள் இனி விதை கொள்ளைக்கும் பலியாக வேண்டும்.
விதைகளை பதிவு செய்வதில் மத்திய விதைக்குழுவின் முடிவே இறுதியானது என்பது பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் ஏற்பாடாகும். ஏற்கனவே மான்சாட்டோ கம்பெனி தனது மரபணு விதைகளை பல நாடுகளில் அறிமுகப்படுத்த கோடிக்கணக்கான டாலர் லஞ்சம் கொடுத்த சம்பவங்கள் அம்பலமாகியுள்ளன. சமீபத்தில் இந்தோனேசியா அதிகாரிகளுககு 7 லட்சம் டாலர் கையூட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையூட்டுகள் வழங்குவதும் - கையூட்டுகளைப் பெற்றுக்கொண்டு தரமற்ற விதைகளைப் பதிவு செய்து இந்திய விவசாயத்தை நாசப்படுத்துவதும் இனி அன்றாட நிகழ்ச்சிகளாகிவிடும்.
ஒருமுறை பதிவு செய்யப்பட்ட விதை ஆண்டு பயிராக இருப்பின் 15 ஆண்டுகளுக்கும், நீண்ட காலப் பயிர்களாக இருப்பின் 18 ஆண்டுகளுக்கும் பதிவு பெற்றவர் உரிமம் கொண்டாட முடியும். பதிவு பெற்றவர் மேற்கண்ட பதிவுக்காலத்துக்குப் பின்னர் மீண்டும் இதே காலத்துக்கு மறுபதிவு செய்து கொள்ளவும் முடியும். இக்காலம் முழுவதற்கும் பதிவு பெற்றவரின் உரிமையில் வேறுயாரும் தலையிட முடியாது என திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி விதைகள் பதிவு பெற்றவரின் தனிச் சொத்தாக மாறிவிடும்.
அரசு மற்றும் தனியார் விதை பரிசோதனை மையங்களை விதைகளின் தரத்தை தீர்மானிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் தரம் குறைந்த விதைகளுக்கும் முறையற்ற சான்றிதழ்களை தனியார் பரிசோதனை மையங் களிலிருந்து பெற்றுக் கொள்ள வழி ஏற்படும். விதை நிறுவனங்களே இத்தகைய சோதனை மையங்களை ஏற்படுத்திக் கொள்வது அந்நிறுவனங்களுக்கு எளிதானதாகும்.
அடுத்த ஆபத்து விதை சான்றிதழ் வழங்கும் பணியிலிருந்து படிப்படியாக அரசு வாப° வாங்கிக் கொள்ளும் என்பது தான். விதை உற்பத்தி செய்யும் தனிநபர் அல்லது நிறுவனம் நாளடைவில் தங்களது விதைகளுக்கான சான்றிதழ்களை (ளுநநன ஊநசவகைiஉயவiடிn) அவர்களே வழங்கிக் கொள்ள முடியும் என்பது விதை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சர்வ சுதந்திர பாத்யதையாகும். விதைகளின் தரத்தைப் பரிசோதிக்கவும், சான்றிதழ் வழங்குவதையும் கூட அரசு நிறுவனங்களின் மூலம் தான் நடத்த வேண்டு மென்பதை இச்சட்டம் கட்டாயப்டுத்தவில்லை என்பதிலிருந்தே இச்சட்டம் யார் நலனை பாதுகாக்க முன்மொழியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
மிகவும் கொடுமையானது என்னவெனில் வழக்கமாக விவசாயிகள் பயன்படுத்தி வரும் விதைகளையும் ஒருவர் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள சட்டத்தில் வழிவகையுள்ளது. இவ்வாறு பதிவு செய்யக் கூடாது என மத்திய விதைக்குழுவிற்கு மனு செய்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அதேபோன்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட விதையின் பதிவினை ரத்து செய்ய வேண்டுமென யாரும் கோரவும் முடியாது. ஆம்! பதிவு செய்யப்படும் விதை கம்பெனிகளுக்கு முன்னால் பல்லிளிக்க வேண்டிய பரிதாப நிலை விவசாய தேசத்துக்கு.


“விதைகளின் தரத்தை பாதுகாப்பதற்கே” சட்டம் என முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தரத்தை பாது காப்பதற்கான பொறுத்தமான சரத்துக்கள் சட்டத்தில் இல்லாதது வினோதமானதாகும். தரமற்ற விதைகளை விநியோகித்து அதனால் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய நட்ட ஈடு பெறவும் சட்டத்தில் வழியில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி நீதி மன்றம் மூலம் நிவாரணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நொந்து நுhலாகிப்போயியுள்ள விவசாயிகள் நீதிமன்றத்தின்நெடிய படிக்கட்டுகளில் ஏறி நட்ட ஈடுகோரி அலைவது எப்படி சாத்தியமாகும்? அதிலும் செல்வாக்கு படைத்த விதைக்கம்பெனி களை எதிர்த்து அப்பாவி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது, நீதி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.
கடந்த ஆண்டுகளில் மான்சாட்டோ கம்பெனியின் பி.டி.பருத்தி விதைகளால் சாகுபடிகள் அழிந்து நாடுமுழுவதும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலையில் மாண்டது நாடறிந்ததே. புதிய சட்டம் இந்த பரிகாரத்திற்கே நடைமுறையில் இடமளித்துள்ளது.
இச்சட்டத்தை அமுல்படுத்திட பகுதிவாரியாக விதை ஆய்வாளர்கள் (ளுநநன ஐளேயீநஉவடிசள) நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூட்டிய வீடுகளையும் - குடோன்களையும் கூட பூட்டுக்களை உடைத்து சோதனை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உள்ளது. தீவிரவாதி களின் வீடுகளைக் கூட பூட்டை உடைத்து சோதனை செய்வதற்கு சட்டம் ஒழுங்கு காவல் துறை நீதிமன்றம் மூலம் தேடுதல் வாரண்ட் பெற வேண்டும். ஆனால் விதை இன்°பெக்டர்கள் அத்தகைய நிபந்தனை ஏதுமின்றி தானடித்தமூப்பாக யாருடைய வீடுகளையும் உடைத்து சோதனையிட முடியும். விவசாயிகளை மிரட்டி சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்டிப்போடவே இத்தகைய முரட்டு அதிகாரங்கள் விதை இன்°பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பழைய சட்டத்தில் மத்திய விதைக்குழுவில் மாநிலங்களுககு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய சட்டத்தில் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதானது மாநிலங்களுககான உரிமைகளைக்கூடத் தட்டிப் பறிப்பதாகும்.
சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத விதைகள் நடுபவர்கள் விற்பனையில் ஈடுபட்டால் ரூ.50000 வரை அபராதமும் - 6 மாதம் சிறைத் தண்டனைகள் வழங்கிட முடியும். அதாவது, பதிவு செய்யாத ஒருபடி நெல் விதையை அடுத்த வீட்டு விவசாயிக்கு விற்றாலோ அல்லது வீட்டுத் தோட்டத்தில் முளைத்த ஒரு வாழைக்கன்றையோ, தென்னங்கன்றையோ விற்பனை செய்தாலோ, அவர் கதி அதோ கதிதான். இத்தகைய தேச விரோத குற்றங்களை (!?) கண்டுபிடித்து வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதற்கு விதை இன்°பெக்டர்கள் சுற்றிக் கொண்டே இருப்பார்கள் (இவர்களுக்கு வேறு எந்த வேரலயும் கிடையாது). இத்தகைய விவசாய விரோத, தேச விரோத அம்சங்கள் பல இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. ஏழை, சிறு, குறு விவசாயிகள் பெரும் பகுதியாக உள்ள இந்திய திருநாட்டில் எந்த சட்டமும் இவர்களது பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்க வேண்டும். ஆனால் புதிய சட்டம் பன்னாட்டு, உள்நாட்டு விதை கம்பெனிகளை பாதுகாப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. விவசாயிகள் பாதுகாப்பு பற்றி குறிப்பிடும் சில சரத்துக்களும் நடைமுறை சாத்தியமற்றதாகவே உள்ளது.


விவசாயிகள் விதை உற்பத்தி உரிமையை பாதுகாக்கும் வகையில் 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், “பயிர்வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம்” (ஞடயவே ஏயசவைநைள ஞசடிவநஉவiடிn யனே குயசஅநசள சுiபாவ ஹஉவ - 2001) நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தில் விவசாயிகளுக்கு சில குறைந்த பட்ச பாதுகாப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 1/2 ஆண்டுகளுக்குப் பின்னரும், இச்சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் பதிவு செய்து அமுலாக்குவ தற்கான ஏற்பாடுகள் இன்று வரை மேற்கொள்ளப்பட வில்லை. இது பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவ தாகும். இந்திய அரசால் முன்மொழியப்பட்டு சட்டமாக்கப்பட்ட பி.வி.பி.எப்.ஆர் (ஞஏஞகுசு ஹஉவ) சட்டத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, இதற்கு நேர் எதிர் மறையான விதைகள் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது இந்திய அரசின் உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டுவதாகும்.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ள இச்சட்டம் நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. விவசாயிகள், விவசாய சங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக விஞ்ஞானிகள், இடதுசாரி கட்சிகள் போன்ற அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. எனவே, இந்த சட்டத்தில் கீழ்க்கண்ட திருத்தங்களைச் சேர்ப்பது அவசியமான தாகும். மசோதாவை அப்படியே நிறைவேற்றுதை எதிர்த்தும், கீழ்க்கண்ட திருத்தங்களை வற்புறுத்தியும், நாடுதழுவிய மேலும் வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
விவசாயத் தொழிலாளர் சங்கமும், விவசாயிகள் சங்கமும், விவசாயிகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கியக் கடமையாகக் கருத வேண்டும்; தொழிலாளர் விவசாயி களின் கூட்டு முயற்சிக்கு வழிகாண வேண்டும். தங்களது வறுமைக்கும், கடன் தொல்லைக்கும் அடிப்படை இயற்கை அல்ல; கிரகங்களின் சேட்டையுமல்ல; அரசுகளின் கடைக்கண் பார்வை நம்மீது விழாததுமல்ல; அரசுகளின் திட்டமிட்ட அரசியல் பார்வையும், கொள்கையும், சுரண்டும் வர்க்க சார்புத் தன்மையேடு இருப்பதே காரணம் என்பதை உணர வைக்கும் ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். பெரும் திரளாக விவசாயிகள் பங்கேற்கும் இயக்கங்களே அரசைப்பணிய வைக்கும் என்ற உண்மையை சங்கங்களின் தலைவர்கள் உணர வேண்டும். இன்று சின்னத்திரை, பத்திரிக்கை இவைகளின் மூலம் பப்ளிசிட்டி போதும், மக்களின் பங்கேற்பு முக்கியமல்ல என்ற கருத்து பரவலாக உள்ளதை பலகீனமாகப் பார்க்க வேண்டும். மக்கள் திரளும் போது பப்ளிசிட்டி தானாகக் கிடைக்கும், அரசும் பயப்படும். இல்லையெனில் போட்டி டி.வி சேனல் மூலம் மக்களை குழப்பிவிடும். இந்த உணர்வோடு, கீழ்க்கண்ட கோரிக்கைகளுக்காக வலுவான இயக்கம் நடத்திட நம்மால் இயன்றதை எல்லாம் செய்வோம்.
1. விவசாயிகள் பாரம்பரிய உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளித்திட வேண்டும்.
2. தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து விதைகளையும் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். விதைகளை பதிவு செய்யக் கூடாது எனவும், செய்யப்பட்ட பதிவினை ரத்து செய்திட கோருவதற்கு மக்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். பதிவு பெற்றவர் பதிவு செய்த விதையின் மீது உரிமை கொண்டாடுவதற்கான காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைப்பதுடன் - மறு பதிவுக்கு வாய்ப்புகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
3. மோசமான விதைகளால் ஏற்படும் சாகுபடி இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட விதை நிறுவனம், விதையினை வழங்கும் ஏஜெண்டுகள் முழு நட்ட ஈட்டினை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு குறுகிய கால வரம்புக்குள் வழங்கிட வேண்டும்.
4. விதை இன்°பெக்டர்களின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
5. மத்திய விதைகள் குழுவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதிகள் வழங்கிட வேண்டும்.
6. விதைகள் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் தனி நபர்களுக்கோ, நிறுவங்களுக்கோ வழங்கக் கூடாது. சான்றிதழ் வழங்கும் ஆணையம் மத்திய - மாநில விதைகள் குழுவின் ஆலோசனையுடன் மாநில அரசுகள் அமைத்திட வேண்டும்.
7. விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாப்பது சட்டத்தின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.

கம்யூனி°ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் - 3
கம்யூனி°ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் - 3
பி.ராமச்சந்திரன்புரட்சிகரமான போராட்டத்தை தலைமை தாங்க வேண்டிய வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடமையை தொழிலாளி வர்க்கம் நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை பற்றி முந்தைய கட்டுரைகளில் விளக்கியிருந்தோம்.
உண்மையான வர்க்க ஒற்றுமை


இத்தகைய வர்க்கமாக தொழிலாளி வர்க்கமாக வளருவதானது சிரமமான ஒரு பணியாகத்தான் இருக்கும். ஆரம்ப நிலையில் தொழிலார்கள் தங்களுடைய வாழ்க்கை - வேலை நிலைமைகளில் முன்னேற்றம் காண்பதற்காகவும் தங்களுக்கு எதிராக சுரண்டும் வர்க்கங்கள் தொடுக்கும் பல்வேறு தாக்குதல்களை முறியடிப்பதற் காகவும் ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த கட்டாயத்தினால்தான் தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபடுவது என்ற ஒரு நிலைமை உருவாகிறது. தொழிற்சங்கத்தை அமைக்காமலேயே போராடி தோல்வியைச் சந்தித்த அனுபவங்கள்தான் நாளடைவில் நமக்கு ஒரு சங்கம் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. இதன் விளைவாக தொழிற்சங்க இயக்கம் தோன்றுகிறது.


தொழிற்சங்க போராட்டங்களும் நடைபெறுகிறது. இந்த காரியம் அனைத்தையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக தானாகவே ஏற்படுகிறது. கம்யூனி°ட்டு இயக்கம் தோன்றுவதற்கு முன்னதாகவே வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றன. தொழிற்சங்க இயக்கமும் படிப்படியாக வலுப்பெற்றது. வெளியில் இருந்து வரும் தூண்டுத லினால், தொழிற்சங்க இயக்கம் தோன்றுவதில்லை. போராட்டங் களும் நடைபெறுவதில்லை. கசப்பான அனுபவங்களின் மூலமாகத் தான் வர்க்க உணர்வும் தொழிற்சங்க போராட்டங்களும் உதய மாகின்றன. இதைப்பற்றித்தான் லெனின் குறிப்பிடும் போது, “தொழிலாளி வர்க்கத்தின் தன்னெழுச்சியான இயக்கத்திற்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் உண்டு; அதில் தலையிட்டு சரியான திசையை அழைத்துச் செல்வது கம்யூனி°ட்டுகளின் கடமை என்று விளக்குகிறார்.”


ஆக, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் தொழிற்சங்க அமைப்பும் போராட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பார்க்கிறோம். அதற்கு மாறாக தொழிற்சங்க போராட்டம் என்பது குறுகிய சுயநலத்திற்காக நடைபெறும் இயக்கம் என்ற விரக்தியான ஒரு பார்வை இருக்கத்தான் செய்கிறது. கம்யூனி°ட்டு களின் பார்வையில் தொழிற்சங்க இயக்கமும், போராட்டங்களும் ஒரு அவசியமான கட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்த தொழிற்சங்க இயக்கமும் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் முதல் கட்டமாகும். புரட்சிகரமான வர்க்கமாக இவ்வர்க்கத்தை வார்த் தெடுப்பது என்ற நோக்கத்துடன் கம்யூனி°ட்டுகள் பணியாற்று கிறார்கள். தன்னிச்சையான வெளிப்பாடுகளை குறிப்பிட்ட திசை வழியில் வளர்த்து முன்னுக்கு கொண்டு செல்வது கம்யூனி°ட்டு களின் கடமை. ஆரம்ப கட்டத்தை புறக்கணித்து நேரடியாக புரட்சிகரமான இயக்கத்திற்கு தான்டிச் செல்லலாம் என்ற கண்ணோட்டம் வெறும் “புரட்சிகர வாய்ச்சவடாலாகவே அமையும்”


தொழிற்சங்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டு அதை உயர்ந்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்துடன்தான் கம்யூனி°ட்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமான பங்கினை ஆற்றுகிறார்கள்.
இப்பணியின் ஆரம்ப நோக்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வை ஊட்டுவதும் தொழிற்சங்க இயக்கத்தை வலுவான சக்தியாக மாற்றும் நோக்கமும் கம்யூனி°ட்டுகளுக்கு உண்டு. இந்த உணர்வு பூர்வமான பணியில் ஈடுபடும் போது, பல்வேறு நோக்கங்கள் இருக்கத்தான் செய்யும்.
முதல் நோக்கமானது சிதறிக்கிடக்கும் தொழிலாளர்களுக்கு நாம் அனைவரும் ஒரு வர்க்கம் என்ற எண்ணத்தையும் நம்மைச் சுரண்டும் வர்க்கங்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்ற மிகவும் ஜீவாதாரமான கண்ணோட்டத்தை வளர்ப்பதும் நமது நோக்கமாகும். தொழிற்சங்க இயக்கம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கத்தை கட்ட முடியாது என்றும், மறு பக்கம் புரட்சிகரமான இயக்கம் இன்றி தொழிலாளி வர்க்கம் ஒரு மகத்தான சக்தியாக உருவாகாது என்றும் கம்யூனி°ட்டுகள் தெளிவாக பார்க்கிறார்கள்.
தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் ஆயுதமாக உருவாகின்றன என்பதைப் பற்றி முன்பு குறிப்பிட்டோம். இதுவானது அனைத்துப் பகுதி தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய முழு வர்க்கத்தின் அமைப்பாகும் என்ற உணர்வுடன் நாம் பணியாற்றுகிறோம். தொழிற்சங்கங்கள் அனைத்துத் தொழிலாளர்களையும் உட்கொள்ளும் உண்மையான வெகுஜன °தாபனமாக வளர்வது என்பது நமது நோக்கம். கம்யூனி°ட் இயக்கத்தை சார்ந்தவர்களும், சாராதவர்களும் தொழிற்சங்கங்களில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று நமது கட்சி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்துள்ளது.
நமது கட்சிக்கான ஒரு அமைப்பாக தொழிற்சங்கங்களைக் காணக்கூடாது என்று கட்சி அழுத்தம், திருத்தமாக சுட்டிக் காட்டியுள்ளது. நேர்மாறாக, அனைத்து தொழிலாளர் களையும் ஒன்று திரட்டும் வகையில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனி°ட்டுகள் முயற்சிக்கிறார்கள்.
இப்பணியானது, பல்வேறு சிக்கல்கள் காரணமாக கடுமையான தோர் பணியாகும். துவக்க கட்டத்தில் தான் செய்யும் பணி (டிரேட் - பிட்டர், டர்னர், மெஷின் மேன்...) அடிப்படையிலேயே தங்களின் ஒற்றுமையை தொழிலாளர்கள் குறுகிய பார்வையுடன் பார்க் கிறார்கள். இத்தகைய போக்குகள் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்துவதற்கு தடையாக இருக்கின்றன. இதை கம்யூனி°ட்டு கள் உறுதியாக எதிர்க்கிறார்கள். முதலாளி வர்க்கத் திற்கு எதிராக அனைத்துத் தொழிலாளர்களுடைய அமைப்பாக தொழிற்சங்கத்தை உருவாக்கி தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்ற நோக்கத்துடன் நாம் இன்றும் இத்தகைய சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் போக்குகள் இருக்கத்தான் செய்கிறது.


இதேபோல் நமது நாட்டில் ஜாதி உணர்வுகள் வலுவாக இருப்பதின் காரணமாக, தொழிற்சங்க இயக்கத்தை ஜாதி அடிப் படையில் பிளவுபடுத்தும் ஆபத்தான போக்குகளும் வர்க்கப் போராட்டத்தை நடைமுறையில் சீர்குலைக்கின்றன. இத்தகைய போக்குகளை உணர்வுப் பூர்வமாகவும் பொறுமையாகவும், விடாப்பிடியாகவும் எதிர்த்துப் போராடுபவர்கள் கம்யூனி°ட்டுகள்.
பல்வேறு பிரிவு மக்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய தொழிலாளர்கள் தொழிற்சாலையில் சங்கமிப்பதன் காரணமாக, உயர்ந்த மட்டத்தில் வர்க்க ஒற்றுமையை கட்ட முடியும். ஆயினும், மொழி அடிப்படையில் பல தொழிலாளர்கள் பிரிந்து கிடப்பதை நாம் பார்க்கிறோம். மேலும், பூகோளப் பகுதி அடிப்படையிலும் தொழிலாளிகள் தனித்தனியாக செயல்படும் போக்குகளும் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற போக்குகள் வர்க்க ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் என்ற காரணத்தினால், அவற்றையும் நாம் முறியடிக்க வேண்டியுள்ளது.


பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் மத்தியில் மற்றுமொரு தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களில் பலர் அந்தக் குறிப்பிட்ட ஆலையில் தொழிலாளி என்hறல், தாங்கள்தான் என்று என்னுகிறார். காஷுவல் தொழிலாளர்கள், காண்ட்டிராக்ட் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பகுதியினருக்காகவும் உள்ள அமைப்பாகும் தொழிற்சங்கம் என்பதை உணர மறுத்து குறுகிய வட்டத்திலேயே தொழிலாளர் இயக்கத்தை நடத்திச் செல்ல முயற்சிக்கிறார்கள். இதுவும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு குந்தகமான ஒரு பார்வையாகும். இதையும் எதிர்த்து உழைப்பாளிகள் அனைவரையும் (தன்னடைய உழைப்பை முதலாளிகளுக்கு பல வடிவங்களில் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்) உழைப்பாளிகள் அனைவரையும் தொழிற்சங்கத்தில் ஒன்றுபடுத்தும் பணியில் கம்யூனி°ட்டுகள் மும்முரமாக செயலாற்றுவார்கள்.


ஆலைக்குள் பிரிவினைப் போக்குகள் எவ்வளவு ஆபத்தானதாக உள்ளனவோ, அதே போல் எனது தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களை மட்டும் ஒன்றுபடுத்தும் கண்ணோட்டம் வலுவாக உள்ளது. இப்போக்கானது உண்மையான வர்க்க ஒற்றுமைக்கு எதிரானதாகும். மின்சாரத் தொழிலாளர்கள், போக்குவரத்து, பஞ்சாலை போன்ற பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் தொழிற்சங்கங்களை அமைப்பது இயல்பு. ஆனால், பகுதி பார்வை இல்லாமல் அனைத்துத் தொழிலாளர்களையும் வர்க்கரீதியாக ஒன்றுபடுத்துவது கம்யூனி°ட்டுகளின் நோக்கமாகும். இதேபோல், வட்டாரம், மாவட்டம், மாநிலம் போன்ற வட்டத்தில் மட்டும் நிற்காமல் தொழிலாளர்களை அகில இந்திய அளவிலும் வர்க்கத்தை ஒன்று படுத்தும் நோக்கத்துடன் நாம் செயல்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட வகையில் தெளிவான உணர்வுடன தொழிற் சங்க இயக்கங்களை வலுப்படுத்துவதும் உண்மையான வர்க்க ஒற்றுமையின் அமைப்புகளாக தொழிற்சங்கங்களை நடத்திச் செல்லும் நோக்கத்துடன் கம்யூனி°ட்டுகள் செயல்படுகிறார்கள். தொழிலாளர்களின் பகுதிப்பார்வை, குறுகிய எண்ணங்கள் போன்றவற்றை படிப்படியாக அகற்றி ஒரு மகத்தான வர்க்கமாக வார்த்தெடுப்பதற்கு இக்கடமைகளை செய்தாக வேண்டும்.
தொழிற்சங்க இயக்கமும் - அரசியலும்


பல தொழிற்சங்கங்களும், தலைவர்களும் தொழிற்சங்கங்களை குறுகிய வட்டத்தில் மட்டும் நடத்திச் செல்கிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை பெறுவதுகூட நாட்டின் மொத்தமான அரசியல் - பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பார்வைகூட தொழிலாளர்களுக்கு போதிக்காமல் செயல்படுகிறார்கள். நாம், நமது ஆலை, நமது வசதிகள் என்று மட்டும் சிந்திக்கும் எண்ணப் போக்குகளை வேண்டும் என்றே தொழிலாளர்கள் மத்தியில் பரப்புகிறார்கள். அந்தச் சங்கத்தையும், உறுப்பினர்களையும் பொதுவான தொழிலாளர் இயக்கத்தில் இருந்து வேறுபடுத்தி வைக்க முயற்சிக்கிறார்கள். “அவர்களின் சொந்த சொத்தாக தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டோ, தொழிற்சங்க தலைவர்களாக பவணி வருகிறார்கள்.”
இதற்கெல்லாம் நேர்மாறாக நாட்டின் அரசியல் - பொருளாதார சூழ்நிலைகளையும், ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளையும், அரசின் போக்குகளையும் கணக்கில் வைத்துக் கொண்டு போராடவேண்டியுள்ளது என்ற அடிப்படையான பார்வையை தொழிலாளர்களுக்கு போதிக்க முயற்சிக்கிறது உண்மையான தொழிற்சங்கம். இந்த திசையில் செல்லும் போது, இயல்பாகவே தொழிலாளர்களின் அரசியல் உணர்வு நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இத்தகைய அரசியல் உணர்வு இல்லாமல், போராட்டங் களை நடத்தவும் முடியாது, வெற்றியும் பெறவும் முடியாது என்று தொழிலாளர்களை புரிய வைப்பது ஒரு தொழிற்சங்க கடமையாகும். உலக நிலைமைகளும், பொருளாதார அரசியல் நிலைமைகள், ஏகாதிபத்திய சதிகள், தொழிலாளி வர்க்க இயக்கங்களின் முன்னேற்றங்கள் போன்றவைகளுக்கும், இன்று நடத்தக்கூடிய போராட்டங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கம்யூனி°ட்டுகள் போhதிக்கிறார்கள்.


ஜனநாயக உரிமைகள் தொழிற்சங்க போராட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கியமானது. ஆளும் வர்க்கங்களின் கடுமையான தாக்குதல்களையும், தலையீடுகளையும் சந்தித்து முன்னேறுவதற்கு ஜனநாயக உரிமைகள் இனியமையாததாகும். இதைப்பற்றியெல்லாம் ஏராளமான அனுபவங்களை தொழிலாளர் கள் பெற்றிருக்கிறார்கள். (சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் பிரம்மான்மான போராட்டத்தின் போது, இது குறித்து ஏராளமான அனுபவங்கள் தொழிற்சங்க இயக்கத்திற்கு கிடைத்துள்ளது.)
அண்மைக்காலமாக நமது நாட்டில் பெருமளவில் தலைதூக்கியுள்ள வகுப்புக்கலவரங்களும், ஜாதி மோதல்களும் தொழிற்சங்க இயக்கத்திற்கு தடையாக உள்ளதை நமது அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஆகவே, வகுப்புவாத - ஜாதி முரண்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்க இயக்கம் போராட வேண்டியுள்ளது. மத நல்லிணக்கத்திற்காகவும், ஜாதி கொடுமைகளுக்கு எதிராகவும் தொழிற்சங்க இயக்கம் தெளிவான நிலையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த திசை வழியில் சங்கங்களுக்கு வழிகாட்டுவதில் கம்யூனி°ட்டுகள் முன்னணியில் நிற்க வேண்டும்.
இன்றைய சூழலில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அன்றாடப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சமூக கொடுமை களுக்கு எதிரான இயக்கங்களுக்கு தொழிற்சங்கங்கள் முழுமையான ஆதரவை அளிக்காமல், உண்மையான தொழிற்சங்க ஒற்றுமையை வளர்க்க முடியாது.


தாங்கள் வாழும் சமூகத்தில் தோன்றியுள்ள பிரச்சினைகளில் தலையிடாமல், முழுமையான வர்க்க கடமையை நிறைவேற்ற முடியாது. தொழிற்சங்க இயக்கம் மூலமாக வாழ்க்கை மேம்பாட்டிற் காகவும், வாழ்க்கை சூழல்களின் பாதுகாப்பிற்காகவும் அனைத்து தொழிலாளரையும் ஒன்றுபடுத்தும் முயற்சியின் பகுதியாக மேலே குறிப்பிட்ட பல்வேறு எதார்த்த பிரச்சினைகளில் தெளிவான நிலை எடுக்கும் அளவிற்கு தொழிற்சங்க இயக்கம் அரசியல் - சமுதாய காரியங்களில் தலையிட வேண்டிய அவசியத்தை புறக்கணிக்க முடியாது.


இந்த திசை வழியில் தொழிற்சங்க இயக்கத்தை நடத்திச் செல்வதானது, தொழிற்சங்க இயக்கத்தின் அரசியல் பகுதியாகவே நாம் பார்க்க வேண்டும். ஆயினும், புரட்சிகரமான ஒரு வர்க்கமாக தொழிலாளி வர்க்கத்தை உயர்த்துவதற்கு இவையெல்லாம் இன்றியமையாத துவக்க நிலை கடமைகள். புரட்சிகரமான உணர்வை வளர்ப்பதற்கு கம்யூனி°ட்டுகள் மற்றும் பல கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தொழிற்சங்க இயக்கத்திற்கு வழிகாட்டும் போது, அடிப்படையான புரட்சிகரமான கடமைகளை புறக்கணிக்க முடியாது. தொழிற்சங்க இயக்கம், தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். புரட்சிகரமான வர்க்கமாக, இந்த வர்க்கத்தை உயர்த்துவற்கு பல கடமைகள் உண்டு; கிராமப்புற ஏழை விவசாயிகளோடு நெருக்கமான உறவை உருவாக்கும் ஏற்பாடுகள், சங்கத்தை ஜனநாயக நெறிமுறைகளை வழுவாது பின்பற்றுவது; சங்க உறுப்பினர்களின் பங்கேற்பிற்கும், முடிவு எடுக்கும் உரிமைக்கு உத்தரவாதமளிக்கவும் கம்யூனி°ட்டுகள் கவனமாக செயல்பட வேண்டும். இதுபற்றி அடுத்து பார்ப்போம்.

இரான் அணுசக்தித் துறை பிரச்சனை

இரான் அணுசக்தித் துறை பிரச்சனை
பின்னணியும் பார்வையும்


பாலு

கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி பன்னாட்டு அணுசக்தி அமைப்பு (ஐஹநுஹ) டைய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இரானுக்கு எதிராக அமெரிக்க - ஐரோப்பிய வல்லரசுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இரான் நாட்டிற்கெதிரான தீர்மானத்தை மறுத்து, எதிர்த்து வாக்கு அளித்து சின்னஞ்சிறு தென் அமெரிக்க நாடான வெனிசுலா, சீனாவும், ரஷ்யாவும் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்து விட்டன. 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் நிhவாகக் குழுவில் சில அமெரிக்க அடிவருடி
நாடுகளையும் மேலை நாட்டு வல்லரசுகளையும் தவிர வேறுசில வளரும் நாடுகளும் உள்ளன. இவற்றில், நம்நாட்டை விடச் சிறியவையும், வலுக்குறைந்தவையு மான பத்து நாடுகள் - அல்ஜீரியா, பிரேசில், மெக்ஸிகோ, நைஜீரியா, பாகி°தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, துனிசியா, வியத்நாம் மற்றும் ஏமன் - ஏகாதிபத்திய வல்லரசுகள் கொண்டு வந்த, இரானுக்கெதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அணிசேராஇயக்கத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றாக, அதன் °தாபக நாடுகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ள இந்தியா, இரான் எதிர்ப்புத் தீர்மானத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பக்கமாக நின்று வாக்களித்தது, நமது சர்வதேச அந்த°திற்கு ஊறு விளைவித்துள்ளது மட்டுமின்றி, இதுவரை இந்திய நாட்டில் பொதுவான அங்கீகாரம் பெற்றிருந்த அணிசேரா அயல் நாட்டுக் கொள்கைக்கு முரணானதும் ஆகும்.
சமனற்ற உலக அணு ஆயுத/ அணுசக்திக்களம் :
சர்வதேச அரங்கத்தில் மிகவும் அசமத்துவமான தன்மை கொண்டுள்ள துறைகளில் அணுசக்தி / அணுஆயுதத்துறை முக்கியமான ஒன்றாகும். “அங்கீகரிக்கப்பட்ட” அணு ஆயுத அரசுகள் ஐந்து: அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்°, ரஷ்யா, மக்கள் சீனம். இவை தவிர அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் இ°ரேல், பாகி°தான் மற்றும் இந்தியா. இவை அணுஆயுத நாடுகளாக இன்னும் “அங்கீகாரம்” பெறாதவை.
வலுவான சோசலிச முகாம் இருந்த, 1950 - 1990 கால கட்டத்தில், சோசலிச நாடுகளும், அணிசேரா நாடுகளும் இணைந்து உலகம் தழுவிய அணுஆயுத அகற்றலுக்கு “யூனிவர்ஸல் நியூக்ளியர் டிசார்மென்ட்”டிற்கு - தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன. ஆனால், உலகில் அணு குண்டுகளை (1945ல், ஹிரோசிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களில்) வீசி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரே நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம், அணுஆயுதங்க ளைக் குறைப்பததிலோ கைவிடுவதிலோ ஈடுபாடு காட்டவில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து புதிய புதிய அணு ஆயுதங்களைப் பரிசோதித்து, உற்பத்தி செய்து வந்துள்ளது. இதன் மூலம் முன்னாள் சோவியத் யூனியன் மீது ஆயுதப் போட்டியைத் ணித்து சோசலிசத்தை பலவீனப்படுத்தவும் அதைப்பயன்படுத்தியது. அதே சமயம், அணுஆயுதப் பரவலை அது விரும்பவில்லை.
1960களின் இறுதியில் அணுஆயுதங்கள் தொடர்பாக ஒரு பன்னாட்டு ஒப்பந்தியத்தை சில நாடுகள் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம், “அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தம்” அல்லது சுருக்கமாக என்.பி.டி (சூஞகூ - சூரஉடநயச சூடிn-ஞசடிடகைநசயவiடிn கூசநயவள) என்றழைக்கப்படுகிறது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் முற்றிலும் சமன் அற்ற தன்மை கொண்டது. இதில் கையெழுத்திட்டுள்ள, அணு ஆயதம் இல்லாத நாடுகள் அமைதியான வகையில் அணுசக்தியைப் பயன்படுத்தலாம். அதற்குத் தேவையான யூரோனியம் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் தொழில் நுட்பம் பெறவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதே சமயம், இந்நாடுகள் தங்களது அணுசக்தி நிலையங்களை பன்னாட்டு அணுசக்தி நிலையங்களை பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் சோதனைக்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் நோக்கம், இந்த நாடுகள் தங்களது அணுசக்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் யூரோனியம் எரிபொருளை மேலும் செழுமைப்படுத்தி அணுகுண்டு உற்பத்திக்குப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதாகும்.
என்.பி.டி ஒப்பந்தத்திற்கு இருமைய குறிக்கோள்கள் இருப்பதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்று, அணு ஆயுதப் பரவல் துடப்பு, மற்றொன்று, அணு ஆயுதக் குறைப்பும், இறுதியில் முழுமையான அணு ஆயுத அகற்றலும் தான். ஆனால், நடைமுறையில், என்.பி.டி யின் முழுக்கவனமும் அணு ஆயுதமல்லாத நாடுகள் அவற்றைப் பெற்று விடாமலும், அதற்கான தொழில் நுட்பத்தைப் பெற்றுவிடாமலும் தடுப்பதிலேயே இருந்தது. அதாவது, ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருந்த நாடுகளின் அணு ஆயுத ஏகபோகத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமே ஏகாதிபத்தியம் என்.பி.டி யைப் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருகிறது. (இதற்கு விதிவிலக்காக தனது செல்ப்பிள்ளையான இ°ரேலுக்கு மட்டும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது ஏகாதிபத்தியம்).
இந்த என்.பிடி. ஒப்பந்தம் சமனற்றது என்பதே இதுவரை இந்தியாவின் அதிகார பூர்வநிலைப்பாடு. நாம் என்.பி.டி யில் கையெழுத்திடவில்லை. 1974ல் இந்தியா முதன்முதலில் ஒரு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியதிருந்து, மேலைநாட்டு வல்லரசுகள் நமது நாட்டு அணுசக்தி உற்பத்திக்கு உதவி செய்ய மறுத்தது மட்டுல்லாமல், ஏற்கனவே நம்முடன் செய்துகொண்டிருந்த அணுசக்தி உற்பத்திக்கான யூரேனியம் அளிப்பு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டார்கள். இருப்பினும், சோவியத் ஒன்றியத்தின் உதவியுடனும், தற்சார்பு அடிப்படையிலான முயற்சிகளின் விளைவாகவும் நாம் இன்று ஏறத்தாழ 4000 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் பெற்றுள்ளோம். அணுசக்தி தொழில் நுட்பத்தில் தற்காப்பு அடிப்படையில் ஓரளவிற்கு முன்னேறியுள்ளோம்.
என்.பி.டியில் நாம் இடம் பெறாததால் ஏகாதிபத்திய வல்லரசுகள் நமக்கு நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றையும், அவை ‘இரட்டைப் பயன்பாடு’ கொண்டவை, அதாவது அவை ஆற்றல் உற்பத்திக்கு மட்டுமின்றி ஆயுத உற்பத்திக்கும் பயன்படக் கூடியவை என்று கூறி, தர மறுத்து வந்துள்ளனர். பிறநாடுகளையும் நமக்குத் தரவிடாமல் தடுத்து வந்துள்ளனர். 1998ல் போக்ரான் குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட பின்னர் இத்தகைய தடைகள் மேலும் இறுக்கமாகின. இன்றைய இந்திய அரசு, இந்த இறுக்கத்தை உடைக்க ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்குப் பணிந்து சமரசப்போக்கை கையாளுவது என்ற அபாயகரமான பாதையை தேர்ந்தெடுத்தது. இரான் பிரச்சனையில் அரசு அமெரிக்கா சார்பாக நடந்துகொண்டது.
இரான் அணுசக்தித்துறை பிரச்சனை
தற்பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானி°தானையும், இராக்கையும் கைப்பற்றியதோடு, இரான் மீது திரும்பியுள்ளது. எண்ணை வளமே இதற்கு காரணம் என்பது வெளிப்படை. கடந்த செப்டம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகளின் பொது அவையில் பேசிய இரான் ஜானதிபதி மஹ்மூத் அஹ்மதினே ஜபக், உள்நாட்டில் செழுமைப்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளைப் பயன்படுத்தி அணுசக்தி உற்பத்தி செய்வது இரான் நாட்டின் இறையாண்மை உரிமையாகும் என்பதைத் தெளிவு படுத்தினார். இது சரியான நிலைபாடு. அணுஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் 1974ல் இரான் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அணுசக்தி உற்பத்திக்கான அனைத்துப்படிகளையும் செயல்படுத்தத் தேவையான - உரேனியம் செழுமைப்படுத்துவது உள்ளிட்ட - நடவடிக்கைகளை, ஐ.ஏ.இ.ஏ பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குட்பட்டு, மேற்கொள்ள இரானுக்கு முழு உரிமை உண்டு. இரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறை வளர்ச்சிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், நாடு கடந்து செயல்பட முயலும் அமெரிக்க நாடாளு மன்றம் நிறைவேற்றியுள்ள “பிப்பா - இரான் எதிர் நடவடிக்கை” சட்டம் மூலம் , ஏராளமான முட்டுக்கட்டைகளைப் போட்டுள்ளது. இதனால், அமெரிக்கா உள்ள மேலை நாடுகளின் தயவில் செழுமைப்படுத்தப்பட்ட யூரேனியம் பெறுவது நம்பகமற்றது என்று நியாயமாகவே இரான் கருதுகிறது. ஆகவே, தனது அணுசக்தி உற்பத்தியை உள்நாட்டு மூலப்பொருள் மூலம் வளர்க்க முற்படுகிறது. தனக்கு அணுசக்தி உற்பத்தி உலைகளை உருவாக்கிட முழுஉரிமை இருந்தும்கூட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரிட்டன், பிரான்°, ஜெர்மனி ஆகியவற்றிற்கு நல்லெண்ணச் சலுகையாக தனது அணுசக்தி உற்ப்பத்தியில் உள் மற்றும் வெளிநாட்டு தனியார் மற்றும் பொதுத்துறையினர் பங்கேற்பார்கள் என அறிவித்தது. ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இரான் உரோனியம் எரிபொருளை செழுமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று கோருகின்றனர். அப்படிப்பட்ட முயற்சியில் இரான் வெற்றி பெற்றால், அதன் மூலம் அணுசக்தி உற்பத்திக்கென குறைவாகச் செழுமைப்படுத்தப்பட்ட யூரோனியம் மட்டுமின்றி, அணு ஆயுத உற்பத்திகுத் தேவையான கூடுதலாக செழுமைப்படுத்தப்பட்ட யூரேனியம் எரிபொருளை இரான் உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஏகாதிபத்திய நாடுகள் வாதிடுகின்றன. இந்த நோக்கத்துடன், செப்டம்பர் 24 ல் நடைபெற்ற ஐ.ஏ.இ.ஏ ஆட்சிக்குழுக் கூட்டத்தில் ‘இரான் நாட்டின் ராணுவ சார்பற்ற அணுசக்தி உற்பத்தித் துறை உலக அமைதிக்கும், பன்னாட்டுப் பாதுகாப்பும் ஊறு விளைவிக்கலாம்’ என்றும், ‘ எனவே இப்பிரச்சனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டும்’ என்றும் கூறும் தீர்மானம் ஒன்றை அவர்கள் கொண்டு வந்தனர். இத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு உடனடி முன் காரணமாக இருந்தது, ஏற்கனவே ஒரு நல்லெண்ணச் செய்கையாக யுரேனிய செழுமைப்பாட்டை நிறுத்தி வைத்திருந்த இரான், அதை மீண்டும் துவக்கியது. இந்தத் தீர்மானம் செல்லாது என்பதே உண்மை. காரணம், என்.பி.டி ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செழுமைப்படுத்த இரானுக்கு உரிமை உண்டு. மேலும், கடந்த செப்டம்பர் 2 ம் தேதி ஐ.ஏ.இ.ஏ பொது இயக்குநர் எல்.பரேடி, “இரான் நாட்டில் எந்த அணுசக்தி பொருளும் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை” என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்திய அரசின் தவறான வாக்களிப்பு
செப்டம்பர் 24,2005 அன்று ஐ.ஏ.இ.ஏ ஆட்சிக்குழுவில் ஏகாதிபத்திய நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் என்.பி.டி யின் கீழான தனது பொறுப்புக்களை இரான் மீறுவதாகவும், “ இரானின் அணுசக்தி திட்டம் அமைதி சார் நோக்கங்களுக்கு மட்டுமே என்று கூற இயலாது” என்றும் கூறுகிறது. உடனடியாக இப்பிரச்சனை ஐ.நா. பாதுகாப்புக்குழுவிற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று தீர்மானம் கூற வில்லை என்றாலும், நவம்பர் ஐ.ஏ.இ.ஏ கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. இரான் நியாயமற்ற முறையில் இத்தீர்மானத்தால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்தீர்மானம் என்.பி.டி ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டு, இரானின் இறை யாண்மையைப் பாதிக்கும் கோரிக்கைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, பிற என்.பி.டி ஒப்பந்த நாடுகளிலிருந்து இராங்ன வேறுபட்டது எனவும், அது கூடுதல் நிபந்தனைகளையும் கண்காணிப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் கூறுகிறது. இரண்டாவதாக, யூரேனியத்தை செழுமைப்படுத்தும் முயற்சியை இரான் கைவிட வேண்டும் என்று தீர்மானம் கோருகிறது. இது இரானின் என்.பி.டி ஒப்பந்தப்படியான உரிமைகளைப் பறிப்பதாகும். மூன்றாவதாக, ஏற்கனவே எந்த கூட்டத்திலும் வைக்கப்படாத ஒரு புதிய கோரிக்கையை வைக்கிறது. அதாவது, கன நீர் பயன்படுத்தும் ஆராய்ச்சி அணு உலையை அமைக்கும் முயற்சியை இரான் கைவிட வேண்டும் என்ற நியாயமற்ற, ஐ.ஏ.இ.ஏ ஆட்சிக்குழுவின் ஆக°ட்11,2005 கூட்டத்தில் கூட வைக்கப்படாத புதிய கோரிக்கை தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது.
வேண்டுமென்றே, இரானை ஒரு சிக்கலில் மாட்டிவிட்டு, இராக்கில் செய்தது போல ஒரு இன்°பெக்டர் ராஜ்யத்தை ஐ.ஏ.இ.ஏ கண்காணிப்பு என்ற அடுத்த கட்டமாக, இரானில் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற பீதியையும், புரளியையும் கிளப்பி விட்டு, இரான் மீது அரசியல் மற்றும் ராணுவ தாக்குதல் நடத்துவதே ஏகாதிபத்தியத்தின் நோக்கம். இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல. நமக்கு, நமது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கையும் ஆகும்.
அரசு நடவடிக்கையின் தீய விளைவுகள்
இந்தியா ஆதரித்த ஐ.ஏ.இ.ஏ தீர்மானம் ஒரு நாட்டின் இறையாண் மையைக் கேள்விக்குறியாக்குவது என்பதும் தெளிவு. ஆனால், பிரச்சனை இதுமட்டுமல்ல. இத்தீர்மானம், என்.பி.டி ஒப்பந்தத்தை முறைப்படி திருத்தாமலேயே, ஒரு ‘முன்னுதாரணம்’ மூலமாக ஏகாதி பத்தியத்திற்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வகை செய்கிறது. இன்று இரானைக் குறி வைத்தது போல், நாளை பிற வளரும் நாடுகளின் மீதும் இது ஏவப்படும்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அமெரிக்க நிர்பந்தங்களை எதிர்கொண்டு, இரானுடன் இந்தியா தனது நட்புறவை வலுப்படுத்தி வந்துள்ளது. இரானும், பல பன்னாட்டு அரங்குகளில் - குறிப்பாக, இ°லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடுகளில் - இந்தியாவிற்குச் சாதகமான நிலைபாடுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தலையிடும் முயற்சிகளை எதிர்த்துள்ளது. இரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறைகளில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு நல்வாய்ப்புக்களை அளித்துள்ளது. இதையெல்லாம் புறக்கணித்து, பிற வளரும் அணிசேரா நாடுகளிடமிருந்தும் விலகி, அமெரிக்க ஆதரவு நிலையை இந்திய அரசு எடுத்தது. இரான் - இந்தியா உறவுக்குப் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. வளரும் மற்றும் அணிசேரா நாடுகள் மத்தியில் இந்தியா மீது பெரும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளது போல், இந்தியாவின் ஆதரவு இல்லாமலேயே அமெரிக்கா - ஐரோப்பிய தீர்மானத்திற்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால், ஈக்வெட்டார், பெரு, கானா, சிங்கப்பூர் போன்ற ஏகாதிபத்திய அடிவருடி வளரும் நாடுகளின் ஆதரவு மட்டும் கிடைத்திருந்தால், இந்தப் பிரச்சனை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளுககும், ஏழை வளரும் நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையாகப் பார்க்கப்பட்டிருக்கும். ஆகவேதான், இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்துக் கொண்டது. இரானுக்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது அமெரிக்காவிற்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. அமெரிக்க அரசின் அயல்துறை கீழ்ச் செயலாளர் (அண்டர் செக்ரட்டரி) நிகல்° பர்ன் இந்தியாவின் ஆதரவை, இப்பிரச்சனையை வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான ஒன்றாகச் சித்தரிக்க இரான் மேற்கொண்ட முயற்சிக்குப் பலத்த அடியாகும் என்று வர வேற்றுள்ளார்.
இந்தியாவின் வாக்களிப்பு ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி புஷ் - இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் அணுசக்தித்துறையில் ஒத்துழைக்க அமெரிக்க அரசு முன் வந்த பொழுது, இரான் பிரச்சனையில் இந்தியா இரானுக்கு ஆதரவு நிலை எடுக்கும் என்றுதான் கடந்த கால அனுபவத்தில் யூகித்திருக்க முடியும். ஆகவே, அப்படித் தெரிந்துதான், அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தைப் போட்டிருக்க வேண்டும் அல்லது அந்த புஷ் - சிங் ஒப்பந்தம் போடுவதற்கே, இந்தியா இரானுக்கு எதிரான நிலை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டு, அதை மன்மோகன் சிங் ஏற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு ஊகங்களில், முதல் ஊகம் சரி என்றால், ஏற்கனவே ஐ.ஏ.இ.ஏ யில் உள்ள முறைப்படி, அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து உருவாக்கியே முடிவு எடுக்க வேண்டும் என்ற நமது முந்தைய நிலைப்பாட்டையும், ஐ.ஏ.இ.ஏ யின் பொது நடைமுறையையும் இந்தியா வலியுறுத்தியிருக்க வேண்டும். அது நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. இரண்டாவது யூகம் சரி என்றால், அமெரிக்காவின் இந்திய அரசு கையொப்ப மிட்டுள்ள அணுசக்தி ஓப்பந்தம் நாம் பெரும் விலை கொடுத்து வாங்கியது என்பது தெளிவாகிறது. இந்தியாவின் வருங்கால வலிமையைப் பற்றி அமெரிக்க அரசு ஒரு அங்கீகாரமான மதிப்பீடு செய்துள்ள நிலையில் மிகவும் பலவீனமான நிலைபாட்டை இரான் பிரச்சனையில் யூ.பி.ஏ அரசு எடுத்துள்ளது. தனது ஏகாதிபத்திய உலக ஆதிக்கத்திற்கு இந்திய -சீன நட்புறவு அபாயகரமானது என்ற துhரப்பார்வையோடு அமெரிக்கா இந்தியாவை தன்பக்கம் வளைத்துப்போடும் தந்திரத்திற்கு இன்றைய ஆட்சியாளர்கள் இரையாகி விட்டனர்.
முன் முரணற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக்குச் சொந்தக் காரர்களாகிய நமக்கும், பிற இடது சாரி சக்திகளுக்கும் இன்று எழும் முக்கிய சவால், இந்திய மக்கள் மத்தியில் நமது சரியான அயல்நாட்டுக் கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதும், யுபி.ஏ அரசை தனது நிலைபாட்டை மறு பரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளச் செய்வதும் ஆகும்.
இடதுசாரிகளின் நிலை
இந்தியாவின் அயல்நாடுக் கொள்கை ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டதாகவும், அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவதாகவும், அமைதி சார்ந்ததாகவும், பல துருவ உலகை உருவாக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும். அதுவே நாட்டு நலனையும், மக்கள் நலனையும் காக்கும். இதுதான் இந்தியாவின் அயல்நாட்டுக்கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய இடதுசாரி கண்ணோட்டம்.
இடதுசாரி கட்சிகளின் வலியுறுத்தலால், யூ.பி.ஏ அரசின் தேசிய குறைந்த பட்ச பொதுத்திட்த்தில் கீழ்க்கண்ட வரிகள் இடம் பெற்றன.
‘உலகு தழுவிய அணு ஆயுத அகற்றலுக்கும் அணுஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்குவதற்குமான முயற்சிகளில் (இந்தியா) தலைமைப் பாத்திரம் வகிக்கும்’. மேலும், அந்த திட்டத்தில் இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட தவறுகள் களயப்படும். குறிப்பாக, இந்தியாவை அமெரிக்காவின் “ தொலைநோக்குப் பங்காளி”(ளுவசயவநபiஉ யீயசவநேச) ஆக்க எடுத்த முயற்சிகள் கைவிடப்படும் என்ற புரிதல் இருந்தது. அயல்துறை அமைச்சர் நட்வர்சிங் உலக அணுஆயுத நீக்கலுக்குக்கான ராஜீங் காந்தியின் 1988 திட்டத்தை புதுப்பித்து அமல் செய்வதாகக் கூடக் கூறினார். ஆனால், படிப்படியாக யூ.பி.ஏ அரசின் அயல்நாட்டுக் கொள்கை என்.டி.ஏ யின் நாசப் பாதையிலே செல்வதை நாம் பார்க்கிறோம்
இரான் பிரச்சனையில், ஜூலை 18 சிங் - புஷ் ஒப்பந்தத்திற்கு முன்பு வரை அமெரிக்க நிர்பந்தங்களை சமாளித்து, இரான் ஆதரவு நிலை எடுத்து வந்த இந்திய அரசு படிப்படியாக அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்த விவரங்களை நவம்பர் 18, 2005 தேதியிட்ட ஆங்கில இருவார இதழ் ஃபிரண்ட்லைனில் ஏ.ஜி.நுராணி தொகுத்துக் கொடுத்துள்ளார். ஜூலை 18, ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிற்கு அணு சக்தி தொழில் நுட்பம் தருவதற்கு, அந்த ஒப்பந்தத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாத நிபந்தனையாக இரான் எதிர்ப்பு நிலையை இந்தியா ஐ.ஏ.இ.ஏ யில் எடுக்க வேண்டும் என்பது உள்ளது. இது செப்டம்பர் மாதம் இந்திய - அமெரிக்க ஜூலை ஒப்பந்தம் பற்றிய அமெரிக்க பாராளுமன்ற விசாரணையில் தெளிவாக வெளிவந்தது. செப்டம்பர் 24 ல் இந்தியா எடுத்த மோசமான நிலைபாட்டை தொடர்ந்து நியாயப்படுத்த யூ.பி.ஏ அரசு அமைச்சர் களைப் பயன்படுத்ததாமல் அயல்துறைச் செயலர் ஷியாமா சரணை இறக்கி விட்டுள்ளது. அவர் முன்பின் முரணாக பல கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளார். அக்டோபர் 24 அவர் தில்லியில் ஆற்றிய உரையைப் படித்தால் எந்த அளவுக்கு இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும உலகளவில் அணு ஆயுத அகற்றல் என்ற இலக்கைக் கைவிட்டு, அணு ஆயுத வல்லரசுகள் பாணியில் அணு ஆயுதப் பரவலைத் தடை செய்வது என்பது பற்றி மட்டுமே முன்மொழிந்தார்கள் என்பது வெளிப்படும்.
ஆக, இத்தகைய சூழலில், இடதுசாரி அமைப்புகள் இரான் பிரச்சனையில் முன்வைத்துள்ள சரியான நிலைபாட்டை மக்கள் மத்தியில் கொண்ட செல்வது, யூ.பி.ஏ அரசின் தடுமாற்றத்தையும் சரணாகதிப்பாதையையும் எதிர் கொண்டு வரும் நவம்பர் ஐ.ஏ.இ.ஏ கூட்டத்தில் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்க உதவும்.
இடதுசாரி நிலைபாடு கீழ்வரும் அம்சங்களைக் கொண்டது.
1. இரான் - இந்திய நட்புறவு நமக்கு முக்கியமானது. குறிப்பாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற வகையிலும், இந்தியாவின் எதிர் கால எரிபொருள் தேவைகளை நிறைவு செய்வது என்ற நோக்கிலும், இந்தியாவிலிருந்து ஆப்கானி°தான், மத்திய ஆசியா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சென்றடைய போக்குவரத்து, தகவல் தொடர்பு இணைப்புக்களை வலுப்படுத்தவும், பயங்கர மற்றும் மத தீவிர வாதங்களை எதிர்க்கவும் மிகவும் அவசியம்.
2. இரானுக்கெதிரான அமெரிக்க வல்லரசின் சூழ்ச்சிகளுககு இந்தியா துணை போகக் கூடாது. இந்திய - அமெரிக்க அணுத்துறை ஒப்பந்த்திற்கும், மண்டல மற்றும் பன்னாட்டுப்பிரச்சனைகளில் நாம் எடுக்கும் நிலைபாடுகளுக்கும் முடிச்சுப்போடுவதை ஏற்கக் கூடாது, ஏற்க முடியாது. இத்தகைய இணைப்பை நாம் வலுவாகவும் சமரசமின்றியும் நிராகரிக்க வேண்டும்.
3. நம்பர் 24 ஐ.ஏ.இ.ஏ கூட்டத்தில் இரான் பிரச்சனை ஓட்டுக்கு வந்தால், இந்தியா கீழ்க்கண்ட கொள்கைகள் சார் நிலைபாட்டை எடுக்க வேண்டும்:
அ. பிரச்சனை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
ஆ. அமைதிசார் அணு திட்டம் பின்பற்ற இரான் நாட்டிற்கு முழு உரிமை உண்டு.
இ. இரான், தான் ஏற்றுக்கொண்டுள்ள ஒப்பந்தப் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
ஈ. இந்தப் பிரச்சனையை ஐ.ஏ.இ.ஏ யின் வரம்பிற்குட்பட்டே தீர்க்க முடியும்.
4. இந்தியா, தனது நிலைபாட்டை ரஷ்யா, சீனா மற்றும் அணிசேரா நாடுகளுடன் நெருக்கமாக விவாதித்து இறுதி செய்ய வேண்டும்.
இன்று சுமூகத் தீர்வு காண ராஜாங்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.ஏ.இ.ஏ குழு ஒன்று இரானுக்குச் சென்றுள்ளது. இந்தியா ஒரு பொறுப்பான அணிசேரா நாடு என்ற அடிப்படையில் தனது அந்த°தையும், செல்hவக்கையும் பயன்படுத்தி, பிரச்சனையை தீர்த்துவைக்க ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்ற வேண்டும். பாரம்பர்யமாக, ஐ.ஏ.இ.ஏ முடிவுகள் ஒருமித்த கருத்து அடிப்படையில் எடுக்கப்படுபவை. அதற்கே இந்தியா முயற்சிக்க வேண்டும். வல்லரசுகளின்ள நிர்பந்தங்களுக்கு பணியக் கூடாது. ஒருமித்த கருத்து ஏற்படாவிடின், இந்தியா வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரிக்கவும் வேண்டாம். எதிர்த்தும் வாக்களிக்க வேண்டாம். வாக்கு மறுப்பு (ஹளெவயin) நிலை எடுக்க வேண்டும்.
இரான் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட பிரச்சனை. வரும் காலங்களில் ஆளும் வர்க்கங்களின் டுஞழு கொள்கைகள், அவர்களை மேலும், மேலும் அரசியல் ரீதியாகவும், ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்கு இரையாகும் பாதையில் கொண்டு செல்லும். ஆகவே, இரான் பிரச்சனையில் மட்டுமின்றி, பொதுவாகவே சரியான அயல்நாட்டுக் கொள்கைக்காவும். அதையும் தாண்டி ஏகாதிபத்திய ஆதரவு / சரணாகதி போக்குகளுக்கு அடிப்படையாக உள்ள டுஞழு கொள்கைகளை எதிர்த்தும் மக்களைத் திரட்ட வேண்டிய மாபெரும் பொறுப்பு நம்முன் உள்ளது.