Marxist Tamil

Wednesday, May 11, 2005

பாசிசத்தை வீழ்த்திய 60ஆம் ஆண்டு

பாசிசத்தை வீழ்த்திய 60ஆம் ஆண்டுசோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்

என். குணசேகரன்

வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர். இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன். அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய நாசமும், அழிவும் சொல்லில் அடங்காது. போரில் லட்சக்கணக்கானோர் மடிந்து போயினர். மனிதன் அதுகாறும் சாதித்த அனைத்தின் மீதும் உலகந்தழுவிய அளவில் அழிவு தாண்டவமாடியது. உயிரோடு அன்று வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களும் சொல்லொணத் துன்ப துயரங்களுக்கு ஆளாயினர்.போர் எவ்வளவு கொடூரமானது என்பதும், அதை எந்த வகையிலாவது தவிர்க்க வேண்டும் என்பதும் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு நமக்கு எடுத்துரைக்கும் எச்சரிக்கை.எண்ணற்ற துயரங்களுக்கு இடையில் அன்றைய சோவியத் மக்களும், செஞ்சேனையும், பாசிசத்தை வீழ்ச்சி அடையச் செய்தனர். இது ஒருநாடு பெற்ற வெற்றி என்பதாகக் கருதிடக் கூடாது. சோசலிசம் எனும் தத்துவம் உலக மக்களை அடிமைத்தனம், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து மீட்டு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர எத்தகு தியாகத்தையும் செய்திடவல்ல மேன்மையான தத்துவம் என்பதையே இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது.ஏனெனில், பாசிசம் மனித இனத்தின் சுதந்திர வேட்கையை முற்றாக ஒழிக்க முயன்றது. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி, நாடுகளையும் மக்களையும் தனது அடக்குமுறை ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உலகமே அழிந்து போனாலும் அழியட்டும் என்ற வெறியோடு பாசிசவாதிகள் செயல்பட்டனர்.பாசிச வீழ்ச்சிக்குப் பின், மகத்தான சரித்திர மாற்றங்கள் நிகழ்ந்தன. இவையும் இந்த நிகழ்வின் மகத்துவம். காலனி ஆதிக்கம் உடைக்கப்பட்டு அடிமை நாடுகள் விடுதலை பெற்றன. பல ஐரோப்பிய நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசித்தன. சீனா, வியட்நாம், வடகொரியா ஆகியன ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து விடுதலையாகி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தன. இந்தியா உள்பட பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கிட்டியது.1945, மே 9ஆம் நாள்தான் இந்த வெற்றி முழுமையடைந்த தினம். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியில் நுழைந்து, ஜெர்மானிய பாராளுமன்றமான ரீச்°டாக் மீது வெற்றிக் கொடியை ஏற்றியது.இந்த மகத்தான தருணத்தை, ஜெர்மனியில் அன்று வாழ்ந்த எழுத்தாளர் தாம° மான் எழுதினார்.“இந்த மணித்துளிகள் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஜெர்மானியர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் நேரம் ஆகும். கொடூர மிருகமான (பாசிச) டிராகன் வீழ்ந்தது”“‘தேசிய சோசலிசம்’ என்ற பெயரில் அனைவரையும் நடுங்கிட ஒடுங்கிடச் செய்த பூதம், கடைசியாக ஒழிந்தது. இட்லர் நாடு என்ற இழிச் சின்னத்தை எறிந்து விட்டு, ஜெர்மனி அதிலிருந்து மீண்டது.”முதல் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போரில் தோல்வியடைந்த ஜெர்மனியை வெர்செய்ல்° உடன்படிக்கை எனும் ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்தனர். இது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் நிபந்தனைகளை விதித்து ஜெர்மானிய மக்களை வாட்டிடும் வகையில் அமைந்தது. கிட்டத்தட்ட 300 கோடி டாலர் அளவிற்கு நஷ்ட ஈடாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.இந்த வெர்செய்ல்° உடன்படிக்கை ஜெர்மானிய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இட்லர் தனது இனவெறி கொள்கைகளை, சோசலிச முலாம் பூசி, மக்கள் ஆதரவைப் பெற்றிட வாய்ப்பை ஏற்படுத்தியது.இதே போன்று இத்தாலியுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தங்களும் இத்தாலிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி முசோலினி தலைமையில் பாசிசம் இத்தாலியில் வேரூன்ற வாய்ப்பு ஏற்பட்டது. முசோலினிக்கும், இட்லருக்கம் பெரும் தொழிலதிபர்கள், நிலச் சுவான்தார்கள் பக்கபலமாக இருந்தனர். ஏனெனில் இவர்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உலகச் சந்தையையும் கைப்பற்றிட ஏணியாக பயன்படக்கூடிய மக்கள் தலைவர்கள் என்று இத்தாலி, ஜெர்மனி நாட்டு முதலாளித்துவம் கருதியது.இந்த அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான், அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையான அணு ஆயுதத் தாக்குதலை எதிர் கொண்டது. ஜெர்மனி, இத்தாலி போன்று அதிகாரப்பூவர்மாக பாசிசத்தை ஜப்பான் ஏற்கவில்லை என்றாலும், அதன் அன்றைய அரசாங்கத்தில் இருந்த ராணுவ மேலாதிக்கம், 1936 - 37ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் இவை மூன்றும் சேர்ந்த அச்சு நாடுகள் என்ற கூட்டணியை உருவாக்கியது.முதல் உலகப் போருக்குப் பின்முதலாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன், பிரான்° ஆகிய நாடுகளின் ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறமும், ஜெர்மன் முதலாளித்துவம் மறுபுறமும் என பிரிந்து நின்றன.முதல் உலகப் போரில் தனது காலனி நாடுகளை பிரிட்டன், பிரான்° நாடுகளிடம் ஜெர்மனி இழந்தது. அவற்றை மீண்டும் கைபற்றிட முனைந்தது.ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிஇந்த நிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். இட்லர் தங்களது காலனிகளின் மீது கை வைப்பதற்கு பதிலாக சோவியத் யூனியனை கைபற்றுவதில் கவனம் செலுத்தும்படி தூண்டினர். அன்று பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சேம்பர்லின் உள்ளிட்ட ஏகாதிபத்திய கூட்டம் இதனைச் செய்தது.இந்த சூழ்ச்சியின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என பலன் பெற அவர்கள் முனைந்தனர். அதாவது, ஒருபுறம் சோவியத் சோசலிசத்தை அழித்து விடலாம். மறுபுறம் தாங்கள் போருக்கான யுத்த செலவை மீண்டும் ஏற்று நஷ்டம் அடைவதைத் தவிர்க்கலாம். இட்லர் ஜெர்மனியையும், சோவியத் யூனியனையும் மோதவிட்டு, இருவரின் அழிவில் தங்களது ஏகாதிபத்திய வேட்டையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.வெளியில் இட்லர் பக்கமோ, சோவியத் பக்கமோ தாங்கள் இல்லை என்றும் நடுநிலைமையே தங்கள் கொள்கை என்பது போல் காட்டிக் கொண்டனர். ஆனால் உண்மையில் திரை மறைவு ஆதரவு நல்கினர்.°டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் யூனியன் பிரிட்டனையும், பிரான்சையும், பாசிசத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு அழைத்தது. இட்லர் சோவியத் நாட்டுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிராகப் பேசுவது வெறும் வெற்று வேஷம் எனவும், உண்மையில் இட்லர் சோவியத் யூனியனை தாக்குவது மட்டுமல்ல, பிரிட்டன் பிரான்சையும், மற்ற மேற்கத்திய நாடுகளையும் தாக்க முனைவான் என்று சோவியத் யூனியன் எச்சரித்தது. அவர்கள் இதனை காதில் வாங்கவில்லை.ஆனால், சோவியத் எச்சரிக்கை செய்தது போன்றுதான் பிந்தைய நிகழ்ச்சிகள் அரங்கேறின.இட்லர் முதலில் பிரான்சையும், பிரிட்டனையும் தாக்கிவிட்டுத் தான் சோவியத் மீது தாக்குதல் தொடுத்தான்.°டாலின் ராஜதந்திரம்பிரிட்டன், பிரான்° மீது தாக்குதலுக்கு சற்று முன்பாக அவன் சோவியத் யூனியனோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். பர°பரம் இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதில்லை என்பதே அந்த உடன்படிக்கை.இதற்கு பின்னணியாக இட்லரின் மிகப் பெரிய திட்டம் இருந்தது. அவன் சோவியத்தினை தாக்கும் நோக்கத்தை கைவிடவில்லை. முதற்கட்டமாக பிரிட்டன் பிரான்சை பலகீனமடையச் செய்து, அந்த நாடுகளைக் கைப்பற்றி, மேலும் பலம் பெற்று பின்னர் சோவியத் யூனியனை தாக்கிடலாம் என்பதே அவனது திட்டம். ஏனெனில், சோவியத்தோடு போர் புரிந்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்று அவனுக்குத் தெரியும்.°டாலின் இந்த திட்டத்தையும், அன்றைய நிலைமைகளையும் நன்குணர்ந்தே இட்லருடன் அந்த உடன்படிக்கையில் சோவியத்தின் ஒப்புதலை தெரிவித்தார்.தாற்காலிகமாக சோவியத் மீது இட்லர் தாக்குதலை செய்யாமல் இருக்க இந்த உடன்படிக்கை உதவியது. இது ஏற்பட்டு ஒன்றரை ஆண்டு கழித்துதான் சோவியத் மீது இட்லர் தாக்குதல் தொடுத்தான். இந்த ஒன்றரை ஆண்டு அவகாசம் சோவியத் யூனியன் மாபெரும் யுத்தத்திற்கு தன்னைத் தயார் செய்து கொள்ள உதவியது.இட்லர் போன்றவர்களோடு ஒரு உடன்படிக்கையை சோவியத் யூனியன் எப்படி செய்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பி, சோவியத் மீதும் °டாலின் மீதும் அன்றும், இன்றும் கூட அவதூறுகள் தொடுக்கப்பட்டன.அதற்கு °டாலின் “ஒரு அண்டை நாட்டில் இட்லர் ரிப்பன்ட்ராப் போன்ற அரக்கர்களும், மனித மாமிசம் தின்னும் கொடூரர்களும் ஆட்சி புரியலாம். ஆனால் அந்த நாட்டோடு, சமாதானத்தை விரும்பும் ஒரு நாடு அமைதியை நிலைநாட்ட ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வது தவறில்லை” என விளக்கினார். இட்லரோடுதான் ஏற்படுத்திக் கொண்டது ஒரு சமாதான உடன்படிக்கை என்றும் இதனை எந்த நாட்டோடும் செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இட்லரின் இனவெறிதுவக்கத்தில் °டாலின் சொன்ன கூட்டு பாதுகாப்பு உடன் படிக்கைக்கு செவி சாய்க்காத பிரான்° உள்ளிட்ட நாடுகள் பெரும் சோதனைக்கு ஆளாயின.இட்லரின் திடீர் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போர் துவங்கிய ஓராண்டில் பிரான்சும் இதர ஐரோப்பிய நாடுகளும் நாஜி படைகளிடம் தோல்வியுற்று வீழ்ந்தன. 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி போலந்தை கைப்பற்றியதோடு துவங்கிய இந்தப் போர், 1945ஆம் ஆண்டு வரை நடந்தது. இவ்வாண்டுகளில் ஐரோப்பா உள்ளிட்டு வடஆப்பிரிக்க நாடுகளையும் இட்லர் வெற்றி கொண்டான்.இந்தக் காலத்தில் இட்லர் யூத இனத்தை அழிப்பதிலும் தீவிரம் காட்டினான். யூதர்களை படுகொலை செய்யும் முகாம்களில் மனிதர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆ°ச்விட்° என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம்தான் மிகவும் பெரியது. இட்லர் படைகளும், அவனது கூட்டாளிகளான இத்தாலி, ஜப்பான் நாட்டு கொடுங்கோலர்களின் படைகளும் ஆக்கிரமித்த நாடுகளில் இருந்த யூதர்களம் வேட்டையாடப்பட்டனர்.இந்த சித்திரவதை, படுகொலை முகாம்களில் சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். இனவெறி, மனித இனத்தை எத்தகைய கொடூரத்துக்கு ஆளாக்கிடும் என்பதற்கு வரலாற்றுச் சான்றாக இவை அமைந்துள்ளன.1941ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தான். இட்லரின் நாஜி படைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ராணுவ ரீதியான திறமை, உலக நிலைமை பற்றிய தீர்க்க தரிசனமான பார்வையும், தெளிவும், கூர்மதியோடு கூடிய ராஜதந்திர முயற்சிகள் ஆகிய அனைத்தும் தேவைப்பட்டன. இந்த திறமைகளும் சிறப்புக்களும் கொண்டவராக °டாலினும், சோவியத் தலைமையும் அன்றைக்கு விளங்கியது. அதனால்தான் அனைத்து மேற்கத்திய நாடுகளும் இட்லர் தாக்குதலில் அடிபணிய நேர்ந்தபோது, சோவியத் மட்டும் உறுதியாகப் போராடி, இட்லரின் பாசிச வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.குறிப்பாக, °டாலின் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் ஒரு பெரும் காவியமாக திகழ்கிறது.ஒருபுறம், நேச நாடுகள் என்று அழைக்கப்படும் பிரிட்டன், பிரான்°, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஒற்றுமையை பாதுகாத்து இட்லரை முறியடிக்க வேண்டிய கடமையையும் அவர் ஆற்றினார்.அதே நேரத்தில், இந்த ஏகாதிபத்திய நாடுகள் பாசிச எதிர்ப்பில் காட்டிய தயக்கம், ஊசலாட்டம், சோவியத் யூனியனுக்கு எதிரான வஞ்சம், ஆகிய அனைத்தையும் °டாலினும் சோவியத் நாட்டு கம்யூனி°ட் தலைமையும் மிக லாவகமாக எதிர் கொண்டனர். இந்த ஏகாதிபத்திய நாடுகள் இட்லர் தோல்விக்குப் பிறகு, சோவியத் யூனியனும் கடும் வீழ்ச்சி கண்டு சிதிலமாகிட வேண்டுமென விரும்பினர்.ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, இட்லர் வீழ்ந்த பிறகும், கடுமையான வரலாறு காணாத நாசத்தை சோவியத் யூனியன் சந்தித்த போதும், அடுத்த பத்தே ஆண்டுகளில் சோவியத் யூனியன் தன்னை புனரமைத்துக் கொண்டு உலகப் பெரும் சக்தியாக உருவெடுத்தது. இது சோசலிசத்தின் மகத்துவம்.மக்கள் யுத்தம்இந்தப் போரில் சோவியத் யூனியன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அளவற்ற தியாகம் செய்ததற்கு முக்கிய காரணம், இட்லரின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கம் மட்டுமல்ல; உலக மக்களை பாசிசப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்பதுதான்.அதனால்தான் இந்தப் போர் சோவியத் யூனியன் தலையிட்ட பிறகு, ‘தேசபக்த மக்கள் யுத்தம்’ என மாறியது. தொடக்கத்தில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் உலகை பங்கு போட்டுக் கொள்ள இந்தப் போரை துவக்கினர்.கூட்டாளிகளாக இருந்த ஜரோப்பிய, அமெரிக்கத் தலைமை வஞ்சக சூழ்ச்சிகளை சோவியத் யூனியனுக்கு எதிராக செய்தாலும், °டாலின் அந்த நாடுகளின் மக்களை நம்பினார்.சோவியத் மீது தாக்குதல் துவங்க இருந்த சமயத்தில் °டாலின் தனது ரேடியோ உரையில் குறிப்பிட்டார்.“... இந்த விடுதலைப் போரில், நாம் (சோவியத்) மட்டும் தனித்து இல்லை.இந்த மாபெரும் போரில் நமது உண்மையான கூட்டாளிகள் ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள மக்கள்தான். இட்லரின் கொடுங்கோண்மைக்கு ஆளான ஜெர்மானிய மக்களும் நமது கூட்டாளிகள்தான். எனவே, இது சுதந்திரத்திற்கான மக்களின் கூட்டணி.”முதலாளித்துவ தலைமை, சோசலிசத் தலைமையும்°டாலினும், கம்யூனி°ட் தலைமையும் மக்களின் தேசபக்த உணர்வுகளையும் வளர்த்து சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தினர்.வரலாற்றில் சூரப்புலியாகவும், மாமனிதராகவும் முதலாளித்துவ மீடியாக்களில் இன்றும் சித்தரிக்கப்படுகிறவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்°டன் சர்ச்சில். அவர் மக்களுக்கு அறைகூவல் விடும்போது, “ஜெர்மனி நமது நாட்டின் மீது படையெடுக்கும் போது, மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதுதான் பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் முதலாளித்துவ தலைமை காட்டிய அக்கறை. °டாலின் மக்களிடம் உரையாற்றும் போது, சோசலிசத்துக்கே உரிய மேன்மையான நாட்டுப்பற்று உணர்வுகளை தட்டியெழுப்பி அவர்களை போரில் ஈடுபடுத்தினார். அவரது ரேடியோ உரை வருமாறு:“நமது நாட்டில் எதிரிகள் ஆக்கிரமித்துள்ள இடங்களில் கொரில்லா முகாம்களை தரையிலும், மலைப்பகுதிகளிலும் அமைந்திருங்கள். எதிரி முகாம்களை அழித்து ஒழிக்கும் குழுக்களை அமைத்திடுங்கள்... நமது பகுதிகளை ஆக்கிரமித்துள்ள எதிரிகளுக்கு வாழ்க்கை நரகமயமாக்கிடும் வகையில் அவர்களது பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள், தொலைத் தொடர்பு வசதிகளை அழித்திடுங்கள்.கொரில்லாக்களும், மக்களும் சேர்ந்து நாஜிப்படைகளை அழித்திட்ட வீர காவியத்தை வரலாறு பயிலும் அனைவரும் அறிவார்கள். சர்ச்சில் போன்ற அன்றைய கம்யூனி°டு எதிரிகளிலும், ஜார்ஜ் புஷ் போன்ற இன்றைய எதிரிகள் கூட சோவியத் மக்களின் போர்த்திறனை போற்றிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.அதே போன்று, இட்லர் பிரான்சை தாக்கி போரைத் துவக்கியபோது, பிரான்சு மண்கோபுரம் சரிந்து வீழ்ந்து, சரணடைந்தது. எவ்வித வலுவான எதிர்ப்பும் இல்லை. அங்கிருந்த கம்யூனி°டுகள் தீவிரமாக எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தனர். ஆனால் மக்கள் பெரும் அளவில் எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம், மக்களிடம் பாசிச எதிர்ப்புணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துவதில் அன்றைக்கு இருந்த முதலாளித்துவ தலைமையின் குறைபாடு.இதற்கு நேர்மாறான சித்திரம் அன்று சோவியத் யூனியனில் இருந்தது. அந்த மக்கள் சோசலிச சித்தாந்தத்தால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். உலக மக்களைப் பாசிசத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டியது தங்களது கடமை என்று உணர்ந்தவர்கள்.இட்லர் ஜெர்மனி மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்திய போது °டாலின் தலைமையில் அன்றைய தலைமை பாசிசத்தை வீழ்த்தும் மாபெரும் கடமைக்கு மக்களை இடையறாது தயார் படுத்தினார்கள்.மற்றொரு கருத்தையும் அன்று °டாலின் மக்களுக்கு உணர்த்தி வந்தார். மக்களின் எதிரி ஜெர்மானிய பாசி°ட் படைகளும், இட்லர் உள்ளிட்ட கொடுங்கோல் தலைமையும் தானே தவிர ஜெர்மானிய மக்கள் அல்ல என்பதை சோவியத் மக்களும், செஞ்சேனையும் நன்கு உணர்ந்திருந்தன.°டாலின் குறிப்பிட்டார்:“... இட்லர் கூட்டத்தையும், ஜெர்மானிய மக்களையும் வித்தியாசமில்லாமல் சேர்த்துப் பார்ப்பது முட்டாள்தனமானது. இட்லர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் ஜெர்மானிய மக்களும், ஜெர்மானிய அரசும் நீடிக்கும் என்பதே வரலாற்று அனுபவம்”இதுவே ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய, நடத்தி வரும் போர்களுக்கும், சோசலி°ட் நாடு நடத்திய போருக்கும் உள்ள வேறுபாடு ஆகும். செஞ்சேனையும், மக்களும் போரில் ஈடுபடும்போது உலக உழைப்பாளி மக்களின் விடுதலை சமத்துவத்திற்கான இலட்சிய உணர்வுகள் அவர்களிடம் இருந்ததால், ஜெர்மானிய மக்களுக்கு எவ்வித சேதத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.சோவியத் மக்களின் தியாகம்பதிலாக, சோவியத் மக்கள் தங்களை தியாகம் செய்து கொண்டனர். டெல்லியில் இருக்கும் ரஷியத் தூதர் லியா செ°லாவ் இது பற்றி குறிப்பிடுகிறார்.“ரஷியக் காலண்டரில் முக்கிய தினங்களில் மே 9, 1945 தேதிக்கு சிறப்பிடம் உண்டு. இந்த வெற்றி தினம் என்று சொன்னாலே ஒவ்வொரு ரஷியனுக்கும் இதயத்தில் ஒரு வகை துடிப்பு ஏற்படும்.60 ஆண்டுக்குப் பிறகும் கூட போரின் பாதிப்புக்கு ஆளாகாத ஒரு ரஷ்ய குடும்பத்தையும் பார்க்க முடியாது.ஆனால், இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி பலர் எழுதுகிறபோது, சோவியத்தின் பங்களிப்பை மறைக்க முயல்கின்றனர். இந்தியன் எக்°பிர° பத்திரிக்கை 1945ஆம் ஆண்டு நேச நாடுகளின் படைகள் ஜெர்மனியை கைப்பற்றியதாக எழுதியுள்ளது.உண்மையில் 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மானிய படைகளின் எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆங்கில அமெரிக்க போர் முனை சரிந்தது.இதனால் அமெரிக்க ஜனாதிபதி ரூ°வெல்ட், சர்ச்சிலும் சோவியத் யூனியன் கிழக்குப் பகுதியில் தாக்குதலை துவங்க வேண்டுமென °டாலினை மன்றாடி கேட்டுக் கொண்டனர். இதையொட்டி சர்ச்சில் ஜனவரி 6ஆம் தேதி °டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனவரி 7ஆம் தேதி சர்ச்சிலின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பதில் எழுதினார்.இதற்குப் பிறகு சோவியத் யூனியன் ஜனவரி 12, 14 தேதிகளில் மாபெரும தாக்குதலில் இறங்கியது. செஞ்சேனை 23 நாட்களில் ஜெர்மன் தலைநகரான பெர்லினை நெருங்கியது. அப்போது நேசநாட்டுப் படைகள் வெகு தொலைவில் இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி செஞ்சேனை ரீச்டாக்கில் பட்டொளிவீசிப் பறக்கும் செங்கொடியை ஏற்றியது. மே 8ஆம் தேதி சரணாகதி ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டது.இதன் மூலம் விடுதலைப்போர் முடிவுக்கு வந்தது. இந்த உண்மைகைள ஏகாதிபத்தியவாதிகள் மறைத்து வருகின்றனர்.1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1945 மே மாதம் வரை சோவியத் யூனியன் ஜெர்மானிய நாஜி படைகளோடு சண்டை யிட்டது. இந்தக் காலத்தில் 2 கோடியே 70 லட்சம் மக்களை சோவியத் யூனியன் இழந்தது. அதனடைய 1710 நகரங்கள் முழுமையாகவோ பகுதியாகவோ அழித்து ஒழிக்கப்பட்டன. 70,000 கிராமங்கள் அழிக்கப்பட்டன. நகர்ப்புறத் தொழில்கள் முற்றிலும் நாசப்படுத்தப் பட்டன. பசிபிக் பகுதியில் ஜப்பானிய ராணுவத்தோடும் சோவியத் ராணுவம் மோதி வெற்றிக் கண்டது. இது சீனப்பு புரட்சிக்கு வித்திட்டது.பாசிசத்தின் வீழ்ச்சி இந்தியாவிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் கம்யூனி°ட்டு களும் முற்போக்காளர்களும் தீவிரமாக மேற்கொண்டனர்.சோவியத் யூனியன் போரில் ஈடுபட நேர்ந்த போது, இந்த யுத்தம் மக்கள் யுத்தமாக மாறியது என்ற நிர்ணயிப்புக்கு கம்யூனி°டுகள் வந்தனர். சோவியத்தின் போர் முயற்சிகளுக்கு இந்தியா பக்க பலமாக இருந்தது.இன்றைய நிலையில், பாசிசத்தின் வீழ்ச்சியை நினைவு கூறுகிற போது, இந்திய மக்களுக்கு பாசிசத்தின் கொடுமைகளை நன்கு உணர்ந்திட வேண்டிய அவசியம் உள்ளது.நூரம்பர்க்கில், இட்லர் ஆட்சியின் போது, நிகழ்ந்த நெஞ்சைக் கதற வைக்கும் கொடுமைகள் விசாரிக்கப்பட்டன. நூரம்பர்க் விசாரணை என்று புகழ்பெற்ற இந்த விசாரணையில் மனிதர்கள் ஈவிரக்கமின்றி சித்திரவதைக்கும் படுகொலைக்கும் ஆளான விவரங்கள் வெளிவந்தன. அங்கு இனவெறியைக் கிளப்பி மக்களின் ஆதரவைப் பெற்று, 1933ஆம் ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றிய இனவெறி பாசிச கும்பல் வரலாறு காணாத கொடுமைகளை நிகழ்த்தி, சுதந்திரம், ஜனநாயகத்தைப் பறித்தது.அங்கு இனவெறியைக் கிளப்பியது போன்று இந்தியாவில் மதவெறியைக் கிளப்பி, இந்துத்துவா பாசிசத்தை சங்பரிவாரக் கூட்டம் கொண்டு வர, முயல்கிறது. இந்த சக்திகளை முற்றாக மக்களிடமிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பாசிசத்தை வெற்றி கொண்ட 60ஆம் ஆண்டு நிறைவு விழா நமக்கு உணர்த்திடும் பாடம்.அத்துடன், போர் எத்தகு நாசத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. இன்று ஜார்ஜ் புஷ் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டு மூலதன கும்பல் தங்களது இலாப வேட்டைக்காக, தங்களுக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது போர் தொடுக்க முனைகின்றனர். இதற்கு எதிராக மக்கள் திரள வேண்டுமென்பதும், இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவுச் சின்னங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

Tuesday, May 10, 2005

எழுச்சிமிகு உறுதியும் ஏற்றமிகு தீர்மானங்களும்
வே. மீனாட்சிசுந்தரம்

தலைநகர் டெல்லியிலே மார்க்சி°ட் கட்சியின் 18வது மாநாடு (ஏப்ரல் 6 முதல் 11 வரை) ஆறு நாட்கள் சிறப்பாக நடந்தேறியது. முந்திய 17வது மாநாட்டு அரசியல் தீர்மானப்படி களப் பணியில் ஈடுபட்டு பெற்ற அனுபவங்களையும், கற்ற படிப்பினைகளையும், பல கட்ட மாநாடுகள் மூலம் திரட்டி இங்கே பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர்.அடுத்த மூன்று ஆண்டுகள் மீண்டும் சந்திக்கும் வரை மக்களிடையே அரசியல் பணி ஆற்றிட வழிகாட்டும் அரசியல் தீர்மானத்தை சீர்மிகு திருத்தங்களோடு ஏற்று எழுச்சி மிகு உறுதியோடு மாநாடு நிறைவடைந்தது.மக்கள் ஜனநாயக புரட்சிக்கான கூறுகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு அரசியல் தீர்மானம் அமைக்கப்பட வேண்டும் என்பதால் இரவு 10 மணி வரை நீண்ட விவாதங்கள் சோர்வின்றி நடந்தன. சூடாகவும், சாங்கோபாங்கமாகவும், அரசியல் சிரத்தையுடன் இந்த வாதங்கள் அமைந்தன. நேரம் போதாமை என்ற ஒரு அம்சம் கடந்த மாநாடுகளில் இல்லாத ஒன்று இங்கே இருந்தது.சில கொள்கைப் பிரச்சினைகளில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. அவசரப்பட்டு முடிவெடுப்பதை விட கருத்தொற்றுமை கண்டிட மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டுமென்ற குரல் மாநாட்டிலே மேலோங்கியதால் புதிய மத்தியக்குழு அந்தப் பணியை செய்ய மாநாடு முடிவு செய்தது. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் நாணயமான ‘பர°பர நம்பிக்கை’யை இந்த முடிவு கோடிட்டு காட்டியது. கட்சியின் வரலாறு தெரிந்தவர்கள், ஒரு புரட்சிகர கட்சியின் எல்லா கூறுகளும் மார்க்சி°ட் கட்சி பெற்றுள்ளது. அல்லது வளர்த்துள்ளது என்பதின் அடையாள மாகத்தான் இந்த முடிவை பார்ப்பார்கள்.கூட்டுத் தலைமைஇந்த மாநாட்டின் சிறப்பு என்னbனில், கட்சியின் தலைமை உருவாகும் பாங்கும், கூட்டுத் தலைமையாக இருக்கிற உறுதியும் உலகமே பார்க்கிற அளவிற்கு எடுத்துக் காட்டியதுதான். மார்க்சி°ட் கட்சியின் சிறப்பு எதுவெனில் அது கொண்டிருக்கும் கூட்டுத் தலைமையாகும். ஒரு புரட்சிகர பெரும் திரள் மக்கள் கட்சி, உருவாக்கப்படும் ஒரு ஆதர்ச நபரை சுற்றி இல்லாமல் கூட்டுத் தலைமை கொண்டதாக அமைவதின் அவசியத்தை உலக கம்யூனி°ட் இயக்கங்களிலிருந்து ஒவ்வொரு நாட்டு தொழிலாளி வர்க்க கட்சி கற்ற பாடமாகும்.ஒன்றுபட்ட கட்சியாக இருந்த காலத்திலிருந்தே உள்கட்சி விவாதங்களின் மூலம் கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்கு கண்ணும், கருத்துமாய் இருந்தவர்களே மார்க்சி°ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை 1964ல் ஏற்றனர். தோழர் பிரகாஷ் தனது நிறைவுரையில் கூட்டுத் தலைமை உருவானதின் வரலாற்றை தொட்டுக் கூறியபொழுது 1964ல் உருவான 9 பேர் கொண்ட முதல் அரசியல் தலைமைக்குழுவை, கூட்டுத் தலைமையை உருவாக்கிய நவரத்தினங்கள் என்று குறிப்பிட்டார். அந்த பாரம்பரியம் இந்த மாநாட்டிலே உலகமே அறிகிற முறையில் உயர்ந்து நின்றது.உட்பூசலும், ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்ற கடுகுள்ளமும் இல்லாத இடங்களில்தான் கூட்டுத் தலைமை உருவாகும். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகள் இயல்பாகவே இயங்குகிற இடத்தில்தான் கூட்டுத் தலைமை உயிரோட்டமுள்ளதாக இருக்கும். இந்த உண்மை இந்த மாநாட்டிலும் உறுதிப்படுத்தப் பட்டது. பழுத்த அனுபவமும், இளமையின் துடிப்பும் இரண்டற கலந்து நிற்பதை போற்றாத ஏடுகளே இல்லை. மார்க்சி°ட் கட்சி என்றால் கொள்கையில் தெளிவும், நடைமுறையில் துடிப்பும் களிநடம் புரியுமிடம் என்பது பத்திரிக்கை உலகின் கணிப்பாகும்.மக்களை ஒன்று சேர் வாழ்வை உயர்த்துவயதில் மூப்பும், புரட்சிகர உணர்வில் இளமையும் கொண்ட, சுர்ஜித், ஜோதிபாசு தடுமாற்றமில்லாத குரல்களில் சில நிமிடங்களே உரையாற்றினர்.அவர்கள் கூறியவைகள் நெடுங்காலம் காதிலே எதிரொலித்து கொண்டே இருக்கும். அவர்களது சொற்கள் சுமந்து வந்த கருத்துக்களும், அந்தக் கருத்துக்களில் உரைந்திருந்த உணர்வுகளும் கேட்போர் உறுதியை எஃகாக்கியது. அவைகள் நமது அயர்வினை எரிக்கும் கணலாகியது எனலாம்.“தேக்கத்தை உடைத்திடுக புதிய இடங்களில் கட்சியை பரப்பிடுக” என்ற சுர்ஜித்தின் சொற்கள் எதார்த்த நிலவரங்களை உணர வைப்பவைகளாகும். கட்சி வேகமாக பரவி எதார்த்த நிலைமைகளை மாற்றாமல் மாற்றமில்லை என்பதை அவறிவுறுத்தியது. நாடாளுமன்றத்திற்குள் பின்பற்றும் அரசியல் யுக்திகளோ, அரசியல் வானவேடிக்கைகளோ, பரபரப்பூட்டும் அறிக்கைகளோ, சடங்காகிப் போன ஆர்ப்பாட்டங்களோ, மக்களை பார்வை யாளர்களாக ஆக்குமே தவிர போராட்ட களத்திலே கொண்டு வந்து நிறுத்தாது. மக்களிடையே கட்சி கிளைகளின் அயராத உழைப்பே, உள்ளதை உள்ளபடியே மாற்றும் ஆற்றல் படைத்தது என்பதையே சுர்ஜித் சொன்ன வார்த்தைகளின் உணர்வாகும்.புரட்சிகர தத்துவம் என்றால் எதார்த்த நிலைமைகளை வளர்ச்சி விதிக்கேற்ப மாற்றுவதே தவிர எதார்த்தத்திகேற்ப நமது உணர்வை மாற்றிக் கொள்வதல்ல என்ற மார்க்சின் வாசகத்தை சுர்ஜித்தின் சொற்கள் நினைவூட்டின.தோழர் ஜோதிபாசுவின் எளிமையான சொற்கள், சிக்கலான அரசியல் சுழலில் மார்க்சி°ட்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது.“ஆத்திரப்படாத அணுகுமுறையும், சிரத்தையும் அர்ப்பணிப்பும் மிக்க செயல்பாடும்” ஒரு மார்க்சி°ட்டின் அடையாளம் என்ற லெனினின் வார்த்தைகளே அவரது பேச்சு நினைவூட்டியது.பொருளாதார கொள்கைகளில் இடதுசாரி கட்சிகளோடு மாறுபட்டு இருக்கும் அரசியல் கட்சிகளை நோக்கி “உங்களுக்கும், பா.ஜ.க.விற்கு இதில் வேறுபாடு இல்லை என்ற நிலை சரிதானா? என்று தொடுத்த கேள்விக்கனையும் அவரது சொற்களின் உணர்வும் அரசியல்” என்றால், “எதிரிகளை குறைத்து, நன்பர்களை அதிகப் படுத்துவது” என்ற மாசே துங்கின் கருத்தை நினைவூட்டியது. அரசியல் நண்பர்களை விமர்சிக்க தேவையான நளினம் அவரது சொற்களில் நிறைந்து கிடந்தது.மேற்குவங்கத்தில் 27 வருடம் அரசு நிர்வாகப் பொறுப்பில் இடது அணி இருப்பதற்கான காரணம், அரசியல் யுத்திகளோ, சந்தர்ப்பத்திற்கேற்ற அணி அமைப்பதோ அல்ல. நீலச்சீர்திருத்தத்திற்கும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஜனநாயகத்தை பரவலாக்குவதிலும் இடதுசாரிகள் காட்டும் அக்கறையே. இந்த சாதனையின் மர்மம் என்று அவருக்கே உரிய எளிய நடையில் சொன்னது; “கட்சி வளர்ச்சியுறாத மாநிலங்களில் கட்சியின் எதிர்காலம் கிராமப்புறத்திலே இருக்கிறது; கிராமப்புற ஏழைகளின் வாழ்வு மேம்பட அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் துணிச்சலில் இருக்கிறது” என்பதை ஓங்கி அறைந்து கூறுவது போல் இருந்தது.விவாதங்களின் மேன்மைபிரதிநிதிகளின் அரசியல் தரமும், விவாதங்களில் வெளிப்பட்டன. விவாதங்கள் சூடாக எதனை மையமாக வைத்து நடந்தது என்பதை வைத்தே ஒரு மாநாட்டின் வெற்றி தோல்வியை கணிக்கலாம். தோழர் சுர்ஜித்தின் சொற்களிலே சொல்வதென்றால் “துஷ்டத்தனம் நிறைந்த அரசியல் சூழலில்” எதுபொறுத்தமான அரசியல் யுத்தியாக அமையும் என்பதைச் சுற்றியே விவாதங்கள் இருந்தன.மொத்தம் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என்று இருக்கும் நமது நாட்டில் மூன்றே மாநிலங்களில் தான் நமது செல்வாக்கு உள்ளது. 545 நாடாளுமன்ற உறப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 61 உறுப்பினர்களே இடதுசாரிகளாவர். இந்த பலத்தை வைத்துக் கொண்டுதான், அரசியலில் தலையீடு செய்ய வேண்டியுள்ளது.“ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் நலன்களை காலில் போட்டு மிதிக்க விடாமல் தடுத்திடவும் வேண்டும். பா.ஜ.க. சந்தர்ப்பத்தை பயன்படுத்திட அனுமதிக்கவும் கூடாது. வேகமாக இடதுசாரி கருத்துக்கள் மக்களிடையே நாடெங்கிலும் பரவவும் வேண்டும்.இப்பிரச்சினையை சுற்றியே விவாதங்கள் அமைந்திருந்தன. அன்றாட போராட்டங்களினால் புடம் போடப்பட்ட பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்கள் இப்பிரச்சனைகளை விளக்கிய அரசியல் தீர்மானத்தை சுற்றி கருத்தொற்றுமை ஏற்பட வைத்தது.இதனையொட்டி இன்னொரு பிரச்சினையும் விவாதப் பொருளானது. மாற்று என்ன? என்பதே அந்தப் பிரச்சினை. மூன்றாவது மாற்று என்பது சில கட்சிகள் கூடி ஒப்பந்தங்கள் செய்து உருவாக்குவதல்ல. ஒரு தொழிலாளி வர்க்க கட்சி நினைத்தவுடன் சமைத்திடவோ, ‘வாருங்கள், வாருங்கள்” நாட்டை முன்னேற்ற பொன்னான யோசனைகள் எம்மிடம் உள்ளது, கூடுவோம், அதனை சமைப்போம், மக்களுக்கு படைப்போம்” என்று அழைப்பு விட்டு அமைவதல்ல! இந்திய அரசியல் வானில் உருவாகியிருக்கிற கட்சிகள் பல, பல வட்டார அளவில் செல்வாக்கு பெற்றவைகள். இவற்றில் ஜனநாயகத்தின் மீதும், மதசார்பற்ற அரசியல் மீது நம்பிக்கை வைத்திருக்கிற கட்சிகளின் குணாம்சங்கள் எவ்வாறு உள்ளது என்பதை சரியாக கணிக்க வேண்டும். மாறும் மக்களின் மனோ நிலைக்கேற்ப காற்றடிக்கிற பக்கம் திரும்புகிற அரசியல் சாதுர்யம் படைத்தவைகளாக உள்ளனர் என்பது தெறிகிறது. காங்கிரசோ, பா.ஜ.க.வோ, இரண்டில் ஒன்றை நம்பித்தான் அகில இந்திய அரசியலில் தலையீடு செய்ய முடியும் என நம்புகிறவைகளாக இருக்கின்றன. தங்களது கூட்டு பலத்தையோ, இடதுசாரி அரசியலின் பயன்பாடும் இவர்கள் கணக்கிலே கொள்வதில்லை. இத்தகைய கட்சிகள் இடதுசாரிகள் பக்கம் திரும்ப வேண்டுமானால் முதலில் மக்களின் மனோ நிலையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இடதுசாரி கருத்துக்கள் பக்கம் மக்கள் சாய வேண்டும். மக்களின் மனோ நிலைகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமானல் உள்ளூர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டாக வேண்டும்.பெருந்திரள் மக்களின் பங்கேற்பு இல்லாமல் சிரத்தையுள்ள அரசியலை உருவாக்கிட முடியாது என்ற லெனின் வாசகத்தை நாம் மனதிலே கொள்ள வேண்டும் என்பதை இந்த விவாதங்கள் எதிரொலித்தன.மூன்றாவது மாற்று என்பது உணர்வுபூர்வமாக, மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படும் என்பதை மாநாட்டு விவாதங்கள் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தின. மாநாட்டின் இன்னொரு முக்கிய அம்சம், அந்நிய முதலீட, அந்நிய நிதி மூலதனம் உலகமயத்தால் உருவாகும் சாதக அம்சங்களை பயன்படுத்தவும், பாதக அம்சங்களை எதிர்த்திடவும் தேவையான நமது அணுகுமுறை; அந்நிய உதவி பெறும் தன்னார்வக்குழுக்கள் பற்றிய மதிப்பீடுகள்; சுயஉதவிக் குழுக்களை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய விவாதங்களாகும்.முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஒரு அம்சமான உலகமயம் பற்றிய சரியான அணுகுமுறை மார்க்சீய கோட்பாட்டின்படி உருவாக்கப்பட வேண்டும்; அப்பொழுது; வரலாற்று ரீதியாக உருவாகியிருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையை மக்களின் நலனை பெரிதளவு பாதிப்பிற்கு உள்ளாக்காமல் தடுத்திடவும், முன்னேறவும் முதலாளித்துவ முரண்பாடுகளை பயன்படுத்திடவும் முடியும். இயக்கஇயல் பொருள் முதல்வாத அடிப்படையில் இப்பிரச்சினைகளை அணுகும் பொழுதுதான் முரண்பாடுகளை மக்களின் நலனிற்கு பயன்படுத்திட வழிவகுக்கும். இந்த விவாதங்கள் எல்லா அம்சங்கள் மீதும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தும் பணி மத்தியக்குழுவிடம் விடப்பட்டுள்ளது.இந்த சூழலில் மார்க்சி°ட்டுகளின் கடமையை சுருக்கமாக கூறுவதென்றால் மக்களிடையே...1. தேச ஒற்றுமை, அரசியலில் மதச்சார்பின்மை.2. நிலச்சீர்திருத்தம்3. தேசத்தின் சுதந்திரமான பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருள் உற்பத்தியை மாற்றி அமைப்பது.4. மாநில சுயாட்சியுடன் கூடிய ஜனநாயக அரசியல் அமைப்பு.5. மக்களின் நலனை மையமாக கொண்ட வளர்ச்சி.6. வகுப்புவாத அரசியலுக்கு எதிரான போராட்டம் மக்களை பாதிக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கெதிரான மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு. இடதுசாரி இயக்கங்களை பலப்படுத்துவது.இவற்றை யெல்லாம் செய்திட பலமான கட்சி அமைப்பு வேண்டும். மார்க்சிஸம் - லெனினிசம் என்ற சித்தாந்த அடிப்படை கொண்டதாக அமைய வேண்டும்.கட்சி அமைப்பின் புரட்சிகர தன்மை°தாபன நிலைமைகளை மிகவும் அக்கறையுடன் மாநாடு விவாதித்தது. பிரதிநிதிகளின் உணர்வு உண்மையிலேயே உயர்ந்து நின்றது. கோஷ்டிப் பூசலுக்கும், அதற்கு “தத்துவார்த்த போராட்ட சாயம்” பூசுவதற்கும் கட்சிக்குள் இடமில்லை என்பது விவாதத்தின் போது தெளிவானது. உட்கட்சி போராட்டம் என்பது முற்றிலும், அரசியல் தரத்திலும், தத்துவார்த்த் தரத்திலும், உயர்ந்து நிற்கும், தனிநபர் விறுப்பு, வெறுப்புக்களை தாண்டி நிற்கும், நாடாளு மன்றவாத உள் நோக்கமில்லாமல் இருக்கும்; பதவி சுகம் தேடாது ஒருவரை ஒருவர் வேட்டையாட பயன்படுத்தாது. எல்லாவற்றிற்கும் மேலாக உட்கட்சி போராட்டம் என்பது கொள்கை அடிப்படையில் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கும். ஒரு பிரதிநிதி கூறியதுபோல் கோஷ்டி சண்டை போடுவதில் ஈடுபடாமல் வர்க்க சண்டை போடுவதில் கவனம் திருப்பும் வகையில் அமைந்திருக்கும். உட்கட்சி பூசலை பத்திரிக்கை களில் விவாதிக்கிற அளவிற்கு தரம் தாழ்வது மார்க்சி°ட் கட்சியின் அடிப்படை உணர்விற்கே விரோதமானது. அருவருப்பானது என்பதை இந்த மாநாடு தெளிவாக்கியது.மாநாடு கட்சி அமைப்பை உறுதியுடன் கட்டமைக்க சில முடிவுகளை நன்கு விவாதித்து எடுத்தது.• கட்சி மையங்களை பலப்படுத்துவது• வேகமாக கட்சியை விரிவுபடுத்துவது; வெகுஜன அமைப்புகளில் மக்களை திரட்டுவது.• தத்துவார்த்த உறுதியை மேம்பட செய்வது.• உறுப்பினர் சேர்ப்பு, ஆதரவாளர் குழுக்களை பராமரிப்பது.• நெறிப்படுத்தும் இயக்கத்தை மூச்சாக கருதுவது.• கிளைக் கூட்டங்களை ஒழுங்காக நடத்துவது. அங்கு அரசியல் தத்துவார்த்த விவாதங்களில் பங்கேற்பது. ஒவ்வொரு உறுப்பினர் களும் வெகுஜன அமைப்புகளின் மூலம் செயல்படுவது.• நமது வெகுஜன அமைப்புகளில் சேருவோருக்கு °தாபன உணர்வும், அரசியல் விழிப்புணர்வும் உருவாக நடவடிக்கை எடுப்பது. தனது அமைப்பு என்ற உணர்வு உருவாகி ஈடுபாட்டுடன் செயல்பட தூண்டுவது.• கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழை விவசாயிகள் இவர்களை கட்சிக்குள் கொண்டுவர சிறப்பு நடவடிக்கைகளை எடுப்பது.• கிளை, இடைக்கமிட்டிகள், மாவட்டக்குழுக்கள் ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டை உத்திரவாதப்படுத்துவது.• வெகுஜன அமைப்பு வேறு, கட்சி வேறு என்ற உணர்வுடன் வெகுஜன அமைப்பில் கட்சி உறுப்பினர் செயல்படுதலை உத்திரவாதப்படுத்த வேண்டும்.• பெண் அடிமைத்தனம், தீண்டாமை, ஆகியவைகளை ஒழித்துக்கட்ட, எல்லா வகையிலும் முயல்வது.• கிளர்ச்சிப் பிரச்சாரத்தின் தரத்தை உயர்த்துவது.இந்த மாநாடு உருவாக்கிய உறுதியுடன் நாம் முன்னேறுவோம்.வறுமை விதி எனும் மனிதரை சிரிப்போம்பிறவியில் உயர்வு தாழ்வு சொலல் மடமைஇந்த பிழை நீக்குவதே உயிருள்ளாரின் கடமை!என்போம்!மக்களை ஒன்று சேர்ப்போம்வாழ்வை உயர்த்துவோம்கைக்குள திறமையை காட்டுவோம்.மார்க்சிச உணர்வெனும் கனலிடைஅயர்வினை எரிப்போம்

Tuesday, May 03, 2005

மக்கள் ஜனநாயகப் புரட்சியில் விவசயிகளின் பிரச்சனை
கேந்திரமானேதோர் பங்கினை வகிக்கிறது
பினாய் கோனார்
தமிழில்: கே. அறம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.“முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தினுடைய சாம்பல்களிலிருந்துதான் முதலாளித்துவ அமைப்பானது உருவாக்கப்பட்டது. புதிதாக வளர்ந்தோங்கி வந்த முதலாளித்துவ வர்க்கமானது முந்திய சமூக அமைப்பை அழித்தொழித்து விட்டு அந்த இடத்தில் தங்களுடைய முதலாளித்துவ சமூக அமைப்பை நிலைநாட்டிக் கொண்டது. ஆனால் இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் முதலாளித்துவ அமைப்பானது இதற்கு முந்தியிருந்த சமூக அமைப்பின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அது தான் நிதர்சனமானதோர் வரலாற்று உண்மையாகும்”கட்சித் திட்டத்தில் மேலும் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு:“பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்களோ அல்லது அவர்களுக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய முதலாளி வர்க்கமோ முந்திய சமூக அமைப்பைத் தகர்தெறிந்திடும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு தகர்த்தெறிவதன் மூலமாகத்தான் முதலாளித்துவ சமூகமானது சுதந்திரமாக வளர்ந்தோங்கிட சாத்தியமாகும்! எனவே நமது கட்சியும், இந்திய தொழிலாளி வர்க்கமும் ஏனைய முற்போக்கு சக்திகளையெல்லாம் அணி திரட்டிக் கொண்டு முதலாளித்துவத்துக்கு முந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைத் தகர்த்தெறிந்திட வேண்டும். அவ்வாறு செய்தவன் மூலமாகத்தான் நாட்டிலுள்ள புரட்சிகர சக்திகளையெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டு மக்கள் புரட்சியை வென்றெடுத்திட முடியும். மேலும் நாட்டை சோசலிசப் பாதைக்கு அழைத்துச் செல்லவும் முடியும்” ஐரோப்பாவில் நடந்ததென்ன?முதலாளித்துவ சமூகமானது வளர்ச்சி அடைவதற்கு அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவச் சுரண்டல்கள் யாவும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். அதன் மூலமாக விவசாயி வர்க்கத்தை சகல வித சுரண்டல் கொடுமைகளிலிருந்தும் விடுவித்தாக வேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது மேற்கூறப்பட்ட வரலாற்றுக் கடமையைத் திறம்படச் செய்து முடித்தது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது “மன்னராட்சி ஒழிக, நிலப்பிரபுத்துவம் ஒழிக, உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்று முழங்கிக் கொண்டு களமிறங்கியது. விவசாய வர்க்கமானது தத்துவார்த்த அடிப்படையில் நிலப்பிரபுத்துவ அமைப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மத குருமார்கள் மற்றும் ஐரோப்பியத் தத்துவஞானிகளும் இந்த உலகத்தையும் இந்த சமூக அமைப்பையும் மற்றும் மன்னர், நிலப்பிரபுக்கள் மேட்டுக்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்கள் யாவரையும் சர்வ வல்லமை படைத்த கடவுள்தான் படைத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரஞ் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடவுள்தான் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளையும் உருவாக்கினார் என்றும் மாதா கோவில்கள் தான் கடவுளின் உறைவிடமாகும் என்றும், எனவே கடவுளை எதிர்த்து யாராவது பேசினால் அது மிகப்பெரிய பாவமாகும் என்றும் சொல்லி வந்தனர். ஆனால் கலீலியோ என்ற விஞ்ஞானியானவர் உலக உருண்டையைச் சுற்றித்தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோளங்களும் சுழல்கிறது என்ற கருத்தைத் தகர்த்தெறிந்தார். அத்தகையப் புரட்சிகரமான கருத்தைக் கூறியதற்காக அவனைச் சிறையில் தள்ளினார்கள். அவருடைய கருத்தை ஏற்றுக் கொண்டால் அது கடவுளின் வலிமைக்கே விடப்பட்டதோர் சவலாகி விடும் என்று ஆட்சியிலிருந்தவர்கள் வாதிட்டனர். மேலும் அவரது கோட்பாடனது கடவுளை மட்டுமின்றி அவரால் உருவாக்கப்பட்ட மன்னர் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராகச் சவால் விடக் கூடும் என்றும் வாதிடப்பட்டது.தொழிலாளி வர்க்கம் இன்னும் உருவாகவில்லைதொழிற்சாலைத் தொழிலாளர்கள் இன்னும் உருவாகவில்லை. நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களாகவே விளங்கினர். அவர்கள் அனைவருமே நிலப்பிரபுத்துவக் கொள்கைகளின் பிடிப்பில் சிக்குண்டு கிடந்தனர். எனவே வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தால் நிலப்பிரபுத்துவ சக்திகளை முறியடிக்க முடியவில்லை. மக்கள் சமூகத்தை மூட நம்பிக்கைகள் மற்றும் குறுகிய நிலப்பிரபுத்துவச் சிந்தனையோட்டங்களிலிருந்து விடுவித்து அவர்களிடையே புரட்சிகர கருத்துக்களை பரப்புவதன் மூலமாகத்தான் அவர்களை நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும்படி செய்திட முடியும், எனவே தான் முதலாளித்துவ வர்க்கமானது “உழுபவனுக்கே நிலம்’ என்ற கோஷத்தை முன்வைத்தது. அது மட்டுமின்றி அந்த வர்க்கமானது தத்துவார்த்த அடிப்படையிலும் புரட்சிகரமானதோர் பாத்திரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் நாட்டிலுள்ள பெரும்பகுதி மக்கள் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடனும், பகுத்தறிவு சிந்தனையுடனும் செயல்படாமல் மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாத சிந்தனைகளில் மூழ்கிக் கிடப்பதை எதிர்த்தும் போராட வேண்டியதாயிற்று. மேலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு என்பது போன்ற தர்க்கப்பூர்வமான சிந்தனைகளை யெல்லாம் மக்களிடையே எடுத்துக் கூற வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் நாட்டிலுள்ள சகல மனிதர்களும் பிறப்பால் சமமானவர்களே என்ற கருத்தையும் நாட்டு மக்களிடையே பரப்பிடத் தொடங்கினர். மேலும் அவர்கள் மக்களுடைய அன்றாட சமூக நடவடிக்கைகளிலிருந்து கடவுள் பற்றிய சிந்தனைகளை அகற்றிவிட்டு அவரை மாதா கோவிலுக்குள் பூட்டி வைத்தனர். நாம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோமானால் ஐரோப்பாக் கண்டத்தில் மறுமலர்ச்சி சகாப்தத்தில் புதிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டதுடன் மக்களிடையே மேற்கூறப்பட்ட கண்ணோட்டங்கள் மிகவும் வலுவடைந்தன.சோசலிசமே இதற்கு மாற்றாகும்மக்களுக்கு முதலாளித்துவ சகாப்தம் உருவாவதற்கு முன்னர் முதலாளித்துவச் சுரண்டல் முறைகளைப் பற்றிய தெளிவோ, ஞானமோ கிடையாது. தாங்கள் நிலப்பிரபுத்துவச் சுரண்டலிலிருந்து தப்பித்து விட்டமையால் சமுதாயத்தில் சகலவிதமான சுரண்டல்களுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டு விடும் என்று நாட்டு மக்கள் கருதினார்கள். சமூகத்தில் முதலாளித்துவ வர்க்கம் உதயமாகிய சமயத்திலேயே தவிர்க்க முடியாத வகையில் தொழிலாளி வர்க்கமும் உருவாயிற்று எனலாம். மேலும் சமுதாயத்தில் உழைப்பாளி மக்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்தது.முதலாளிகள் மிகவும் விரைவாக மூலதனத்தைப் பெருக்கிட வேண்டும் என்றதோர் வெறியுடன் உற்பத்தி சக்திகளையெல்லாம் மிகவும் குரூரமான வகையில் சுரண்டினார்கள். காரல் மார்க்ஸ் மேற்கண்ட விவரங்களையெல்லாம் தன்னுடைய புகழ்வாய்ந்த மூலதனம் என்ற நூலில் விளக்கமுடன் எடுத்துக் கூறியுள்ளார். அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு இயக்கங்களும் வளர்ந்தோங்கத் தொடங்கின. மார்க்சும் ஏங்கல்சும் அன்றையக் காலக்கட்டத்தில் தாங்கள் பெற்ற செழுமையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 1848-ஆம் ஆண்டில் “கம்யூனிஸ்ட் அறிக்கை” என்ற புகழ்வாய்ந்த நூலை எழுதி வெளியிட்டனர். மேற்படி நூலானது உலகத் தொழிலாளி வர்க்கத்தினுடைய வலுமிக்கதோர் பிரகடனமாக விளங்கியது. அந்த அறிக்கை வெளிவந்ததற்கும் பின்னர் உலகமெங்கிலுமிருந்த தொழிலாளி வர்க்கமானது ஸ்தாபன ரீதியாகவும் கொள்கை அடிப்படையிலும் அணி திரளத் தொடங்கியது. அதைக் கண்ட முதலாளிகள் நடு நடுங்கினார்கள். 1848-50 ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கமானது பிரான்ஸ் நாடெங்கிலும் புயல்வேகத்தில் மாபெரும் போராட்டங்களை நடத்தியது. 1864ம் வருடத்தில் உழைப்பாளி மக்களுடைய சர்வதேசிய அமைப்பானது உருவாக்கப்பட்டது. அதைக் கண்டு உலகமெங்கிலும் இருந்த முதலாளிகள் குலை நடுங்கினார்கள். பிரான்ஸ் நாட்டில் தொழிலாளி வர்க்கமானது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக 1871ம் வருடத்தில் பிரான்ஸில் பாரிஸ் கம்யூன் உயிர்த்தெழுந்தது. அதன் விளைவாக முதலாளிகள் மேலும், மேலும் கலவரமடைந்தனர். 1886 மற்றும் 1905ம் ஆண்டுகளில் வரலாற்றுச் சக்கரங்கள் உருண்டோடின. முதல் உலகப் போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவ அமைப்பானது மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து மனித குல வரலாற்றிலேயே மகத்தானதோர் நிகழ்ச்சியாக விளங்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியானது நடந்தேறியது. அதன் விளைவாக உலகமே குலுங்கியது எனலாம். மீண்டும் முதலாளி வர்க்கமானது அஞ்சி நடுங்கியது. 90களில் அக்டோபர் புரட்சியானது சோசலிசத்தைக் கட்டும் பணியில் வர்க்கப் போராட்டம் பற்றிய ஒரு சில தவறான அணுகுமுறைகள் கடைப்பிடித்தமையால் தோல்வியடைய நேர்ந்தது. ஆனாலும் கூட மேற்படி அக்டோபர் புரட்சியானது முடியாததைக் கூட முடித்துக் காட்ட முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தது. மேலும் எவருமே நம்ப முடியாத அளவுக்கு பற்பல வியத்தகு சாதனைகளைப் புரிந்தது. மேலும் அக்டோபர் புரட்சியானது சமூகத்தில் தனிச் சொத்துரிமையை ஒழித்துக் கட்டி சொத்துக்கள் யாவற்றையும் சமூகத்தின் உடமையாக்கிச் சாதனை புரிந்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக சோசலிசத்துக்கு வேறு எந்த ஒரு மாற்றம் கிடையவே கிடையாது என்ற வலிமைமிக்கதோர் பேருண்மையை உலகறியச் செய்தது எனலாம்.முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் சுரண்டல் முறையானது எவ்வாறு இருக்க வேண்டுமென்ற அம்சத்தில் தான் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் முதலாளித்துவத்தை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் வீழ்த்துவதையே தன்னுடைய தலையாய நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே தொழிலாளி வர்க்க இயக்கங்களும் சோசலிச சக்திகளும் வளர்ந்தோங்கி வந்ததோர் சூழ்நிலையில் முதலாளித்துவமானது தனது ஆரம்பகால புரட்சிகரப் பண்புகளையெல்லாம் கைவிட்டு விட்டது. மேலும் அந்த வர்க்கமானது நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு சக்திகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக களமிறங்கியது. மேலும் அக்டோபர் புரட்சியின் விளைவாக முதலாளித்துவமே வர்க்கமானது. விவசாயிகளை ஒரு ஜனநாயகப் புரட்சியை நோக்கி வழி நடத்திடுவதற்கான வலிமையை அடியோடு இழந்து விட்டது. அதன் காரணமாகத்தான் நம்முடைய நாடு உட்பட சகல வளரும் நாடுகளிலுமுள்ள முதலாளி வர்க்கமானது வெளிப்படையாகவே நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் நேச உறவு கொண்டு கூடிக் குலவி வருகிறது.விவசாயிகள் பங்களிப்புநவீன காலத்தில் விவசாயிகள் பல்வேறு நல உரிமைகளைக் உள்ளடக்கியுள்ளமையால் அவர்களால் அடிப்படையானதோர் வர்க்கமாகச் செயல்பட இயலவில்லை. முதலாளித்துவ சமூகத்துக்கு முன்பிருந்த சமூக அமைப்பானது விவசாய வர்க்கத்தை முதலாளித்துவ நில உடமையாளர்கள் மற்றும் விவசாயக் கூலிகள் என்று பிளவுபடுத்திவிட்டது. லெனின் குறிப்பிட்டதைப் போன்று முதலாளித்துவமானது விவசாய வர்க்கத்தை சீரிழித்தது மட்டுமல்லாமல் பிளவுபடுத்தியும் விட்டது. இன்றைய விவசாயிகள் எதிர்கால முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகிய இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து போய் விட்டனர். அதன் விளைவாகத்தான் நடைமுறையில் விவசாய வர்க்கத்துக்கென்று தனியொரு தத்துவமோ, கோட்பாடோ மற்றும் அரசியல் நடைமுறைகளோ காணப்படவில்லை. முந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கிய விவசாயிகள் இன்றைக்கு முதலாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றின் அரசியல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளில் ஏதாவது ஒரு பிரிவின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டாக வேண்டியுள்ளது. இன்றையச் சூழ்நிலையில் முதலாளி வர்க்கத்திடம் விவசாயிகளை விடுதலைப் பாதையில் அழைத்துச் செல்லுகின்ற தெம்பும் திராணியும் இல்லை. தொழிலாளி வர்க்கம் ஒன்றினால் மட்டுமே அத்தகைய பணியைச் சிறப்பாகச் செயல்படுத்திட முடியும். தொழிலாளி வர்க்கமானது விவசாயிகளின் மீதுள்ள கருணையுணர்வால் மட்டும் மேற்கூறப்பட்ட பணியை ஆற்றிட முன்வரவில்லை. மாறாக தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய விடுதலையை வெற்றி கரமான முறையில் நிறைவேற்றிடவதற்காகத்தான் அவ்வாறு செயல்பட்டாக வேண்டியுள்ளது.முதலாளித்துவச் சுரண்டல் முறை மட்டுமே சுரண்டலின் இறுதிக்கட்டமாகும். தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் சகலவிதமான சுரண்டல் கொடுமை களிலிருந்தும் நாட்டு மக்களையெல்லாம் விடுவிப்பதன் மூலமாகத்தான் அந்த வர்க்கத்துக்கு உண்மையான விடிவு ஏற்படும். சமுதாயத்தில் பெரும்பான்மையினராக விளங்குகின்ற விவசாயிகளை முதலாளி வர்க்கத்தின் பிடியிலிலிருந்து விடுவித்து அவர்களைத் தங்களுடைய நேச சக்திகளாக மாற்றியாக வேண்டும். தொழிலாளி வர்க்கமானது அப்படிச் செய்யாவிட்டால் தன்னையும் முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பிடியிலிருந்து விடுவித்திட முடியாது. இது வெறும் வேத உபன்யாசமல்ல, மாறாக தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய இயக்க ரீதியான போராட்டங்களிலிருந்து மேற்கூறப்பட்ட செழுமையான அனுபவத்தையும் பெற்றுள்ளது. கார்ல் மார்க்ஸ் 1848-களில் பிரெஞ்சு, பாட்டாளி வர்க்கமானது தோல்வியடைந்ததற்கான காரணங்களைப் பற்றியும் பற்பல கோணங்களில் ஆராய்ந்தார். மேற்படி ஆராய்ச்சிகளை அடிப்படையாக கொண்டு அவர் “பிரான்ஸில் நடைபெற்ற வர்க்கப் போராட்டம் 1848 - 50 என்றதோர் தத்துவார்த்த நூலை எழுதி வெளியிட்டார். “பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கமானது முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி மக்களுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டுள்ள சமூகத்தில் பெரும்பான்மையினராக உள்ள விவசாயிகள் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரைக் கிளர்ந்தெழும்படி செய்யாவிட்டால் முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஒரு தலை முடியைக் கூட அகற்றிட இயலாது. மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பு, மூலதனத்தின் மேலாதிக்கம் ஆகியவற்றையும் தகர்த்தெறிந்ததிடவும் முடியாது. அதே பாணியில் பிரெடரிக் எங்கல்சும் 1868ம் ஆண்டில் சர்வதேச அகிலத்தில் உரை நிகழ்த்திய சமயத்தில் விவசாயிகள், சிறு முதலாளிகள் ஆகியோரை ஓரணியில் திரட்டாமல் முதலாளி வர்க்கத்தை சிறிதளவு கூட அசைத்திட முடியாது என்று சரியாகவே குறிப்பிட்டார்.1871ம் வருடத்தில் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்த பிறகு மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டார்.“பிரெஞ்சு பாட்டாளிகள் முதலாளி வர்க்க முகாமிலிருந்து விவசாயி வர்க்கத்தைத் தன் பக்கத்தில் வென்றெடுக்கத் தவறிய காரணத்தினால்தான் பாரிஸ் கம்யூன் தோல்விடைய நேர்ந்தது. அதே காரணத்தினால் தான் 1905ம் ஆண்டில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் தோல்வியில் முடிந்தது. அதற்கு மாறாக 1902ம் ஆண்டில் ரஷ்ய விவசாயிகள் முன்னின்று நடத்திய கிளர்ச்சிக்குத் தொழிலாளி வர்க்கம் தலைமையேற்காத காரணத்தினால் அந்தக் கிளர்ச்சியும் தோல்வியில் முடிந்தது. சுட்டிக்காட்டப்பட்ட மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் “கிராமப்புற ஏழைகளுக்கு” என்ற தத்துவார்த்த நூலை எழுதி வெளியிட்டார். மேற்படி அனுபவமானது அக்டோபர் புரட்சியின் போது வெற்றிகரமான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டது எனலாம். ஜோசப் ஸ்டாலின் லெனினிசத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.“லெனினிசமானது விவசாயிகள் பிரச்சனையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது என்று சிலர் கருதுகிறார். அது தவறானதோர் கருத்தாகும். ஆனால் லெனினிசமானது பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் பற்றிய பிரச்சனையைத் தான். முதன்மைப் படுத்துகிறது. அதே நேரத்தில் விவசாய வர்க்கமானது பாட்டாளி வர்க்கமானது பாட்டாளி வர்க்கத்தினுடைய நம்பகமானதோர் நேச சக்தியாக உருவாக்கப்பட்டாக வேண்டும் என்பதும் முக்கியமாகும்” பாட்டாளி வர்க்கமானது தன்னை “கூலி அடிமைத்தனத்திலிருந்து’ விடுவித்துக் கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டு மானால் விவசாயிகளையும் அவர்களது சகலவிதமான அடிமைத் தனங்களிலிருந்தும் விடுவித்தாக வேண்டியது அவசியமாகும்.இந்தியாவில் நிலவிடும் சூழ்நிலைமைகள்நாம் மேலே சுட்டிக்காட்டப்பட்ட வரலாறு பூர்வமான தத்துவார்த்த மற்றும் நடைமுறை உண்மைகளின் அடிப்படையில் நமது இந்திய நாட்டில் நிலவி வருகின்ற சூழ்நிலைகளைப் பரிசீலித்திட வேண்டும். நமது நாட்டிலுள்ள முதலாளி வர்க்கத்தால் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி அதன் மூலமாக நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்களை வழிநடத்திட முடியவில்லை. அதற்கு இந்தியப் பெரு முதாளிகள் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்திய முதலாளி வர்க்கமானது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங் கிணைத்துக் கொண்டு போராட மறுத்து விட்டது. அது மட்டு மல்லாது நாடெங்கிலும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் வீரமிக்க போராட்டங்களையெல்லாம் மிகவும் மூர்க்கமான முறையில் அடக்கியொடுக்கியது. மேலும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் சுதந்திரப் போராட்டத்தையொட்டி நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகளது எழுச்சி, வங்காளத்தின் தே பகா இயக்கம், பீகாரில் பிடாய்தாரி போராட்டம், மகராஷ்டிரத்தில் வோர்லி பழங்குடியினரது கிளர்ச்சிகள், அஸ்ஸாம் சூர்மா பள்ளத்தாக்கில் விவசாயிகள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் ஆகிய அத்தனை போராட்டங்களுக்கும் எதிராக மிகவும் கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டனர். மேலும் இந்திய முதலாளி வர்க்கமானது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே வர்க்க உணர்வுகள் வளர்ந்தோங்கி வருவதால் எதிர்காலத்தில் பேரபாயங்கள் ஏற்படக் கூடும் என்று கருதி அதன் விளைவாக அஞ்சி நடுங்கினர். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் வர்க்க ரீதியான போராட்டங்களை ஒருங்கிணைத்திட மறுத்துவிட்டனர். அதன் மூலம் அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை புரட்சிகர மானதோர் பேரியக்கமாக வளர்த்தெடுக்கத் தவறிவிட்டனர். மேலும் நாட்டிலுள்ள பிளவுவாத சக்திகளும் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கி மக்களது ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்திடத் தொடங்கின. இந்திய முதலாளிகளும் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்டுதவற்கான போராட்டத்தில் முன்னின்று செயல்படாமல் வகுப்புவாத சக்திகளுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமின்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்து கொண்டனர்.சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்தேறிய நிகழ்ச்சிகள்முதலாளித்துவ ஆட்சியாளர்கள் நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் நாட்டில் நிலச் சீர்திருத்தங்களை அமுல்படுத்திட மறுத்து விட்டனர். அது மட்டுமின்றி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அரைகுறையான நிலச் சீர்த்திருத்தங்களைக் கூடச் செயல்படுத்திடுவதற்கு முன்வரவில்லை. அதன் விளைவாக நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் நிலச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. நாடு விடுதலையடைந்த சமயத்தில் நாட்டிலுள்ள மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத நிலங்கள் யாவும் 10 சதவீத நிலப்பிரபுக்கள் வசமிருந்தன. மிகப் பெரிய நிலப்பிரபுக்களாக விளங்கிய அவர்கள் வசமிருந்த நிலங்களைக் கைப்பற்றியிருந்தால் ஏழை, எளிய விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 240 மில்லியன் ஏக்கர்கள் நிலம் கிடைத்திருக்கக் கூடும். இடதுசாரிகள் ஆட்சி புரிந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும் நிலச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வெறும் 5 மில்லியன் ஏக்கர்கள் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினர் ஆட்சி செய்த சமயத்தில் அங்கேயும் நிலச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன.இந்தியாவில் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன, மேலும் சில பகுதிகளில் முன்னாள் நிலப்பிரபுக்கள் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை மற்றும் முதலாளித்துவ சிந்தனையுடன் கூடிய நில உடமையாளர்களாக உருவெடுத்தனர். அதன் விளைவாக சிறு விவசாயிகள் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தாங்கள் வசமிருந்த துண்டு துக்காணி நிலங்களைக் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாயின. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரையில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த சூழ்நிலையில் அங்குள்ள முதலாளிகள் ஸ்தாபன ரீதியாக தொழிலாளிகளை ஈவு இரக்கமின்றிச் சுரண்டியதன் மூலமாகவும், காலனி நாடுகளில் அடித்த கொள்ளைகளின் விளைவாகவும் ஏராளமான மூலதனத்தைத் திரட்டிட முடிந்தது. அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளில் தொழிற் புரட்சியானது வெற்றிகரமாக நடந்தேறிட முடிந்தது. மேலும் அதன் காரணமாக அவர்களால் அந்த நாடுகளில் உபரியாக விளங்கிய விவசாயம் பெருங்குடி மக்களையும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.ஆனால் இந்திய முதலாளிகளைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ நெருக்கடிகள் ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் ஏகாதிபத்திய மூலதனத்துடனும், உள்நாட்டிலிருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளுடனும் சமரசம் செய்து கொண்டனர். அதன் எதிரொலியாக இந்திய நாட்டில் மேற்கத்திய நாடுகளில் நடைபெற்றதைப் போல தொழிற்புரட்சியானது இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. அதன் காரணமாக இங்குள்ள விவசாயிகள் உபரியாக நேர்ந்தது. மேலும் உற்பத்தி முறைகள் யாவும் இயந்திரமயமாகிப் போன காரணத்தால் தொழில் நெருக்கடிகளின்போது வேலையில்லாத் திண்டாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. மேலும் நிலப் பிரபுத்துவச் சுரண்டல்கள், ஏகாதிபத்திய ரீதியிலான முதலாளித்துவ அமைப்பினுடைய நெறிமுறைகளற்ற சுரண்டல்கள் ஆகியவை யாவும் சேர்ந்து இந்தியக் கிராமப்புறங்களைத் தங்களது வேட்டைக்காடு களாக்கி விட்டன.இந்திய முதலாளி வர்க்கமானது நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளில் மட்டுமின்றி தத்துவார்த்த மற்றும் கலாச்சாரத் துறைகளிலும் வெட்கங்கெட்ட முறையில் சமரசம் செய்து கொண்டுள்ளது.எனவே நம்முடைய நாட்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்ததைப் போன்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே ஏற்படவில்லை. ஆதிக்க சக்திகள் அறிவியலையும் தொழிற் நுணுக்கங்களையும் தங்களுடைய லாப நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. சமுதாயத்தின் மேல் தட்டிலுள்ளவர்களும், ஆட்சியாளர்களும் சாதாரண மக்களுக்கு அறிவியல் பூர்வமான சிந்தனையோட்டங்கள் உருவாகாமல் மிகவும் எச்சரிக்கையுடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள். அதன் விளைவாக நாடெங்கிலும் பற்பல வகையான மூட நம்பிக்கைகள் பழமை வாத சிந்தனைகள் ஜோதிட மாய்மாலங்கள் பில்லி சூனியங்கள் தாயத்துக்களை அணிவித்தல் மந்திர, தந்திரங்கள் போன்ற நடவடிக்கைகள் கோடானு கோடி இந்திய மக்களைப் பழமைவாதச் சக்திக்குள் மூழ்கடித்த வண்ணமுள்ளன. மேலும் பெண்களுக்கு எதிரான வெங்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் உடன்கட்டையேறும் கொடுமைகள் இன்னும் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்திய கிராமங்கள் யாவுமே மிகவும் இருண்ட கண்டங்களாகவே விளங்குகின்றன. மேலும் ஆதிக்க சக்திகள் ‘பிறப்பால் சகல மனிதர்களும் சமமானவர்களே’ என்ற கருத்தை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றன. நாடெங்கிலும் தீண்டாமைக் கொடுமைகளும் சாதீய ரீதியிலான ஒடுக்குமுறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாக அரங்கேறி வருகின்றன. மதவாதிகள் மத உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு மக்களைத் தவறான பாதைகளில் வழிநடத்திச் செல்கின்றனர். மேலும் அவர்கள் மதத்தை அரசியலுடன் இணைத்துக் கொண்டு நாட்டு மக்களிடையே பிரிவினை உணர்வுகளைத் தூண்டி வருகிறார்கள். அடுத்து தொடர்ந்து மக்களுடைய ஜனநாயகப் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.நாட்டிலுள்ள 70 சதவீதம் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ள இந்திய கிராமப்புறங்கள் யாவும் வறுமைப் படுகுழியில் சிக்கித் தவித்த வண்ணம் சோகமயமாகக் காட்சியளிக்கின்றன.நம்முடைய கட்சியின் முன்னுள்ள உடனடிக் கடமைகள்நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தாக வேண்டும். அதுவே கட்சியின் முன்னுள்ள ஆகப்பெரிய கடமையாகும். நாம் மேற்படி கடமையைச் செய்யத் தவறுவோமானால் தொழிலாளி வர்க்கமானது தன்னையும் விடுவிக்க இயலாமற்போய்விடும், மேலும் அந்த வர்க்கம் இதுநாள் வரைக்கும் போராடிப் பெற்றுள்ள சகலவிதமான உரிமைகளையும் இழக்க நேரிடும். ஏனென்றால் இன்று உலக ரீதியாகத் தொழிலாளி வர்க்கத்தின் மீது பல்வேறு வகையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கமானது அந்நிய ஏகாதிபத்தியச் சுரண்டல்கள் மேலும் உள்நாட்டுப் பெரு முதலாளிகள் மற்றும் கந்து வட்டி வெங்கொடுமைகள் ஆகியவற்றின் விளைவாகச் சொல்லற்கரிய துன்ப துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். நம்முடைய கட்சிக்கு அத்தகைய மக்களை விடுவித்தாக வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளன. முதலாளி வர்க்கத் தினரால் செயல்படுத்திட இயலாமற் போய் விட்டன. சமூகக் கடமைகளை தொழிலாளி வர்க்கம் மற்றும் நமது கட்சியினால் மட்டுமே செயல்படுத்திட முடியும். நம் நாட்டிலுள்ள இடதுச hரிகளாகிய நாம் விவசாய பெருங்குடி மக்களைச் சரியான திசைவழிகளில் அணி திரட்டிடத் தவறிவிட்டோம். 1967ம் வருடத்தில் நம்முடைய கட்சியினால் வெளியிடப்பட்ட ‘விவசாய அரங்கில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை?, என்ற ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.“விவசாய அரங்கிலும் அதன் ஸ்தாபன அமைப்பின் பல்வேறு கட்டங்களிலும் நாம் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ளோம். அதுவே நம்முடைய மிகப்பெரியதோர் பலவீனமாகும்” இடதுசாரி சக்திகள் வலுவாக உள்ள பகுதிகளில் விவசாய இயக்கமும், விவசாயி களிடையிலான உணர்வுகளும் பெருமளவுக்குக் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளன. நம்முடைய கட்சியும் தொழிலாளி வர்க்கமும் நமது நாட்டு மக்கட் தொகையில் 70 சதவீதம் பேர்களாகவும் மிகவும் ஏழை எளியவர்களாகவும், பல்வேறு விதமான சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகி வருபவர்களாகவும் உள்ள நம்முடைய விவசாயிகளையெல்லாம் ஓரணியில் திரட்டிடத் தவறுவோமானால் நமது இயக்கமானது போதிய வலிமையைப் பெற்றிடவே முடியாது. மேலும் நம்மால் பிற்போக்குச் சக்திகளுடைய கொடூரமான தாக்குதல்களையெல்லாம் முறியடித்திடவும் முடியாது. நம்முடைய கட்சித் திட்டத்தின் 6வது பிரிவில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.“நம்முடைய நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவது தான் நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கமாகும். நாம் அந்த நோக்கத்தை நிறைவேற்றிடும் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள், தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த அடிப்படையிலான வளர்ச்சி, மேலும் அதனுடைய ஸ்தாபன அமைப்பு ஆகிய பல்வேறு அம்சங்களையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்பட்டிட வேண்டும். மேலும் தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே உறுதியான ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டு அவர்களது தலைமையில் நேர்மையான முறையில் நிலப்பிரபுத்துவ ஏகபோகம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு எதிராகப் பாடுபட்டு வருகிற சகல சக்திகளுடனும் ஓரணியாகத் திரண்டு நின்று நாட்டில் மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டியாக வேண்டும்”சுருங்கக் கூறின் மேற்கூறப்பட்ட கூட்டணியானது தொழிலாளி மற்றும் விவசாயிகளுடைய ஒற்றுமையின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டாக வேண்டும். இந்தியத் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதனுடைய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவர்களால் தான் அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கடமைகளை மிகவும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிட முடியும். அவர்கள் அவ்வாறு மேற்படி சீரிய பணிகளைத் திறம்பட ஆற்றிடுவார்கள் என்பது உறுதி.மூலம்: பீப்பிள்° டெமாக்ரசி, ஆங்கிலம்

சங்கர மட நிகழ்வுகள் : மடங்கள் மத நிறுவனங்கள் அவசியம் தானா?

சங்கர மட நிகழ்வுகள் : மடங்கள் மத நிறுவனங்கள் அவசியம் தானா?
என். குணசேகரன்

கடந்த பல மாதங்களாக சங்கராச்சாரியார்கள் கைது, நீதிமன்ற நடவடிக்கைகள், சங்கர மடம் குறித்து வெளிவரும் பல தகவல்கள் ஆகியன அனைத்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் தவறு செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு நீதிமன்றம்தான் பதில் அளிக்க வேண்டும்.ஆனால் அனைத்தையும் விட முக்கியமானது இதுதான்: மடம் அல்லது அமைப்பின் பெயரில் பல மத நிறுவனங்களை உண்டாக்கி, பொதுத் தளங்களில் மதப் பிரச்சாரம், வழிபாடு போன்ற செயல்பாடுகளில் இறங்குவது தேவையானதா? இன்றைய சூழலில் சிந்தித்து, விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய பிரச்சினை இது.மடம் உள்ளிட்ட பல மத அமைப்புக்கள் இதர நிறுவனங்கள் போன்று, தங்களது இஷ்டம்போல் நிர்வாகக் குழுக்களை அமைத்துக் கொள்வதும், வெளியில் தெரியாத வகையில் ஏராளமான நிதி வளங்களை உருவாக்கிக் கொள்வதும், அரசியலில் பல ரகசியத் தொடர்புகளை வைத்துக் கொண்டு ரகசிய பேரங்களில் ஈடுபடுவதும் மதம் எனும் போர்வையில் நடக்கிறது. இது சரியானதா?இப்படிப்பட்ட மடங்கள் / மத நிறுவனங்கள் மீது மக்கள் பக்தி கொள்வதும், நம்பிக்கை வைப்பதும் தேவையா என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.தனிநபர் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா? தனிநபரின் இதயக் கூட்டிற்குள் இருக்க வேண்டிய இந்த நம்பிக்கையை மட / மத நிறுவனங்கள் மீது கொண்டிருப்பது அவசியமில்லை என்பதே இக்கட்டுரை முன்வைக்கும் வாதம்.தற்போது கணிசமான பகுதி மக்களிடம் நிறுவனமயமாக்கப்பட்ட மதச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாலும், அதன் காரணமாக பல பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் நிகழ்கிறது. இதனால், மத நிறுவனங்களின் தேவை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.மத / மட நிறுவனங்கள் இன்றைய நிலைமதம் நிறுவனமயமாகக் கூடாது என்ற கருத்தை தமிழகம் முழுவதும் சென்று வலுவாக குரல் கொடுத்து வந்த மாமனிதர், மறைந்த குன்றக்குடி அடிகளார்.மத நம்பிக்கையை நிறுவனத்துக்குள் அடைத்து செயல்படுகிற போக்கு, வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கு தூபம் போடுவதை இருபதாண்டுகளுக்கு முன்பே உணர்த்தியவர் அந்தப் பெருந்தகை.வீக் ஆங்கிலப் பத்திரிக்கைக்காக கன்கெய்யா பெல்லாரி என்பவர் மடங்களில் நடந்துள்ள குற்றங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.ஏழு ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு அவர் எழுதியுள்ள விவரங்கள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளன.அவரது ஆய்வுப்படி உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் மடத்தின் சொத்துக்கள் பற்றி தொடர்ச்சியான சண்டைகள் நடந்து வருகின்றன.இந்த மோதல்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 150 சாதுக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகங்களால் இந்த வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.1993ஆம் ஆண்டு புட்டப்பர்த்தியிலுள்ள சத்ய சாயி பாபாவின் பிரஷாந்தி நிலையத்தில், சாயி பாபா பக்தர்கள் நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். சாய பாபாவின் உதவியாளர்கள் இரண்டு பேரையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர். கொல்லப் பட்டவர்கள் சாயி பாபாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுபற்றி மேலும் எந்த விபரங்களும் வெளிவரவில்லை. சம்பவத்தன்று பக்கத்து அறையில் இந்த சாயி பாபாவிடம் விசாரணை கூட நடத்தப்படவில்லை.சில வருடங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் வெளிவரும் மாலைப் பத்திரிக்கையின் ஆசிரியர் சத்திரபதி, ஹி°ஸார் நகரில் உள்ள ஒரு செல்வாக்கான மடத்தைப் பற்றி பல செய்திகளை ஆய்வு செய்து வெளியிட்டார். உயிரைப் பணயமாக வைத்து அந்த மடத்தில் பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகள், சில மர்ம மரணங்கள் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டார். உடனடியாக அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.சமீபத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் நடந்த பாலியல் குற்றங்களும் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளன. அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தேசிய பெண்கள் ஆணையத்திடம் ஆசிரமத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் மீது செய்த பாலியல் சித்திரவதைகளை விரிவாக எடுத்துரைத்தனர். ஒத்துழைக்க hதவர்களை தனி அறையில் போட்டு அடைத்து துன்புறுத்தி யுள்ளனர்.மாதா அமிர்தானந்தமாயி தேவி மடம், “அரவணைக்கும் தாய்” என்று விளம்பரம் வெளியிடுகிறார்கள். பி.பி.சி. கூட செய்திப்படம் வெளியிட்டது. இந்த மடம் செய்யும் அற்புதங்கள் போலித்தன மானவை என்றும் மடத்தில் நடக்கும் மர்மச் சாவுகள் பற்றியும் ஸ்ரீரீனி பட்டாபிராம் என்பவர் ஒரு நூல் வெளியிட்டிருந்தார். அவர் இன்று வேட்டையாடப்பட்டு வருகின்றார்.முப்பதாண்டுகளுக்கு முன்பு அவசர நிலை காலத்தில் மெய் வழிச்சாலை என்ற ஆசிரமத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பிரேமானந்தா மடம் குறித்து வழக்கு நடந்து அவர் சிறையில் இருக்கின்றார்.இவை அனைத்தும் மதம் நிறுவனமாவதால் தீமையே என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தை நிரூபிக்கின்றன.இதர மதங்களின் மீதான துவேஷம்இந்தியாவில் தழைத்து வளர்ந்த எல்லா மதங்களிலும் மனிதநேயம் கொண்ட, மதத் தலைவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் வேற்று மதங்களின் மீது பகைமை கொள்ளாமல், அந்த மதங்களின் கருத்துக்களையும், போற்றிப் பாராட்டி வாழ்ந்தனர்.விவேகானந்தர் இதற்கோர் உதாரணம். இந்தியா “இ°லாமிய உடலும், இந்து ஆன்மாவும் கொண்டதாக” இருக்க வேண்டு மென்றார்.ஆனால் இன்றைய மட / மதத் தலைவர்களில் இத்தகு பாங்கு கொண்டோர் எத்தனை பேர்? காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட மடாதிபதிகள், மதத் தலைவர்கள் பலர் வேற்று மதத்தினர் மீது அன்பு செலுத்துபவர்களாக நடந்து கொள்ளவில்லை.நேரடியாக தொகாடியாவைப் போன்று, அவர்கள் இதர மதங்களை தூற்றிப் பேசுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், கன்னிகா°திரிகள் பலவந்தப்படுத்தப்படுகிறபோது, இவர்கள் கண்டித்தது கிடையாது. பெண்களான சில மதத் தலைவர்கள் கூட இதர மதத்தைச் சார்ந்த பெண்களின் மீது கொடுமை இழைக்கப் படுகிறபோது, இது மதம் வலியுறுத்தும் மனித நேயத்திற்கு விரோதம் என்று சொன்னது கிடையாது.இதர மதத்தைத் சார்ந்த பலர் கொளுத்தப்படும் போது, ஏன், தங்களது மதத்தையே சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் உயிரோடு எரிக்கப்படும்போதும், மக்களால் உன்னத புருஷர்களாக, தெய்வ மரியாதையோடு நடத்தப்படுகிற இந்த மத / மட தலைவர்கள் (சங்கராச்சாரியார் உள்பட) வாய் திறந்ததில்லை. மாறாக, மோடிகளையும் தொகாடியாக்களையும் இவர்கள் தட்டிக் கொடுத்து வளர்த்து வருகின்றனர்.எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுமைகள் நிகழ்ந்தாலும் கண்டிக்கிற மனமில்லாமல் மவுனம் சாதிப்பவர்கள், லட்சக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வது பொருத்தமானது தானா? இந்நிலையில், பொது மக்கள் தங்களது மதத்தின் மீது மரியாதையையும் பக்தியும் வைத்துக் கொள்ளலாமே தவிர, இத்தகைய மத / மட தலைவர்கள் மீது பக்தியும் மரியாதையும் செலுத்துவது அறிவுக்கு உகந்ததல்ல.தீண்டாமை - பெண்ணடிமைத்தனமும், மடங்களும்மதம் நிறுவனமாவது கூடாது என்பதற்கோர் உதாரணம், இன்றைக்கு மடாதிபதிகள் பிரச்சாரம் செய்து வரும் தீண்டாமை, பெண்ணடி மைத்தனக் கருத்துக்கள்.ஜெயேந்திரரின் தலித் விரோத கருத்துக்கள் பிரசித்தி பெற்றவை. அவரது கைது நேரத்தில் கூட அவர் தீண்டாமை வழக்கத்தை கைவிடவில்லை. அவரது காரில் ஒரு போலீ°காரர் ஏற முனைந்தபோது, பிராம்மணர்கள் மட்டுமே வரலாம் என்று தடுத்தவர் அவர்.சிறையில் அவருக்கு சமைத்துப் போட ஒரு பிராமணர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். (இதனை என்.டி. டி.வி.யின் விவாதத்தின் போது அரசு வழக்கறிஞர் துளசியே கூறியுள்ளார்) மற்ற சாதியைச் சார்ந்தவர் சமைத்தால் சுத்தம் இருக்காது, தீட்டாகி விடும் என்ற ஜெயேந்திரரின் எண்ணமே இதற்கு காரணம். இது மனித மாண்புகளுக்கெல்லாம் விரோதமானது.இதையும் கூட சங் பரிவாரத்தினர் ஆதரித்துப் பேசுகின்றனர். ஜெயேந்திரரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதுதான் ஜனநாயகம் என்று அவர்கள் வாய் கூசாமல் பதில் அளிக்கின்றனர். உழைப்பாளி மக்கள் சமூகத்தை தரக்குறைவாக நடத்துவதுதான் ஜனநாயக உணர்வா?சங்கராச்சாரியார்கள் கடல் கடந்து பிராயணம் செய்திட மாட்டார்கள். நீண்ட கால மரபாக இருந்து வந்ததைக் கூட அவர்கள் மாற்றிக் கொண்டனர். 2001 செப்டம்பரில பூரி சங்கராச்சாரி அமெரிக்கா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பி வந்தார். ஆனால், சாதி, தீண்டாமை, பெண் விடுதலை பிரச்சினைகளில் அப்படியே பழமைக் கருத்துக்களை கைவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.இத்தகு பழமையான, பிற்போக்குத்தனமான நிறுவனங்கள் ஜனநாயக உணர்வு ஒவ்வொரு தனி மனிதரிலும் மேலோங்க வேண்டிய ஒரு சமூகத்தில் தேவைதானா? ஒரு செல்வாக்கு மிக்க நிறுவனத் தலைவர் கூறுகிறார் எனும் போது அது வேத வாக்காக பார்க்கப்படுகிற நிலை தற்போதும் நீடிக்கிறது. இதனால், தீண்டாமை, பெண்ணடிமைத் தனக் கருத்துக்களையும் இத்தகு மத நிறுவனத் தலைவர்கள் கூறுவது மத நம்பிக்கை கொண்டோரிடம் செல்வாக்கு செலுத்திடாதா? அது சமூகத்தை பின்னோக்கி கொண்டு செல்லும். எனவேதான் மத நிறுவனங்கள் தேவையில்லை என்ற நிலைபாட்டுக்கு மக்களைக் கொண்டு வர வேண்டும்.உண்மைகளை மறைக்கும் மதத்தலைவர்கள்வரலாற்றுப் பேராசிரியர் கே.என். பணிக்கர் மதத் தலைவர்கள் பற்றிய ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தாங்கள் தலைமை வகிப்பதாகக் கூறிக் கொள்ளும் மதத்தில் உள்ள உண்மையான கருத்துக்களை தங்களிடம் பக்தி செலுத்தும் பக்தர்களுக்கு போதிப்பதில்லை. தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் கருத்துக்களை மட்டுமே அவர்கள் போதிப்பதுண்டு.இதர மதங்களை நேசிக்க வேண்டும், சாதிக் கொடுமைகள் கூடாது என்று மதப் பாரம்பரியத்தில் வந்தவர்களில் பலரே போதித்துள்ளனர். உதாரணமாக தமிழகத்தில் இராமலிங்க வள்ளலார் கடவுள் பக்தி இல்லாத நாத்திகர் அல்லர். அவரும் மதப் பாரம்பரியத்தில் வந்து ஒரு பெரும் இயக்கம் கண்டவர். ஆனால் அவரது கருத்துக்களை மடாதிபதிகளோ, மதத் தலைவர்களோ தங்களது பக்தர்களுக்கு சொல்லித் தந்ததுண்டா?சமூக சேவையும், மத நிறுவனங்களும்மடங்களும் பல மத நிறுவனங்களும் கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் என பல சமூக சேவைப் பணிகளை செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சமூக சேவைகளை செய்து வரும் மத நிறுவனங்கள் கூடாது என்று விவாதிப்பது சரியா என பலர் கேட்கலாம்.உண்மையில் துவக்க காலத்தில் பல அமைப்புக்கள் கல்வி, மருத்துவம் என சேவைகளை மேற்கொண்டது உண்மையே. ஆனால் எல்லா மத நிறுவனங்களும் இத்தகு பணிகளை சிறப்பாக செய்தன எனக் கூற இயலாது. தென் மாவட்டங்களில் பணியாற்றிய கிருத்துவ மிஷனரிகள், விவேகானந்தரால் துவக்கப்பட்ட இந்து மத அமைப்புகள் என ஒன்றிரண்டையே குறிப்பிட முடியும்.வரலாற்றின் ஒரு கட்டத்தில் நிறுவனமயமாக்கும் சில முயற்சிகள் சாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தியது உண்மையே.இதற்கு உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் உருவான பசவர் இயக்கம், சீக்கிய மதத்தில் குருநானக் சிந்தனை இயக்கமாக உருவாகியது, கேரளத்தில் நாராயண குரு தலைமையில் உருவான இயக்கம், இவை அனைத்தும் பிராமணிய அதிகார பலத்தை தகர்ப்பதற்கு முயன்றவை. அந்தப் பணியில் அவை ஓரளவு வெற்றியும் பெற்றன.ஆனால், சமீப ஆண்டுகளாக, குறிப்பாக, வகுப்புவாத உணர்வுகள் தலை தூக்கிய சூழலில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக சேவைப் பணி மூலம் மக்களிடம் சென்று பணியாற்றுவது, அந்த நெருக்கத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் மதப் பிடிமான உணர்வை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.ஒரு உதாரணத்திற்கு சுனாமி பாதிக்கப்பட்ட பணிகளில் ஈடுபட்ட ஆர்.எ°.எ°. அமைப்பின் செயல்பாட்டை குறிப்பிடலாம். வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் நிவரணப் பணியாற்றி, அந்த நெருக்கத்தை வைத்து ஆங்காங்கே மக்களது அடிப்படை தேவைகளான கல்வி, தொழில் பாதுகாப்பு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி பணியாற்றி வருகின்றனர். இரவுப் பள்ளிகள் பலவற்றை நடத்துகின்றனர்.ஆனால் ஆர்.எ°.எ°. அமைப்புக்கள், மக்களை கூட்டம் கூட்டமாக திரட்டி பூஜைகள், சடங்குகள் என பலவற்றை நடத்தி, அவர்களது ஆன்மீகப் பற்றை ஏற்படுத்தி, மதவெறியை வளர்க்க முயல்கின்றனர்.எனவே, நியாயமாக வெளிப்படையாக செயல்படும் மதம் சாராத தொண்டு நிறுவனங்கள்தான் இந்த துறையில் செயல்படுவது நல்லது. அதிலும் இப்பணிகள் மக்கள் தங்கள் உரிமைகளை ஒன்றுபட்டு குரலெழுப்ப உதவிட வேண்டும்.மேலை நாடுகளிலும் மடங்களால் தீமையேஅமெரிக்காவில் நிறுவனமயமான கிறி°துவ மத மடலாயங்களில் நிறைய கேடுகள் உண்டு. ஏராளமான கத்தோலிக்க பாதிரியார்கள் சின்னஞ் சிறுவர்களோடு பாலியல் குற்றங்களை புரிந்துள்ள செய்திகள் எல்லாம் இன்றும் அம்பலத்திற்கு வந்த வண்ணமாய் இருக்கின்றன. பல்வேறு குற்றங்கள் மடாலயங்களில் நிகழ்ந்து வருகின்றன.சங் பரிவாரத்தினர் இந்து மத மடாதிபதி என்பதால்தான் இப்படி வேடையாடப்படுகிறார்கள் எனவும், இதுவே வெளிநாடாக இருந்தால், இப்படிப்பட்ட நிலை அந்த நாட்டு மதத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்காது என்கின்றனர். இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவிலேயே இந்து மதத் தலைவர்கள் வேட்டையாடப் படுவதாகவும் அவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.பல பாலியல் குற்றங்களில் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பலருக்கு ஆயுட் தண்டனை உள்பட பல தண்டனைகள் வழங்கப் பட்டுள்ளது. பலகுறைகள் உள்ள அமெரிக்க ஜனநாயகத்திலேயே இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.மடங்களில் குற்றங்கள் நிகழ்வதற்கு இந்து மதம் கிறித்துவ மதம் என்ற பேதமில்லை.மடங்கள் உருவான வரலாற்றுச் சூழல்ஏன் மதங்கள் நிறுவனமாயிற்று என்பதற்கு வரலாற்றில் விடை தேட வேண்டியுள்ளது.காஞ்சி மடாதிபதிகள் கைது செய்யப்பட்டவுடன் சங் பரிவாரங்கள் 2500 ஆண்டுக்கு முன்பு ஆதி சங்கரர் நிறுவிய காஞ்சி மடத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டு விட்டதாக ஆர்ப்பரித்து எழுந்தனர். பொய்யான தகவல்களை வரலாறு எனும் பெயரில் அவிழ்த்து விடத் தொடங்கினர்.உண்மையில் எல்லா வரலாற்றாசிரியர்களும் பொதுவாக ஆதி சங்கரரது காலம் என்று ஏற்றுக் கொண்டது, கி.பி. 8ஆம் நூற்றாண்டுதான்.அவர் எப்படி 2500 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்தை நிறுவியிருக்க முடியும்? ஆதிசங்கரர் தனது அத்வைத கருத்துக்களை பரப்பிட திசைக்கு ஒரு மடம் என்ற வகையில் நான்கு மடங்களே நிறுவினர் என்பதே உண்மை வரலாறு.கிழக்கில் ஜகன்னாத் மடம், மேற்கில் துவாரகா மடம், தெற்கே சிருங்கேரி மடம், வடக்கே பத்ரி மடம் ஆகிய நான்குதான் ஆதி சங்கரர் நிறுவியவை.மதம், நிறுவனம் என்ற அடிப்படையில் செயல்படுவது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும். வேத மரபுச் சிந்தனைக்குப் பிறகு, சமணம், பௌத்தம், பல்லவர் கால வைதிகச் சூழல், பிறகு எழுந்த பக்தி இயக்கம் என இக்காலகட்டங்கள் முழுவதும் மத நிறுவன அமைப்புக்கள் இருந்து வந்துள்ளன.தமிழகத்தில் பல்லவர் ஆட்சி முடிந்த பிறகு கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி துவங்கியது.சோழர்களின் ஆட்சிக் காலத்தில்தான் நில உரிமைகள், நிர்வாகம் பெருமளவு மைய அரசின் கீழ் வந்தது. நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார அமைப்பு முறை பலம் பெற்றது. பிரம்மதேயம் என்று சொல்லி ஏராளமான நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.ஊர், சபை, நகரம், நாடு, குறுநிலத் தலைவர் பகுதி, மைய அரசு என பல மட்டங்களில் அதிகார மையங்கள் அரசியல் தளங்களாக பலம் பெற்றன. சோழ அரசு தனது ஆட்சியின் கீழ் நிலப்பகுதி முழுவதையும் நேரடியாக ஆட்சி செய்த அரசு என வரலாற்றாசிரியர் நீலகண்ட சா°திரி குறிப்பிடுகிறார்.ஊர், நகரம் உள்ளிட்ட அனைத்து அதிகார மையங்களிலும், நிலபுடைமை நிர்வாகம் பிராமணர்களிடம் இருந்தது. அத்துடன் சித்தாந்த ரீதியில் அரசு அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் நியாயம் கற்பிக்கும் பணி பிராம்மணர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. நில நிர்வாகம், மத சிந்தனை இரண்டிலும் பிராம்மணிய ஆதிக்கம் செலுத்தும் நிலை வலுப்பெற்றது.முதலாம் ராசராச சோழன் ஆட்சிக்காலம் கி.பி. 985லிருந்து கி.பி. 1012 வரை ஆகும். முன்பிருந்தே மடங்கள் திருவாடுதுறை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ளன.பெரும் பள்ளப் புலியூர், மேலைச்சேரி பதஞ்சலி தேவர் மடம், கீழையூர் மடம், திருவானைக்கா நடுவில் மடம், திருச்சந்தி முந்நூற்று மடம், திருவாவடுதுறை மடம் ஆகியன சிறப்பு பெற்று விளங்கியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.மடங்களும், கோவில்களும் சேர்ந்து பிராமணியத்தின மேலாதிக்கத்தை நிலைநாட்டும் கருவிகளாகவும் பயன்பட்டு வந்துள்ளன. சாதிய ஒடுக்குமுறையையும், இந்த மடங்களும், நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; நால் வருண சித்தாந்தத்தை வாழ்க்கை நெறியாக நியாயப்படுத்திடும் மையங்களாகவும் இவை இருந்து வந்துள்ளன.முந்தைய காலங்களில் தமிழ் மொழி செல்வாக்கு பெற்றிருந்த நிலை மாறியது. வடமொழி தெரிந்த வேதம் ஓதுவோர் நில ஆதிக்கத்தை தங்களிடம் வைத்துக் கொண்டதால் கிராமங்களின் சித்தாந்தத் தலைமையாக மாறினர்.அன்றைய மடங்களால் விளைந்த ஒரு நன்மை, பழந்தமிழ் இலக்கியங்களை அவைதான் பாதுகாத்து பத்திரமாக வைத்திருந்தன. திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுர ஆதினம் உள்ளிட்ட சைவ மடங்களும், அவற்றின் கிளை மடங்களும் சைவ நூல்களை பாதுகாத்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் நாடு அடிமைப்பட்டு வந்த நிலையிலும் இந்த மடங்கள்தான் ஏட்டுச் சுவடிகளாக இருந்த இந்த நூல்களை பாதுகாத்தன. சிவஞான யோகிகள், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே. சுவாமிநாதய்யர் போன்றோர் இம்மடங்களில் இருந்து தமிழ் வளர்க்கும் பணிகளை ஆற்றினர்.மன்னர்கள் தங்களது அதிகாரத்திற்கு உழைக்கும் மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஒழுக்க நெறிகள், தெய்வீக கட்டுப்பாடு போன்ற பண்பாட்டை அவர்கள் மத்தியில் வளர்த்தனர். இதற்கு பிராம்மணர்கள் பயன்பட்டனர்.பிராம்மணர்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களது மேலாதிக்கத்தை பெருளாதாரம், சித்தாந்தம் ஆகிய இரண்டு தளங்களிலும் நிலை நிறுத்திக் கொண்டனர்.இந்த மேலாதிக்கத்திற்கு உழைக்கும் மக்களான பிற்பட்ட சாதியனரிடமிருந்து எங்கெல்லாம் எதிர்ப்பு கிளம்பியதோ, அங்கெல்லாம் மன்னரின் அதிகாரமும் படைகளும் ‘அமைதி’யை ஏற்படுத்தியது. தங்களது நிலங்களை பிராமணர்களிடம் பறிகொடுத்தவர்கள் மன்னரின் அடக்குமுறை படைகளுக்கும், பிராமணர்களை எதிர்ப்பது தெய்வக் குற்றம் என்று சொல்லப்பட்ட நெறிக்கும் பயந்து ஒதுங்கி வாழ்ந்தனர்.சோழர் காலத்தில் இருந்த இந்த ஏற்பாடு பிற மன்னர்களையும் கவர்ந்திருக்கிறது. தருமபுரி மற்றும் கொங்கு நாட்டுப் பகுதிகளில் இருந்த குறுநில மன்னர்கள் தங்களது கிராம நிர்வாகத்திற்கும் இதே முறையை பின்பற்றினர்.கிராமங்களில் ஒழுக்கமும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி ‘நெறிப்படுத்த’ பல பிராமணக் குடும்பங்களை சோழ நாட்டிலிருந்து அழைத்துச் சென்று கொங்கு நாட்டுப் பகுதிகளில் குடியேற்றினர். இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களிடம் நிலங்களைக் கொடுத்து நிர்வாகப் பொறுப்புக்களையும் ஒப்படைத்தனர். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் இது அதிகம் நிகழ்ந்துள்ளது.ஆக, அன்று நிலங்கள், சொத்துக்கள், செல்வம் அனைத்தும் பெருமளவில் கோயில்களிடமும், பிராமணர்களிடமும் இருந்தன. வேதங்கள், சா°திரங்கள் அனைத்தையும் அடுத்தடுத்த தலை முறைக்கு பயிற்றுவிக்க மடங்களிலும், கோயில்களிலும் பாட சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.மத நிறுவனங்கள் : ஐரோப்பிய வரலாற்றுச் சூழல்மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நீண்டகாலமாக கிறித்துவ தேவாலயத்தின் ஆதிக்கம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும், சமூகத்தின் தலைமையாக இருந்து ஆதிக்கம் செலுத்திய தேவாலயத்துக்கும் பெரும் போராட்டம் நடந்தது. ‘நீ பெரியவனா, நான் பெரியவனா’ எனும் பாணியில் ஒரு பெரிய அதிகாரப் போராட்டமாக இது நடந்தது.‘ஆன்மீகம் மட்டுமல்ல; இந்த உலக வாழ்க்கையில் எல்லா அதிகாரங்களும் எனக்கே சொந்தம்’ என்றது தேவாலயத் தலைமை.ஆன்மீகம் தவிர வாழ்க்கையின் இதர அம்சங்களில் அரசுதான் வழிநடத்தி அதிகாரம் செலுத்த முடியும்’ என்றனர் அரசு தரப்பினர்.ரோமானியப் பேரரசர் சார்ல மாக்கென என்பவருக்கும் போப்பாண்டவருக்கும் நடந்த மோதலுக்கு இந்த அதிகாரப் போட்டியே காரணம். இது கி.பி. 9ஆம் நூற்றாண்டில் நடந்தது.இத்தகைய மோதல்களின் முடிவாகத்தான் மதத்தின் பிடியிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டது. சுயேச்சையான அதிகார மையமாக, ஆன்மீகம் தவிர இதர நிர்வாகப் பொறுப்புகள் முழுவதும் அரசுக்கே என்ற நிலை ஏற்பட்டது. இதுவே மதச்சார்பின்மை கோட்பாடாக உருவெடுத்தது.முன்னதாக, கிறி°துவ மதத்திற்குள்ளும், பல மாறுதல்கள் நடந்தன. சமூகத்திலும் மதச்சார்பின்மை உணர்வுகள் அதிகரித்தன. ஆன்மீகத்திற்கு வெளியே உள்ள துறைகளில் மதம் அவசியமில்லை என்ற அணுகுமுறை நிலை பெற்றது. சீர்திருத்தவாதம், மறுமலர்ச்சி என பல போக்குகள் இவற்றை ஏற்படுத்தின.இந்த நிகழ்வுப் போக்கை வைத்து சிலர் கிறி°துவ மதம் பிற மதங்களை விட முற்போக்கான மதமாக இருப்பதால் மதச்சார்பின்மைக் கொள்கை அங்கு வேரூன்றியது என்கின்றனர். இது தவறு. இந்த மாற்றங்களுக்குக் காரணம் கிறி°துவ மதம் மட்டுமல்ல; மிக முக்கியமான காரணம், ஐரோப்பாவில் வளர்ந்து வந்த முதலாளித்துவம்தான். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, நவீனமயமாக்கலும், முதலாளித்துவமும் வேகத்தோடு சமூகத்தில் ஆதிக்கம் பெற்றது தான் காரணம்.தேவாலயத்தின் பிடி சமூகத்திலும் அரசு அதிகாரத்திலும் இருந்திருந்தால் முதலாளித்துவம் வளர வாய்ப்பிருந்திருக்காது.சமூகவியலாளர் அச்சின் விநாயக் இதை குறிப்பிடுகிறார்.“முதலாளித்துவ நவீனமயமாக்கல்தான் மதச்சார்பின்மைமயாக் கலுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக திகழ்ந்ததே தவிர, கிறித்துவ மதம் அல்ல” என்கிறார் அவர்.மேலும் முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடுகிற போது “எங்கெல்லாம் முதலாளித்துவம் வளர்ச்சி பெறுகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் மதச்சார்பின்மைமயமாக்கல் நிகழ்கிறது” என்கிறார் அவர். இங்கு, மதச்சார்பின்மைமயம் என்று குறிப்பிடுவது சமூகத்தில் மதத்தின் செல்வாக்கு குறைந்து, தனிநபர் உள்ளத்தில் மட்டும் மதம் என்ற நிலையை அவர் குறிப்பிடுகிறார்.ஐரோப்பாவில் நடந்த இந்த நிகழ்வுக்கும் இந்தியாவில் நிகழ்ந்ததற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.இங்கு முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை அழித்துவிட்டு வளரவில்லை. மாறாக, அதோடு சமரசம் செய்து கொண்டு வளர்ந்துள்ளது.நமது சமூகத்தில் மதச்சார்பின்மை உணர்வுகள் அதிக அளவில் வேரூன்றாததற்கு இதுவே அடிப்படை காரணம்.உலகமயம் என்ற கட்டத்திற்கு இந்திய முதலாளித்துவம் வந்த பிறகும் கூட நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் ஒழிக்கப்படவில்லை. சமூகம் மதச்சார்பின்மைமயமாகி பகுத்தறிவுப் பாதையில் நடைபோடாமல் பின்தங்கி இருப்பது, இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு வாய்ப்பாக உள்ளது.எனவே, முற்போக்கு சக்திகளின் கடமை, முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராகவும், கிராமங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும் மக்களைத் திரட்டிட வேண்டும். இதைச் செய்கிறபோதே மக்களின் உணர்வுகளில் ‘மதம் தனிநபரின் நம்பிக்கையாக மட்டும் இருக்க வேண்டும் என்றும், அது சமூக வாழ்வில் தலையிடக் கூடாது’ என்ற கருத்தினை பதியவைக்க முயற்சிக்க வேண்டும். மதம் நிறுவனமயமாவதைத் தவிர்க்க குரலெழுப்புவது தேவையாகிறது. இந்து மதம் மட்டுமல்ல, இதர அனைத்து மதங்களிலும் நிறுவனமயமாகும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.மதச்சார்பின்மைமயமாக்கலும் - மத அடையாளமும்மதச்சார்பின்மை என்பது அரசுக்கும் மக்களுக்கும் உள்ள விவகாரம் மட்டும் தானா? தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையே மதச்சார் பின்மை கொள்கையின் பங்கு என்ன?அதாவது, ஒரு தனிநபருக்கு மதச்சார்பின்மை நெறி இல்லையா? அப்படியானால் அவர் கடைப்பிடிக்க வேண்டிய மதச்சார்பின்மை நெறி என்னவாக இருக்க முடியும்? மதச்சார்பின்மை நெறி சார்ந்த வாழ்க்கைக்கு தனிநபரை மனமுவந்து ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி? இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது.சுதந்திரப் போராட்டத்தில் 1920-30ஆம் ஆண்டுகளின் போது, மக்கள் மத்தியில் மேலோங்கிய உணர்வுகள் எவை? மத உணர்வுகளா? இல்லை. மத உணர்வுகளை விட தேசிய உணர்வும், இந்தியன் என்கிற உணர்வுகளும்தான் தலை தூக்கி இருந்தன. இந்து மு°லீம் என்று மதத்தால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கு அந்த கட்டத்தில் குறைந்து இருந்தது.இதே போன்று பல கட்டங்களில் நமது மக்களின் வாழ்வில் மத அடையாளம் ஓரளவு முக்கியத்துவம் இழந்திருக்கிறது என்று அச்சின் விநாயக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த இருபது ஆண்டுகளாக தனிநபர் வாழ்வில் உலகமயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பிரிவினரும் பல்வேறு வகையான தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி இந்தியாவில் ஏகபோக கூட்டத்தினரை பெரும் செல்வதந்தர்களாக மாற்றியுள்ளது. வலுவான நடுத்தர வர்க்கமும் உருவாகியுள்ளது.பெரிய தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில் அதிக ஊதியத்தோடு பணியாற்றும் ஒரு இளைஞன் தான் சார்ந்த மதம், சாதியை ஒட்டிய மணப்பெண்ணை நாடுகிற நிலை உள்ளது. தனது தொடர்புகளை வெளிப்படுத்தி பொருளாதாரத் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள அவன் தனது திருமணத்தையும் பயன்படுத்துகிறான். இதிலும் கூட பெற்றோர்கள் ஊர் ஊராகத் திரிந்து தங்களது மதம், சாதிக்கேற்ற மணப் பெண்ணைத் தேடி அலையும் சிரமமும் தற்போது இல்லை.மணமகன் மணப்பெண்ணை சேர்த்து வைக்கும் நூற்றுக்கணக்காக இணைய தளங்கள் தற்போது உள்ளன. இதில் விரைவாகவும், மிகச் சுலபமாகவும் மணப் பெண், மணமகன் குடும்பத்தார் ஜாதகம் வரதட்சணை உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் பேசி முடித்து விட்டு திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர்.உலகமயம், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்தும் மதத்தின் பிடிப்பு வலுப்பெற உதவுகிற விநோதத்தை காணமுடிகிறது. இந்நிலையில் முற்போக்காளர்கள் செய்ய வேண்டியதென்ன?முற்போக்காளர்களின் கடமைகள்சமூக வாழ்க்கையில் மதம் பல செயல்பாடுகளை கொண்டுள்ளது. கடவுள் நம்பிக்கை, சித்தாந்தம், சடங்கு மற்றும் பல வழிபாட்டு முறைகள், மத நிறுவனங்கள் என பல தளங்களில் மதம் தனத செல்வாக்கை மனிதர்களிடம் செலுத்துகிறது. வரலாற்றின் பல கட்டங்களில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிற போது, மத்தின் செயல்பாடுகளிலும் அதன் தாக்க்ம இருந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்திற்கு மதத்தின் செயல்பாடுகள் உறுதுணையாக இருந்துள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் முற்போக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழல்களும் ஏற்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் அந்நியரின் அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே விவசாயிகளின் எழுச்சி நடைபெற்றபோது, மத நம்பிக்கையும், மதக்கருத்துக்களும் விவசாயிகள் போராடுவதற்கு உத்வேகம் அளித்தன.நிறுவனம் என்ற செயல்பாட்டை எடுத்துக் கொண்டாலும், இக்கட்டுரையில் சொல்லப்பட்டது போன்று பிராமணீயத்தை எதிர்த்த இயக்கங்களுக்கும் நிறுவனங்கள் உதவியுள்ளன.எனவே, பல தளங்களில் மதத்தின் செயல்பாடு சிக்கலான தன்மை கொண்டது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு தளத்திலும் மதத்தின் செயல்பாட்டை கூர்மையாக ஆராய்ந்து தக்க அணுகுமுறை கடைபிடிக்க வேண்டும்.இன்று, மதநம்பிக்கையாளர்களிடமே மடங்கள் மற்றும் மத நிறுவனங்களுக்கு எதிரான உணர்வுகள் எழுகிற நிலையில் அதனை முற்போக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களோடு, உள்ளூர் மட்டத்தில் உரையாடல், விவாதம் மூலமாக இதனைச் செய்திட வேண்டும்.தனிநபர் உணர்வில் மத அடையாள உணர்வு ஆதிக்கம் செலுத்தும் நிலையிருந்தால் வர்க்க ஒற்றுமை சாத்தியமில்லை. சமூகத்திலும், தனிநபர் உணர்வு மட்டத்திலும், மத அடையாள உணர்வுகளை குறைத்து, தொழிலாளி, விவசாயி, உரிமைக்கான போராளி போன்ற உணர்வுகள் தழைக்க வேண்டும்.கவி ரவீந்திரநாத் தாகூரின் கீழ்க்கண்ட வரிகள் இன்று மிகவும் பொருத்தமுடையதாக விளங்குகின்றன.“இருளூட்டப்பட்டுள்ள இந்த மண்ணில் அறிவொளியை பாய்ச்ச வேண்டுமெனில் மத நம்பிக்கையைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள சிறைச் சுவர்களை உனது இடிமுழக்கத்தால் தகர்த்தெறி”இங்கு தாகூர் மதத்தை இந்தச் சிறைச்சாலைகள் என குறிப்பிடுவது இன்றைய நிலையில் மதத்தின் பெயரால் மூடத்தனத்தை பரப்ப ஒற்றுமையை குலைக்கும் வகுப்புவாத இயக்கங்களும், வகுப்புவாத நிறுவனங்களும் தான். இந்த வரிசையில் தற்போது மடங்களும் வந்து சேர்ந்துள்ளன என்பதே உண்மை.சமூக மாற்றத்திற்காக, சோசலிசத்திற்காகப் போராடும் மார்க்சி°ட்டுகளுக்கு சமூகத்தை மதச்சார்பின்மைமயமாக்குவதில் முக்கிய பங்கு உள்ளது.சோசலிச சமுதாயம் அமைந்திட மக்களின் சிந்தனையில் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும், முற்போக்கு சிந்தனைகளும் குடிகொள்ள வேண்டும். இதற்கான தத்துவப் போராட்டத்தை கம்யூனி°ட்டுகள் நடத்திட வேண்டும். இந்தப் போராட்டத்தை நடந்திட எது மிகவும் தேவையானது? மதம் மற்றும் ஆன்மீக சிந்தனைகள் சமூகத்தின் பொதுத் தளத்திலிருந்து விலகி தனிநபரின் சிந்தனை தளத்திற்கு உரியதாக மட்டும் என்கிற நிலையை ஏற்படுத்துவதுதான். இது தானாக நடந்திடாது. மக்களிடம் உள்ளூர் மட்டத்தில் நெருங்கிப் பணியாற்றுவதன் மூலம் தான் இதனை செய்திட இயலும்.சங்கர மட நிகழ்வுகள் மற்றும் இதர மத நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் இப்பணியை தீவிரப்படுத்த நல்வாய்ப்பை நல்கியுள்ளன. இதனை முற்போக்காளர்களும், கம்யூனி°ட்டுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மார்க்சி°ட் கட்சியின் 18வது நகல் அரசியல் தீர்மானம் மதச்சார் பற்ற ஜனநாயக பண்பாட்டை வளர்த்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.“பண்பாட்டு மதிப்பீடுகளை சீர்குலைக்க முயலும் வகுப்புவாத சித்தாந்தங்களை முறியடிக்க இடையறாத போராட்டத்தை நடத்திட வேண்டும். ஜனநாயக மதச்சார்பற்ற பண்பாட்டை வளர்த்தெடுக்க இது தேவையானது.”சமூகத்தின் அடி மட்டத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் சமூகத்தில் மக்களோடு தொடர்புகளை வலுவாக்கினால்தான் ஜனநாயக உணர்வுகளும் தழைத்திடும். அதே நேரத்தில் மத வழிபாடு, சடங்குகள் அனைத்தும் தனிப்பட்ட விவகாரமாக கருதும் உணர்வு வளரும். தங்களது மத உணர்வுகளை வெளிப்படுத்த மத நிறுவனங்களை மக்கள் நாடிடும் போக்கு இதன் மூலம்தான் தவிர்க்க முடியும்.